Search This Blog

Showing posts with label கொண்டைகடலை. Show all posts
Showing posts with label கொண்டைகடலை. Show all posts

Friday, April 18, 2014

Cauliflower Kondakadalai Masala Curry

காலிப்ளோவர்கொண்டகடலைமசாலா கறி  : இந்த பூவை கொண்டு மஞ்சூரியன், #காலிப்ளோவேர்  65, கறி, பொரியல், போன்ற பல வகையான உணவு வகைகள் சமைக்கப் படுகின்றன. இவை அனைத்தையும் விட தேங்காய் மசாலா அரைத்து கொண்டை கடலையுடன் செய்யப்படும் கறி  உருளை கிழங்குடன் செய்யப்படும் கறி  போன்றே மிக மிக அருமையாக இருக்கும். இந்த உணவு வகை மதிய சமையலில் சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


காலி ப்ளோவர் கொண்டைகடலை மசாலா கறி

தேவையான பொருட்கள் :
 1/2 கப்                                       காலி ப்ளோவேர் அரிந்தது
1/4 கப்                                        கொண்டை கடலை வேக வைத்தது
1/4 கப்                                        சிறு கீரை [ விருப்பமானால் ]
1 சிட்டிகை                             மஞ்சத்தூள்
1/4 Tsp                                        உப்பு


மசாலா அரைக்க :
2 Tbsp                                       தேங்காய் துருவல்
2                                               பச்சை மிளகாய்
1 Tsp                                         சீரகம்
1 Tsp                                         சோம்பு
1/4 Tsp                                     மல்லி விதை
3 பற்கள்                               பூண்டு
1 சிறிய அளவு                  வெங்காயம்
2 சிட்டிகை                          உப்பு
கொத்தமல்லி தழை மற்றும் கருவேப்பிலை விருப்பமான அளவு.

தாளிக்க :
1/2 Tsp                                    கடுகு
1 Tsp                                       உளுத்தம் பருப்பு
1 Tsp                                      எண்ணெய்

அலங்கரிக்க :
கொத்தமல்லி தழை சிறிதளவு.

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும். சூடானதும் கடுகை வெடிக்க விட்டு பின் உளுத்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.

பொன்னிறமானபின் சுத்தம் செய்து வெட்டி வைத்துள்ள  காலி ப்ளோவேர் துண்டுகளையும் மஞ்சதூளையும் சேர்க்கவும். சிறிது நேரம் வதக்கிய பின் மூடியினால் மூடி வைத்து வேக விடவும்.


இப்போது மிக்சியில் வெங்காயம் நீங்கலாக மற்ற அனைத்தையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் முதலில் அரைக்கவும்.
பின் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

கடைசியாக வெங்காயம் சேர்த்து ஓரிரு சுற்று சுற்றி வெங்காயம் திப்பிதிப்பியாக இருக்குமாறு அரைத்துக் கொள்ளவும்.

இப்போது வாணலியில் காய் வெந்து விட்டதா என பார்க்கவும்.
அரைத்து வைத்துள்ள மசாலாவையும் வேக வைத்த கொண்டாய் கடலையையும் சேர்க்கவும்.

நன்கு சாரணியால் கிளறி விடவும்.
பச்சை வாசனை போகும் வரையும், முழுவதுமாக  தண்ணீர் சுண்டும் வரையிலும் அவ்வப்போது கிளறி விட வேண்டும்.


தண்ணீர் சற்றே வற்றிய பிறகு சிறு கீரையை நறுக்கி சேர்க்கவும்.
கிளறி விடவும்.


கீரை வெந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
எல்லாம் ஒன்று சேர்ந்து தயார் ஆவதற்கு கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் ஆகலாம்.
கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.

காலி ப்ளோவர் கொண்டைகடலை மசாலா கறி

சுவையான காலி ப்ளோவேர் கொண்டை கடலை மசாலா கறி தயார்.

