#சாம்பார்மிளகாய்தூள் : #சாம்பார்பொடி நமது தமிழ் சமையலின் முக்கிய அங்கமாகும். கடைகளில் விதவிதமான சாம்பார் பொடிகள் கிடைக்கின்றன. இருந்தாலும் நாமே எல்லா சாமான்களையும் அளவோடு சேர்த்து அரைத்தால் சாம்பாரின் சுவையும் மனமும் மிகவும் அருமையாக இருக்கும். முதலில் என்னுடைய அம்மாதான் சாம்பார் மிளகாய் தூளை தேவை படும் போது அரைத்து தந்து கொண்டிருந்தார்கள். பிறகு நானே அரைக்க அம்மாவிடம் அளவு கேட்டு அரைக்க ஆரம்பித்து விட்டேன். இப்போது அடுத்த சக்கரம் ஆரம்பித்து விட்டது. என் மகளுக்கு நான் அரைத்து வெளி நாட்டிற்கு அனுப்பி கொண்டிருக்கிறேன்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள அளவு அப்படியே என் அம்மா எனக்கு சொன்னது.
தேவையான பொருட்கள் :
சிகப்பு மிளகாய் : 200 gram
கொத்தமல்லி விதை ( தனியா ) : 4 Cups குவித்து
சீரகம் : 25 கிராம்
மிளகு : 25 கிராம்
வெந்தயம் : 25 கிராம்
துவரம் பருப்பு : 1 கப்
கடலை பருப்பு : 1/2 கப்
பச்சரிசி : 1/4 கப்
விரளி மஞ்சள் : 2 துண்டு ( கிடைத்தால் )
செய்முறை :
எல்லாவற்றையும் நன்கு வெய்யிலில் காய வைக்கவும்.
காய வைக்க வெய்யில் படும் இடம் இல்லாவிடில் வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் ஈரப்பதம் போகும் வரை வறுத்து எடுக்கவும்.
வறுத்த பிறகு ஆற விட்டு மாவு அரைக்கும் இயந்திரத்தில் கொடுத்து நைசாக அரைத்து கொள்ளவும்.
நன்றாக ஆறிய பின் காற்றுபுகா பாட்டிலில் சேமித்து வைக்கவும்.
இந்த அளவு 3 அல்லது 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு 4 முதல் 6 மாதங்களுக்கு போதுமானது.
சாம்பார் பொடி சாம்பார் செய்வதற்கு மட்டுமல்லாமல் கூட்டு, துவட்டல், கார கறி செய்வதற்கும் பயன் படுத்தலாம்.
மேலும் சில அத்தியாவசியமான பொடி வகைகள்
|
|
|
||||||
|
|
Madam, what’s the amount of coriander seeds in grams. If it’s 1kg will it be too much as red chili is only 200 grams. Kindly advice. Thanks.
ReplyDeleteAlso the ‘tumbler’ measurement are confusing. Please can you tell us the amount in grams. Thanks again.
ReplyDelete