#கத்தரிக்காய்சாம்பார் : #இட்லிசாம்பார் வகைகளில் #கத்தரிக்காய் #சாம்பார் மிக பிரசித்திபெற்றது. மதிய உணவிற்காக வைக்கப்படும் சாம்பார் பொதுவாக துவரம் பருப்பு உபயோகித்து செய்யப்படும். ஆனால் இட்லிசாம்பாருக்கு பயத்தம் பருப்பு உபயோகப் படுத்தப் படுகிறது. கத்தரிக்காய் இந்த சாம்பாருக்கு தனி மணத்தை கொடுக்கிறது. இனி எவ்வாறு செய்வது என காண்போம்.
தேவையான பொருட்கள் :
3 Tbsp பயத்தம் பருப்பு வேகவைத்தது
கோலிகுண்டு அளவு புளி, வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்கவும்.
2 கத்தரிக்காய்
1 வெங்காயம், அரிந்து வைக்கவும்
10 சின்ன வெங்காயம், அரிந்து வைக்கவும்.
3 பச்சை மிளகாய், நீள வாக்கில் கீறி வைக்கவும்
12 கறுவேப்பிலை
1 தக்காளி, பொடியாக நறுக்கிகொள்ளவும்.
சேர்க்க வேண்டிய பொடிகள் :
2 Tsp சாம்பார் பொடி
1 Tsp மல்லி தூள்
1 Tsp அரைத்து விட்ட சாம்பார் தூள்
2 சிட்டிகை மஞ்சத்தூள்
1/4 Tsp சீரகத்தூள்
1 1/2 Tsp உப்பு
தாளிக்க :
1 Tsp கடுகு
2 Tsp எண்ணெய்
1/4 Tsp பெருங்காய தூள்
கொத்தமல்லி தழை அலங்கரிக்க
செய்முறை :
அடுப்பில் குக்கரை வைத்து வேகவைத்துள்ள பருப்பை போடவும்.
கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொடிகளையும் சேர்த்து 1 கப் தண்ணீர் விட்டு கலக்கி மிதமான தீயில் கொதிக்க விடவும்.
மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
முதலில் கடுகை வெடிக்க விடவும். வெடித்ததும் பெருங்காய தூளை சேர்த்து கீறி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து சிறிது வதக்கிய பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
சற்றே நிறம் மாறினால் போதும்.
1 சிட்டிகை மஞ்சத்தூள் சேர்த்த பின்னர் வெட்டிவைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
கடைசியாக தக்காளி சேர்த்து சில மணித்துளிகள் வதக்கிய பின்னர் கொதித்து கொண்டிருக்கும் சாம்பாரில் கொட்டவும்.
புளியை 1 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொதிக்கும் சாம்பாரில் விடவும்.
குக்கரை மூடி வெயிட் பொருத்தவும்.
ஒரு விசில் வரும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.
விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
ஆவி அடங்கியவுடன் திறந்து பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.
ஒரு குழிவான தட்டில் அல்லது கிண்ணத்தில் இட்லியை வைத்து மேலே 2 கரண்டி சாம்பாரை ஊற்றி 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு சுவைத்தால்.... ம்ம்...ம்.... சுவையே அலாதிதான்!!

No comments:
Post a Comment