Search This Blog

Showing posts with label cauliflower. Show all posts
Showing posts with label cauliflower. Show all posts

Thursday, November 20, 2014

Cauliflower Poriyal

#காலிப்ளவர்பொரியல் : #காலிப்ளவர் கொழுப்பு சத்து மிகவும் குறைவாக உள்ள காய்கறியாகும். மேலும் இது ஒரு சிறந்த antioxidant & anti-inflammatory குணங்கள் உடையது.  மற்றும் Omega 3 fatty acid நிறைந்துள்ளது. அத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள காயை கொண்டு ஒரு மிக எளிமையான பொரியல் எவ்வாறு செய்வது என காணலாம்.

காலிப்ளவர் பொரியல்


தேவையான பொருட்கள் :
1 1/2 கப்                              காலிப்ளவர் துண்டுகள்
1                                            வெங்காயம், பொடியாக நறுக்கவும்
2 அ 3                                   பச்சை மிளகாய்
3 Tsp                                     தேங்காய் துருவல்
1/2 Tsp                                  உப்பு [ அட்ஜஸ்ட் ]

தாளிக்க :
1/2 Tsp                                  கடுகு
1 Tsp                                     உளுத்தம் பருப்பு
1/2 Tsp                                   எண்ணெய்
அலங்கரிக்க சிறிது கொத்தமல்லி தழை.

செய்முறை :


அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகை வெடிக்க விட்ட பின்னர் உளுத்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.
பின்னர் வெட்டிவைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
இப்போது காலிப்ளவர் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.


உப்பு சேர்த்து கலந்து மூடி போட்டு வேக விடவும்.
காலிப்ளவர் மென்மையாக வெந்தவுடன் தேங்காய் துருவலை சேர்த்து பிரட்டி விடவும்.
அடுப்பை அணைத்து விட்டு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

காலிப்ளவர் பொரியல்


ரசம் மற்றும் சாம்பார் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

Saturday, June 14, 2014

Cauliflower Manchurian

#காலிப்ளவர் மஞ்சூரியன் : காலிப்ளவர் மிக சிறந்த ஆக்சிஜெனேற்றத்தடுப்பான் [ antioxidant ] மற்றும் அழற்சி எதிர்ப்பு சக்தி [ anti-inflammatory ] உடையது. காளிப்ளவரில் ஒமேகா 3 உள்ளது. இது கெட்ட கொழுப்பை குறைத்து இரத்த குழாய்கள் தடிமனாகாமல் இருக்க உதவுகிறது.
இதன் மற்ற மருத்துவ பயன்களை பற்றி அறிய

http://www.organicfacts.net/health-benefits/vegetable/health-benefits-of-cauliflower.html

காலிப்ளவர் மிகவும் எளிதில் வேகக்கூடிய தன்மை உடையது. வெகு சீக்கிரம் வேகவைத்து சாப்பிடும் போது அதில் அடங்கியிருக்கும் அத்தனை சத்துக்களும் நமக்கு கிடைக்கின்றது.

இங்கு எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான மஞ்சூரியன் எவ்வாறு செய்வது என காணலாம்.

செய்முறை :
1 கப்                                காலிப்ளவர் துண்டுகள்

மாவு கரைக்க :
1/2 cup                             கடலை மாவு [ அல்லது மைதா மாவு ]
2 Tbsp                              அரிசி மாவு
1 Tbsp                              சோள மாவு
1/4 Tsp                             சிகப்பு மிளகாய் பொடி
1/4 Tsp                             சீரகப் பொடி
1/2 Tsp                             உப்பு

ஊறவைக்க :
3 Tsp                               சோயா சாஸ் [ Soya sauce ]
1 Tsp                               சீரகப்பொடி
1/4 Tsp                             சிகப்பு மிளகாய் பொடி[ adjust ]
1/4 Tsp                            உப்பு  [ adjust ]

வதக்க :
1                                     வெங்காயம், பொடியாக நறுக்கியது
2                                     பச்சை மிளகாய், நீள வாக்கில் கீறி வைக்கவும்
8                                    கறுவேப்பிலை
2 Tbsp                           தக்காளி சாஸ் [ Tomato sauce ]
1 Tsp                             சோயா சாஸ் [ Soya sauce ]
1/4 Tsp                          உப்பு  [ adjust ]
1 Tsp                             Oil

1 கப் எண்ணெய் பொரிப்பதற்கு

செய்முறை :
ஊறவைக்க தேவையான பொருட்களை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு கலக்கவும்.
அதில் காலிப்ளவர் துண்டுகளை போட்டு பிரட்டவும்.


