Search This Blog

Showing posts with label kara curry. Show all posts
Showing posts with label kara curry. Show all posts

Sunday, April 6, 2014

Katharikai Kara Curry

கத்தரிக்காய் கார கறி : இந்த கறியை படாபட் கறி என்றும் கூறலாம். ஏனெனில் மிக விரைவில் செய்து விடலாம். கத்தரிக்காய் மிகவும் பிஞ்சாக இருப்பின் மிக இலகுவாக செய்து விடலாம்.

கத்தரிக்காய் கார கறி


தேவையான பொருட்கள் :
3 அ 4  நடுத்தரம்                                          கத்தரிக்காய், ஒரே அளவு துண்டுகளாக வெட்டவும்
1 பெரிய அளவு                                            வெங்காயம், நறுக்கி வைக்கவும்
1 Tbsp                                                                குடை மிளகாய் பொடியாக நறுக்கியது
1 Tsp                                                                  காரட் பொடியாக நறுக்கியது
2                                                                         மிளகாய் வற்றல்
6                                                                         கறுவேப்பிலை
1 Tsp                                                                  கொத்தமல்லி  பொடியாக நறுக்கியது
2 சிட்டிகை                                                     மஞ்சத்தூள்
1/2 Tsp                                                               உப்பு

தாளிக்க :
1/2 Tsp                                                               கடுகு
1 Tsp                                                                  உளுத்தம் பருப்பு
1 சிட்டிகை                                                     பெருங்காய தூள்
3 Tsp                                                                  எண்ணெய்

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
பின்னர் மிளகாயை உடைத்து  போட்டு, உளுத்தம் பருப்பையும், பெருங்காயத்தையும் கருவேப்பிலையையும் சேர்க்கவும்.
பருப்பு சிவந்தவுடன் எண்ணெயில் 2 சிட்டிகை மஞ்சத்தூள் சேர்த்து உடனே வெங்காயத்தை சேர்க்கவும்.
வாசனை வரும் வரை வதக்கவும்.
இதை அடுத்து கத்தரிக்காய் துண்டுகளையும் உப்பையும் சேர்த்து கிளறி விட்டு மூடி போட்டு வேக விடவும்.



நடு நடுவே திறந்து கிளறி விடவும்.


காய் வந்தவுடனே மூடியை நீக்கி விடவும்.  இப்போது குடைமிளகாயையும் காரட்டையும் சேர்த்து கிளறவும். அடுப்பில் சிறிய தீயில் காய் சற்று வதங்கும் வரை வைத்திருக்கவும்.


காயின் நீர் குன்றி பளபள என்று வந்தவுடன் அடுப்பை நிறுத்தி விடவும்.


சுவையான காரம் மிகுந்த படாபட் கத்தரிக்காய் கறி தயார்.

கத்தரிக்காய் கார கறி

பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைத்து கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.
சாம்பார் மற்றும் ரசம் சாதத்திற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட ஏற்ற கார கறியாகும். தயிர் சாதத்திற்கும் அருமையாக இருக்கும்.


Saturday, February 8, 2014

Senai Kizhangu Kara Curry

சேனை கிழங்கு கார கறி : வெகு நாட்களுக்கு பிறகு இந்த கிழங்கை சமைக்கிறேன். இங்கு கிடைக்கும் கிழங்கு அரிப்புத் தன்மை அதிகமாக இருப்பதனால் வாங்குவதே இல்லை. திருமண விருந்தில் அநேகமாக இந்த கார கறி இடம் பெற்றிருக்கும். இந்த கறி செய்ய கிழங்கை வெட்டி வேகவைத்து பிறகு எண்ணெயில் பொரித்து எடுத்த பின் வெங்காயம் தக்காளி மற்றும் மசாலாக்களுடன் சேர்த்து கறி செய்யப்படுகிறது. ஆனால் இங்கு எண்ணெயில் பொரிக்காமல் செய்வது எப்படி என பார்க்கலாம்.
அடுப்பையும் மைக்ரோவேவ் அவனையும் உபயோகப் படுத்தியிருக்கிறேன்.
சேனையை தோல் நீக்கி ஒரே அளவு சதுர துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
இனி செய்முறையை பார்க்கலாம்.

சேனை கிழங்கு கார கறி

தேவையான பொருட்கள் :


1 கப்                                          சேனை துண்டுகள்
1 சிட்டிகை                             மஞ்சத்தூள்
1/4 Tsp                                       மிளகாய்த்தூள்
1/2 Tsp                                       உப்பு

கறி செய்ய :


1 சிறிய அளவு                      வெங்காயம்
1                                                  தக்காளி
10                                                கருவேப்பிலை
சிறிது                                       கொத்தமல்லி
1 சிட்டிகை                             மஞ்சத்தூள்
1/2 Tsp                                        மிளகாய்த்தூள்

தாளிக்க :
1/2 Tsp                                        கடுகு
1 Tsp                                           உளுத்தம் பருப்பு
2 Tsp                                           எண்ணெய்
அலங்கரிக்க தேவையான கொத்தமல்லி.

செய்முறை :
குக்கரில் 1/2 கப் தண்ணீர், சேனை துண்டுகள், மஞ்சத்தூள், மிளகாய்த்தூள் மற்றும்  உப்பு சேர்த்து மூடி போட்டு வெயிட் பொருத்தி 1 விசில் வரும் வரை வேகவைக்கவும்.

நீராவியை உடனே நீக்கி தண்ணீரை வடித்து விட்டு ஒரு மைக்ரோவேவ் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
1/2 Tsp எண்ணெயை  வெந்த கிழங்கின் மேல் விட்டு கலக்கவும்.


மைக்ரோவேவ் அவனில் 1 நிமிடம் சூடு பண்ணவும்.
வெளியே எடுத்து கலக்கி விட்டு ஒரு 1/2 நிமிடம் வைத்து எடுக்கவும்.


தண்ணீர் பசை போய் லேசாக வறுபட்ட நிலையில் இருந்தால் போதும்.
சிவக்க வரும் வரை மைக்ரோவேவில் வைத்தால் ரப்பர் போல ஆகிவிடும்.
மைக்ரோவேவ் செய்த கிழங்கை தனியே வைக்கவும்.

இப்போது அடுப்பில் வாணலியை சூடாக்கவும்.
எண்ணெய் விட்டு கடுகு வெடிக்க விட்டு உளுத்தம் பருப்பை சேர்க்கவும்.
பருப்பு சிவந்தவுடன் கருவேப்பிலை சேர்த்து சிறிது வதக்கிய பின் மஞ்சத்தூள், மிளகாய் தூள் சேர்த்தவுடன் வெங்காயம் சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வதக்கவும்.
தக்காளியை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் தக்காளிக்கு தேவையான உப்பு சேர்த்து கிளறி விடவும்.


இந்த சமயத்தில் கிழங்கை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.


பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைத்து கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.                             
குறிப்பு :

  • இந்த கறி சிறப்பாக அமைய கிழங்கை சரியாக வேக வைப்பது மிக மிக அவசியம்.
  • கிழங்கு அதிகமாக வெந்து விட்டால் தனித்தனியாக இல்லாமல் மாவு போல் மசிந்து விடும்.
  • மைக்ரோவேவ் செய்ய வேண்டிய நேரம் எடுத்துக் கொள்ளும் கிழங்கின் அளவை பொருத்தது.
  • மைக்ரோவேவ் இல்லையென்றால் வேக வைத்த பின் கிழங்கை எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு மிளகாத்தூள் அளவை கூடி குறைத்துக் கொள்ளவும்.