Search This Blog

Showing posts with label கத்தரிக்காய். Show all posts
Showing posts with label கத்தரிக்காய். Show all posts

Wednesday, April 20, 2016

Katharikkai-Chutney

#கத்தரிக்காய்சட்னி : #கத்தரிக்காய் கொண்டு சாம்பார் செய்வது போன்றே இந்த சட்னியும் ஆகும். ஆனால் பருப்பு இல்லாமல் செய்யப்படுகிறது. குக்கரில் கத்தரிக்காயை வேக வைத்து நன்கு மசித்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கறுவேப்பிலை ஆகியவற்றை வதக்கவும். மசித்த கத்தரிக்காயுடன் சாம்பார் பொடி, மல்லி பொடி, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கிய பொருட்களை   சேர்க்க வேண்டும். அதில் புளி கரைசல் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட்டு மூடி வெயிட் பொருத்தி ஒரு விசில் வரும் வரை வேக விடவும். ஆவி அடங்கியவுடன் குக்கரை திறந்து எடுத்தால் கத்தரிக்காய் சட்னி தயார்.
இதே போல பீர்கங்காய் மற்றும் கருணை கிழங்கு உபயோகித்தும் செய்யலாம்.


katharikkai chutney


தேவையானவை :
2 பெரிய அளவு கத்தரிக்காய்
நெல்லிக்காய் அளவு புளி
1வெங்காயம், பொடியாக நறுக்கவும்
10 - 12சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கவும்
2 - 3பச்சை மிளகாய்
10 - 12கறுவேப்பிலை
1/2 Tspகடுகு
1/4 Tspபெருங்காய தூள்
1 Tspகடலை எண்ணெய்
1 1/2 Tspஉப்பு [ adjust ]
2 pinchesமஞ்சத்தூள்
2 Tspசாம்பார் பொடி
1 Tspஅரைத்துவிட்ட குழம்பு தூள்
1 Tspகொத்தமல்லித்தூள்

சிறிது கொத்தமல்லி தழை அலங்கரிக்க

செய்முறை :
கத்தரிக்காயை நன்கு கழுவிய பின்னர் துண்டுகளாக வெட்டி குக்கரில் போடவும்.
அரை கப் தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை மஞ்சத்தூள் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
வெயிட்டை சிறிது சிறிதாக தூக்கியோ அல்லது தண்ணீர் குழாயின் அடியில் வைத்து தண்ணீரை ஊற்றியோ உடனே ஆவியை வெளியேற்றவும்.
மசிக்கும் கரண்டி கொண்டு நன்கு மசித்து விடவும்.
நன்கு மசித்த பின்னர் மஞ்சத்தூள், சாம்பார் பொடிஅரைத்துவிட்ட குழம்பு தூள், மற்றும் கொத்தமல்லித்தூள் சேர்க்கவும்.
அடுப்பை பற்ற வைத்து குக்கரை மிதமான தீயில் க்சூடாக்கவும்.

மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விட்ட பின்னர் பெருங்காயத்தூள், கருவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயம் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிது வாசனை வரும் வரை வதக்கினால் போதும்.
அடுப்பை அணைத்து விட்டு வதக்கியவற்றை கொதிக்கும் கத்தரிக்காய் கலவையில் கொட்டவும்.

புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி குக்கரில் சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
குக்கரை மூடி வெயிட் பொருத்தி தீயை அதிகப்படுத்தி இரண்டு விசில் வரும் வரை வைத்திருக்கவும்.
ஆவி அடங்கியபின் திறந்து பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சிறிது கறுவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
இட்லி மற்றும் தோசை உடன் தொட்டுக்க வும் நன்றாக இருக்கும்.

katharikkai chutney




மேலும் சில உணவு குறிப்புகள் முயற்சி செய்து பார்த்து ருசிக்க
வெங்காய சாம்பார்
வெங்காய சாம்பார்
தக்காளி சட்னி
தக்காளி சட்னி
வாழைப்பூ குழம்பு
வாழைப்பூ குழம்பு
வெண்டைக்காய் தக்காளி கறி
வெண்டைக்காய் தக்காளி கறி
அவியல்
அவியல்


இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ட்விட்டர், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

Monday, June 9, 2014

Katharikkai Sambar

#கத்தரிக்காய்சாம்பார் : #இட்லிசாம்பார் வகைகளில் #கத்தரிக்காய் #சாம்பார் மிக பிரசித்திபெற்றது. மதிய உணவிற்காக வைக்கப்படும் சாம்பார் பொதுவாக துவரம் பருப்பு உபயோகித்து செய்யப்படும். ஆனால் இட்லிசாம்பாருக்கு பயத்தம் பருப்பு உபயோகப் படுத்தப் படுகிறது. கத்தரிக்காய் இந்த சாம்பாருக்கு தனி மணத்தை கொடுக்கிறது. இனி எவ்வாறு செய்வது என காண்போம்.

கத்தரிக்காய் சாம்பார்


தேவையான பொருட்கள் :


3 Tbsp                                                 பயத்தம் பருப்பு வேகவைத்தது
கோலிகுண்டு அளவு                 புளி, வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்கவும்.
2                                                          கத்தரிக்காய்
1                                                          வெங்காயம், அரிந்து வைக்கவும்
10                                                        சின்ன வெங்காயம், அரிந்து வைக்கவும்.
3                                                          பச்சை மிளகாய், நீள வாக்கில் கீறி வைக்கவும்
12                                                        கறுவேப்பிலை
1                                                          தக்காளி, பொடியாக நறுக்கிகொள்ளவும்.