சுமார் 45 நிமிடங்கள் ஊற விடவும்.

45 நிமிடங்கள் ஊற விட்ட பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
மாவிற்கு தேவையான பொருட்களை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு பஜ்ஜி பதத்திற்கு கரைக்கவும்.
எண்ணெய்  சூடானவுடன் ஒரு தேக்கரண்டியின் உதவியுடன் காலிப்ளவர் துண்டுகளை மாவில் நனைத்து எண்ணையில் போடவும்.


நன்கு பொன்னிறமானதும் எடுத்து எண்ணெய் உறிஞ்சும் காகிதத்தின் மேல் வைக்கவும்.


இதே போல எல்லா துண்டுகளையும் மாவில் நனைத்து பொரித்த பின்னர் மற்றொரு அடுப்பில் வேறொரு வாணலியை வைத்து சூடாக்கவும்.


எண்ணெய் விட்டு சூடானதும் கறுவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும்  வெங்காயத்தை சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். அதன் பின்னர் சோயா சாஸ், தக்காளி சாஸ் மற்றும் உப்பு சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வைத்திருக்கவும்.


இப்போது பொறித்து வைத்துள்ள காலிப்ளவரை சேர்த்து கிளறவும்.
துண்டுகள் மேல் சாஸ் கலவை பூசினாற்போல வந்தால் போதுமானது.


அடுப்பை அணைத்து விட்டு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.


குறிப்பு : மஞ்சூரியன் மைதா மாவு கொண்டே செய்யப்படும். மைதாவை விட கடலை மாவு உடலுக்கு நல்லது. ஆகையால் இங்கு கடலை மாவை உபயோகித்துள்ளேன்.









Tuesday, April 29, 2014

Cauliflower Tomato Kuruma

#காலிப்ளவர்தக்காளிகுருமா : மிக எளிதாக செய்யகூடிய குருமா. எண்ணெயே சேர்க்காமல் செய்ய கூடியது.
மதிய உணவுக்காக சப்பாத்தி அல்லது பூரியுடன் டப்பாவில் அடைத்து எடுத்து செல்ல ஏதுவான ஒரு குருமாவாகும். காலையில் மிக குறைந்த நேரத்தில் செய்து முடித்து விடலாம்.
இப்போது எப்படி என காணலாம்.

காலிப்ளவர் தக்காளி குருமா

தேவையான பொருட்கள் :
1/2 கப்                                            காலிப்ளோவர் துண்டுகள்
1/4 கப்                                            காரட் துண்டுகள்
1/4 Tsp                                            உப்பு

மசாலாவிற்கு :
1 சிறிய அளவு                           வெங்காயம்
3 அ 4 பற்கள்                               பூண்டு
1/2 Tsp                                             கசகசா
1 Tsp                                                சீரகம்
1/4 Tsp                                             மல்லி
2                                                      முந்திரி பருப்பு
3 Tsp                                               தேங்காய் துருவல்
1 அ 2                                              பச்சை மிளகாய்
1                                                      தக்காளி
3/4 Tsp                                             உப்பு [ அட்ஜஸ்ட் ]

சிறிது கொத்தமல்லி தழை அலங்கரிக்க.

செய்முறை :
காரட் மற்றும் காலிப்ளோவர் இரண்டையும் குக்கரில் எடுத்துகொள்ளவும்.
அரை கப் தண்ணீர் விட்டு 1/4 தேக்கரண்டி உப்பு சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு உடனே ஆவியை வெளியேற்றி விடவும்.

மிக்ஸியில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மைய அரைத்துக்கொள்ளவும்.


அரைத்த விழுதை வேக வைத்த காயுடன் சேர்க்கவும்.
காலிப்ளவர் தக்காளி குருமா

ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

கொத்தமல்லி தூவி கலக்கி விடவும்.
பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
மேலே கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

காலிப்ளவர் தக்காளி குருமா

சப்பாத்தியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையான குருமா.


அதே போல பூரியுடனும் நன்றாக இருக்கும்.