  • மசாலா அரைக்கும் போது தண்ணீர் சிறிதளவே சேர்த்து அரைக்க வேண்டும். இல்லையெனில் தண்ணீர் சுண்டுவதற்காக மிகுந்த நேரம் அடுப்பில் வதக்க வேண்டி இருக்கும். மிகுந்த நேரம் கிளறினால் சுவையும் மாறுபடும். 
  • சிறு கீரைக்குப்  பதில் பசலை கீரை [ spinach ] அல்லது தங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு கீரையை உபயோகப்படுத்தலாம்.
  • கொண்டை கடலையை முதல் நாளோ அல்லது சுமார் 6 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு குக்கரில் 1 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். நன்றாக ஊறியதாக இருந்தால் வெந்துவிடும். இல்லையெனில் இன்னும் ஓரிரு விசில் வரும் வரை வேக வைத் தெடுக்கவும். 







மேலும் சில அருமையான சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
சுண்டைக்காய்மசாலாகறி
சுண்டைக்காய்
மசாலாகறி
காலிப்ளவர் உருளை மசாலா கறி
காலிப்ளவர் உருளை மசாலா கறி
 சேப்பங்கிழங்கு மசாலா கறி
சேப்பங்கிழங்கு மசாலா கறி
பலாமுசு மசாலா கறி
பலாமுசு
மசாலா கறி
கொள்ளு சுண்டல்
கொள்ளு
சுண்டல்

Monday, April 14, 2014

Chick Pea Stir Fry

கொண்டைகடலை சுண்டல் : கொண்டை கடலை ஆங்கிலத்தில் Chick pea என்றும் Bengal Gram என்றும் அழைக்கப்படுகிறது. ஹிந்தியில் Channa என்று அழைக்கிறார்கள். இது வெள்ளை நிறத்திலும் பிரவுன் நிறத்திலும் கிடைக்கிறது. வெள்ளை நிற கொண்டாய் கடலையை Kabuli Channa என்றும் அழைக்கபடுகிறது. பச்சை நிறத்தில் கூட இருக்கிறது.

கொண்டைகடலை
வெள்ளை கொண்ட கடலை 

இங்கு முளைகட்டிய கொண்டைகடலை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
முதல் நாள் மதியம் கழுவி 6 முதல் 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
பின்னர் தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு மூடி இரவு முழுவதும் வைத்திருக்கவும். மறுநாள் காலை முளை வந்திருப்பதை காணலாம்.

முளை கட்டிய கொண்டை கடலை

இனி இந்த முளை கட்டிய கொண்டை கடலையை கொண்டு சுண்டல் எப்படி செய்வது என காணலாம்.



தேவையான பொருட்கள் :
1/2 கப்                                          முளை கட்டிய கொண்ட கடலை
1/4 கப்                                           காரட் துருவியது
1/8 கப்                                           கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
1/8 கப்                                           வாழை தண்டு மெல்லியதாக அரிந்தது
1/2 Tsp                                            உப்பு
1/4 Tsp                                            மிளகாய் தூள்
1 சிட்டிகை                                 மஞ்சத்தூள்
1/4 Tsp                                            சீரகத்தூள்
3 Tsp                                               தேங்காய் துருவல்

தாளிக்க :
1/2 Tsp                                           கடுகு
1 அ 2                                            சிகப்பு மிளகாய்
1 Tsp                                              உளுத்தம் பருப்பு
1 Tsp                                              எண்ணெய்

செய்முறை :
குக்கரில் கொண்டகடலையை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு விசில் வரும் வரை வேக வைத்தால் போதும்.
ஆவி அடங்கியவுடன் திறந்து தண்ணீரை வடித்து விட்டு தனியே எடுத்து வைக்கவும்.


கடாயை அடுப்பின் மேல் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விட்டு மிளகாயை கிள்ளி போட்டு உளுத்தம் பருப்பை சேர்க்கவும்.
பருப்பு சிவந்தவுடன் வாழை தண்டு, காரட் இரண்டையும் சேர்த்து வதக்கவும்.
மிளகாய் தூள், மஞ்சத்தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து வதக்கவும்.

இப்போது வேகவைத்து தனியே எடுத்து வைத்துள்ள கொண்டை கடலையை சேர்த்து கிளறவும்.
மூடியால் மூடி காரட் மற்றும் வாழை தண்டு மிருதுவாகும் வரை வேக விடவும்.
தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
திறந்து பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைத்து கொத்தமல்லி தழையினால் அலங்கரிக்கவும்.



மாலை சிற்றுண்டியாக சாப்பிட அருமையாக இருக்கும்.
சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் தொட்டுக் கொண்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும்.