சேர்க்க வேண்டிய பொடிகள் :
2 Tsp                                                  சாம்பார் பொடி
1 Tsp                                                  மல்லி தூள்
1 Tsp                                                  அரைத்து விட்ட சாம்பார் தூள் 
2 சிட்டிகை                                    மஞ்சத்தூள்
1/4 Tsp                                               சீரகத்தூள்
1 1/2 Tsp                                            உப்பு

தாளிக்க :
1 Tsp                                                  கடுகு
2 Tsp                                                  எண்ணெய்
1/4 Tsp                                               பெருங்காய தூள்

கொத்தமல்லி தழை அலங்கரிக்க

செய்முறை :
அடுப்பில் குக்கரை வைத்து வேகவைத்துள்ள பருப்பை போடவும்.
கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொடிகளையும் சேர்த்து 1 கப் தண்ணீர் விட்டு கலக்கி மிதமான தீயில் கொதிக்க விடவும்.

மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

முதலில் கடுகை வெடிக்க விடவும். வெடித்ததும் பெருங்காய தூளை சேர்த்து கீறி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து சிறிது வதக்கிய பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
சற்றே நிறம் மாறினால் போதும்.

1 சிட்டிகை மஞ்சத்தூள் சேர்த்த பின்னர் வெட்டிவைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.


கடைசியாக தக்காளி சேர்த்து சில மணித்துளிகள் வதக்கிய பின்னர் கொதித்து கொண்டிருக்கும் சாம்பாரில் கொட்டவும்.
புளியை 1 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொதிக்கும் சாம்பாரில் விடவும்.


குக்கரை மூடி வெயிட் பொருத்தவும்.
ஒரு விசில் வரும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.
விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

ஆவி அடங்கியவுடன் திறந்து பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.

கத்தரிக்காய் சாம்பார்

ஒரு குழிவான தட்டில் அல்லது கிண்ணத்தில் இட்லியை வைத்து மேலே 2 கரண்டி சாம்பாரை ஊற்றி 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு சுவைத்தால்.... ம்ம்...ம்.... சுவையே அலாதிதான்!!






Sunday, April 6, 2014

Katharikai Kara Curry

கத்தரிக்காய் கார கறி : இந்த கறியை படாபட் கறி என்றும் கூறலாம். ஏனெனில் மிக விரைவில் செய்து விடலாம். கத்தரிக்காய் மிகவும் பிஞ்சாக இருப்பின் மிக இலகுவாக செய்து விடலாம்.

கத்தரிக்காய் கார கறி


தேவையான பொருட்கள் :
3 அ 4  நடுத்தரம்                                          கத்தரிக்காய், ஒரே அளவு துண்டுகளாக வெட்டவும்
1 பெரிய அளவு                                            வெங்காயம், நறுக்கி வைக்கவும்
1 Tbsp                                                                குடை மிளகாய் பொடியாக நறுக்கியது
1 Tsp                                                                  காரட் பொடியாக நறுக்கியது
2                                                                         மிளகாய் வற்றல்
6                                                                         கறுவேப்பிலை
1 Tsp                                                                  கொத்தமல்லி  பொடியாக நறுக்கியது
2 சிட்டிகை                                                     மஞ்சத்தூள்
1/2 Tsp                                                               உப்பு

தாளிக்க :
1/2 Tsp                                                               கடுகு
1 Tsp                                                                  உளுத்தம் பருப்பு
1 சிட்டிகை                                                     பெருங்காய தூள்
3 Tsp                                                                  எண்ணெய்

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
பின்னர் மிளகாயை உடைத்து  போட்டு, உளுத்தம் பருப்பையும், பெருங்காயத்தையும் கருவேப்பிலையையும் சேர்க்கவும்.
பருப்பு சிவந்தவுடன் எண்ணெயில் 2 சிட்டிகை மஞ்சத்தூள் சேர்த்து உடனே வெங்காயத்தை சேர்க்கவும்.
வாசனை வரும் வரை வதக்கவும்.
இதை அடுத்து கத்தரிக்காய் துண்டுகளையும் உப்பையும் சேர்த்து கிளறி விட்டு மூடி போட்டு வேக விடவும்.



நடு நடுவே திறந்து கிளறி விடவும்.


காய் வந்தவுடனே மூடியை நீக்கி விடவும்.  இப்போது குடைமிளகாயையும் காரட்டையும் சேர்த்து கிளறவும். அடுப்பில் சிறிய தீயில் காய் சற்று வதங்கும் வரை வைத்திருக்கவும்.


காயின் நீர் குன்றி பளபள என்று வந்தவுடன் அடுப்பை நிறுத்தி விடவும்.


சுவையான காரம் மிகுந்த படாபட் கத்தரிக்காய் கறி தயார்.

கத்தரிக்காய் கார கறி

பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைத்து கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.
சாம்பார் மற்றும் ரசம் சாதத்திற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட ஏற்ற கார கறியாகும். தயிர் சாதத்திற்கும் அருமையாக இருக்கும்.