மற்ற சில சிறப்பான சமையல் குறிப்புகள் 

அவியல் கடப்பா குடைமிளகாய் குருமா

Friday, April 18, 2014

Cauliflower Kondakadalai Masala Curry

காலிப்ளோவர்கொண்டகடலைமசாலா கறி  : இந்த பூவை கொண்டு மஞ்சூரியன், #காலிப்ளோவேர்  65, கறி, பொரியல், போன்ற பல வகையான உணவு வகைகள் சமைக்கப் படுகின்றன. இவை அனைத்தையும் விட தேங்காய் மசாலா அரைத்து கொண்டை கடலையுடன் செய்யப்படும் கறி  உருளை கிழங்குடன் செய்யப்படும் கறி  போன்றே மிக மிக அருமையாக இருக்கும். இந்த உணவு வகை மதிய சமையலில் சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


காலி ப்ளோவர் கொண்டைகடலை மசாலா கறி

தேவையான பொருட்கள் :
 1/2 கப்                                       காலி ப்ளோவேர் அரிந்தது
1/4 கப்                                        கொண்டை கடலை வேக வைத்தது
1/4 கப்                                        சிறு கீரை [ விருப்பமானால் ]
1 சிட்டிகை                             மஞ்சத்தூள்
1/4 Tsp                                        உப்பு


மசாலா அரைக்க :
2 Tbsp                                       தேங்காய் துருவல்
2                                               பச்சை மிளகாய்
1 Tsp                                         சீரகம்
1 Tsp                                         சோம்பு
1/4 Tsp                                     மல்லி விதை
3 பற்கள்                               பூண்டு
1 சிறிய அளவு                  வெங்காயம்
2 சிட்டிகை                          உப்பு
கொத்தமல்லி தழை மற்றும் கருவேப்பிலை விருப்பமான அளவு.

தாளிக்க :
1/2 Tsp                                    கடுகு
1 Tsp                                       உளுத்தம் பருப்பு
1 Tsp                                      எண்ணெய்

அலங்கரிக்க :
கொத்தமல்லி தழை சிறிதளவு.

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும். சூடானதும் கடுகை வெடிக்க விட்டு பின் உளுத்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.

பொன்னிறமானபின் சுத்தம் செய்து வெட்டி வைத்துள்ள  காலி ப்ளோவேர் துண்டுகளையும் மஞ்சதூளையும் சேர்க்கவும். சிறிது நேரம் வதக்கிய பின் மூடியினால் மூடி வைத்து வேக விடவும்.


இப்போது மிக்சியில் வெங்காயம் நீங்கலாக மற்ற அனைத்தையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் முதலில் அரைக்கவும்.
பின் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

கடைசியாக வெங்காயம் சேர்த்து ஓரிரு சுற்று சுற்றி வெங்காயம் திப்பிதிப்பியாக இருக்குமாறு அரைத்துக் கொள்ளவும்.

இப்போது வாணலியில் காய் வெந்து விட்டதா என பார்க்கவும்.
அரைத்து வைத்துள்ள மசாலாவையும் வேக வைத்த கொண்டாய் கடலையையும் சேர்க்கவும்.

நன்கு சாரணியால் கிளறி விடவும்.
பச்சை வாசனை போகும் வரையும், முழுவதுமாக  தண்ணீர் சுண்டும் வரையிலும் அவ்வப்போது கிளறி விட வேண்டும்.


தண்ணீர் சற்றே வற்றிய பிறகு சிறு கீரையை நறுக்கி சேர்க்கவும்.
கிளறி விடவும்.


கீரை வெந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
எல்லாம் ஒன்று சேர்ந்து தயார் ஆவதற்கு கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் ஆகலாம்.
கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.

காலி ப்ளோவர் கொண்டைகடலை மசாலா கறி

சுவையான காலி ப்ளோவேர் கொண்டை கடலை மசாலா கறி தயார்.

  • மசாலா அரைக்கும் போது தண்ணீர் சிறிதளவே சேர்த்து அரைக்க வேண்டும். இல்லையெனில் தண்ணீர் சுண்டுவதற்காக மிகுந்த நேரம் அடுப்பில் வதக்க வேண்டி இருக்கும். மிகுந்த நேரம் கிளறினால் சுவையும் மாறுபடும். 
  • சிறு கீரைக்குப்  பதில் பசலை கீரை [ spinach ] அல்லது தங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு கீரையை உபயோகப்படுத்தலாம்.
  • கொண்டை கடலையை முதல் நாளோ அல்லது சுமார் 6 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு குக்கரில் 1 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். நன்றாக ஊறியதாக இருந்தால் வெந்துவிடும். இல்லையெனில் இன்னும் ஓரிரு விசில் வரும் வரை வேக வைத் தெடுக்கவும். 







மேலும் சில அருமையான சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
சுண்டைக்காய்மசாலாகறி
சுண்டைக்காய்
மசாலாகறி
காலிப்ளவர் உருளை மசாலா கறி
காலிப்ளவர் உருளை மசாலா கறி
 சேப்பங்கிழங்கு மசாலா கறி
சேப்பங்கிழங்கு மசாலா கறி
பலாமுசு மசாலா கறி
பலாமுசு
மசாலா கறி
கொள்ளு சுண்டல்
கொள்ளு
சுண்டல்

Saturday, January 25, 2014

Cauliflower Potato Masala Curry

#காலிப்ளோவேர்உருளைமசாலாகறி : இந்த பூவை கொண்டு மஞ்சூரியன், #காலிப்ளோவேர்  65, கறி, பொரியல், போன்ற பல வகையான உணவு வகைகள் சமைக்கப் படுகின்றன. இவை அனைத்தையும் விட தேங்காய் மசாலா அரைத்து உருளை கிழங்குடன் செய்யப்படும் கறி மிக மிக அருமையாக இருக்கும். இந்த உணவு வகை மதிய சமையலில் சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.



தேவையான பொருட்கள் :
 1/2 கப்                                       காலி ப்ளோவேர் அரிந்தது
1 பெரிய அளவு                     உருளை கிழங்கு வேக வைத்தது
1 Tbsp                                         பச்சை பட்டாணி

மசாலா அரைக்க :
2 Tbsp                                       தேங்காய் துருவல்
2                                               பச்சை மிளகாய்
1 Tsp                                         சீரகம்
1 Tsp                                         சோம்பு
1/4 Tsp                                     மல்லி விதை
3 பற்கள்                               பூண்டு
1 சிறிய அளவு                  வெங்காயம்
2 சிட்டிகை                          உப்பு
கொத்தமல்லி தழை மற்றும் கருவேப்பிலை விருப்பமான அளவு.

தாளிக்க :
1/2 Tsp                                    கடுகு
1 Tsp                                       உளுத்தம் பருப்பு
1 Tsp                                      எண்ணெய்

அலங்கரிக்க :
கொத்தமல்லி தழை சிறிதளவு.

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும். சூடானதும் கடுகை வெடிக்க விட்டு பின் உளுத்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.

பொன்னிறமானபின் சுத்தம் செய்து வெட்டி வைத்துள்ள  காலி ப்ளோவேர் துண்டுகளை சேர்க்கவும். சிறிது நேரம் வதக்கிய பின் பட்டாணியையும் சேர்த்து பிரட்டி விட்டு மூடியினால் மூடி வைத்து வேக விடவும்.

இப்போது மிக்சியில் வெங்காயம் நீங்கலாக மற்ற அனைத்தையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் முதலில் அரைக்கவும்.
பின் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

கடைசியாக வெங்காயம் சேர்த்து ஓரிரு சுற்று சுற்றி வெங்காயம் திப்பிதிப்பியாக இருக்குமாறு அரைத்துக் கொள்ளவும்.


இப்போது வாணலியில் காய் வெந்து விட்டதா என பார்க்கவும்.
வேகவைத்த உருளை கிழங்கின் தோலுரித்து கையினால் நசுக்கி ஒன்றிரண்டாக பிட்டு போடவும்.


அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும்.
நன்கு சாரணியால் கிளறி விடவும்.
பச்சை வாசனை போகும் வரையும், முழுவதுமாக  தண்ணீர் சுண்டும் வரையிலும் அவ்வப்போது கிளறி விட வேண்டும்.


எல்லாம் ஒன்று சேர்ந்து தயார் ஆவதற்கு கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் ஆகலாம்.

பின்பு ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து கொத்தமல்லி தழையால் அலங்கரிக்கவும்.


சுவையான காலி ப்ளோவேர் உருளை கிழங்கு மசாலா கறி தயார்.

  • மசாலா அரைக்கும் போது தண்ணீர் சிறிதளவே சேர்த்து அரைக்க வேண்டும். இல்லையெனில் தண்ணீர் சுண்டுவதற்காக மிகுந்த நேரம் அடுப்பில் வதக்க வேண்டி இருக்கும். மிகுந்த நேரம் கிளறினால் சுவையும் மாறுபடும். 
  • பச்சை பட்டாணிக்கு பதிலாக மொச்சை சேர்த்து செய்தாலும் நன்றாக இருக்கும்.
  • உருளை கிழங்கை நன்கு கழுவி குக்கரில் 3/4 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து  மூடி வெயிட் பொருத்தவும். அதிக தீயில் 3 அல்லது 4 விசில் வரும் வரை வேக வைத்து ஆவி அடங்கியவுடன் வெளியே எடுக்கவும்.








மேலும் சில அருமையான சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
சுண்டைக்காய்மசாலாகறி
சுண்டைக்காய்
மசாலாகறி
காலிப்ளவர் கொண்டைக்கடலை மசாலா கறி
காலிப்ளவர்கொண்டை .. மசாலா கறி
 சேப்பங்கிழங்கு மசாலா கறி
சேப்பங்கிழங்கு மசாலா கறி
பலாமுசு மசாலா கறி
பலாமுசு
மசாலா கறி
கொள்ளு சுண்டல்
கொள்ளு
சுண்டல்

Thursday, November 21, 2013

Cauliflower Masala Curry

காலி ப்ளோவேர் மசாலா கறி :  இதை காய் வகையில் சேர்ப்பதா அல்லது பூவிலா? எப்படியாயினும் இந்த காய் சிலருக்கு மிக விருப்பமானது. சிலருக்கு இதன் வாசனை பிடிப்பதில்லை. அதனால் பெரும்பாலும் மாவுடன் கலந்து எண்ணையில் பொறித்து மஞ்சூரியன் என்ற உணவாக சாப்பிடுகிறார்கள். பொதுவாக பொரியலாகவோ அல்லது மசாலா சேர்த்த கறியாகவோ செய்வது வழக்கம். இங்கு மசாலா சேர்த்து செய்யும் விதத்தை பார்ப்போம்.

காலி ப்ளோவேர் மசாலா கறி

தேவையான பொருட்கள் :

காலி ப்ளோவேர் துண்டுகள்                 : 1/2 Cup
காரட் துண்டுகள்                                     : 1/4 Cup
பச்சை பட்டாணி                                      : 1/4 Cup
குடை மிளகாய்  துண்டுகள்                   : 3 Tbsp

மசாலா அரைக்க :

தேங்காய் துறுவல்                                   : 3 Tsp
சீரகம்                                                          : 1/2 Tsp
பெருஞ்சீரகம் ( சோம்பு )                          : 1/2 Tsp
கொத்தமல்லி விதை                               : 1/4 Tsp
பச்சை மிளகாய்                                         : 1 அ 2
பூண்டு பற்கள்                                             : 2 அ 3
சின்ன வெங்காயம்                                   : 5 அ 6
அல்லது
பெரிய வெங்காயம்                                   : 1 சிறியது
கருவேப்பிலை                                            : 20 ( விருப்பப்பட்டால் )
கொத்தமல்லி தழை                                  : 3 Tbsp (  விருப்பப்பட்டால் )
உப்பு                                                               : 2 சிட்டிகை

தாளிக்க :

கடுகு                                                              : 1/2 Tsp
உளுத்தம் பருப்பு                                          : 1 Tsp
எண்ணெய்                                                    : 1 Tsp

செய்முறை :

காலி ப்ளோவேர், காரட் துண்டுகளை தனி தனியாக தேவையான உப்புடன்  வேகவைத்து எடுத்து வைக்கவும்.
பட்டாணியையும் உப்பு சேர்த்து வேகவைக்கவும்.




மசாலா பொருட்கள் அனைத்தையும் வெங்காயம் நீங்கலாக முதலில் தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைக்கவும்.
பிறகு தண்ணீர் சிறிது சேர்த்து அரைக்கவும்.
கடைசியாக வெங்காய துண்டுகளை  ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளவும்.
தனியே எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகை வெடிக்க விடவும்.
பின் உளுத்தம் பருப்பை சிவக்க வறுக்கவும்.
முதலில் குடை மிளகாய் துண்டுகளை  சுமார் ஒரு நிமிடம் வதக்கவும்.
இப்போது வேகவைத்த மற்ற காய்கறிகளையும் பட்டாணியையும் சேர்த்து ஒன்றிரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.


அரைத்த மசாலாவை சேர்த்து கலக்கி விடவும்.


சிறிது நேரத்திற்கு ஒரு முறை கிளறி விடவும்.
தண்ணீர் வற்றி மசாலா காலி ப்ளோவேர் மற்றும் இதர காய்கறிகளில் மேல் பூச்சு போல் வந்தவுடன் இறக்கி பரிமாறும்  பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தழையினால் அலங்கரிக்கவும்.

இந்த மசாலா கறி சாம்பார் சாதத்திற்கு மற்றும் ரசம் சாதத்திற்கு ஏற்ற துவட்டல் ஆகும்.

காலி ப்ளோவேர் மசாலா கறி







மேலும் சில அருமையான சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
சுண்டைக்காய்மசாலாகறி
சுண்டைக்காய்
மசாலாகறி
காலிப்ளவர் உருளை மசாலா கறி
காலிப்ளவர் உருளை மசாலா கறி
சேப்பங்கிழங்கு மசாலா கறி
சேப்பங்கிழங்கு மசாலா கறி
பலாமுசு மசாலா கறி
பலாமுசு
மசாலா கறி
கொள்ளு சுண்டல்
கொள்ளு
சுண்டல்