Search This Blog

Showing posts with label பழச்சாறு. Show all posts
Showing posts with label பழச்சாறு. Show all posts

Wednesday, May 14, 2014

Mulampazham Pudhina Juice

#முலாம்பழம் புதினா பானம் : முலாம் பழம் கோடையில் கிடைக்கும் நீர் சத்தும் வைட்டமின் A & C யும் மற்றும் பொட்டாசியமும் நிறைந்த பழமாகும்.


முலாம்பழம் முலாம்பழம்

அந்தந்த காலங்களில் கிடைக்கும் பழங்களை உண்பது உடலுக்கு மிக நல்லது. இந்த பழம் சுவையானது கூட ஆகும்.

முலாம்பழம்

புதினா உணவு செரிமானத்திற்கும் இரத்த விருத்திக்கும் மிக அவசியமான ஒரு கீரையாகும். இதன் பயனை மேலும் அறிய கீழே உள்ள இணைப்பை பார்க்கவும்.

புதினா மருத்துவ குணங்கள்

இத்தகைய மருத்துவ குணமுடைய புதினாவை முலாம் பழத்துடன் சேர்த்து #பழச்சாறு செய்யும் முறையை காணலாம்.

முலாம்பழம் புதினா பானம்

தேவையான பொருட்கள் :
1 கப்                                     முலாம்பழ துண்டுகள்
1 Tsp                                     எலுமிச்சை சாறு
10                                          புதினா இலைகள்
2 சிட்டிகை                          உப்பு
1/2 கப்                                   தண்ணீர்

செய்முறை :
எல்லாவற்றையும் மிக்சி பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
நன்கு சுற்றி சாறாக்கிக் கொள்ளவும்.


பழச்சாறு தயாரித்த பின்னர் கண்ணாடி கோப்பையில் ஊற்றி பரிமாறவும்.
புதினா சீக்கிரம் நிறம் மாறக் கூடியது.
அதனால் தயாரித்தவுடன் பருகுவது மிக அவசியம்.
புதினா மணத்துடன் கூடிய அருமையான முலாம் பழச்சாறு தயார்.

முலாம்பழம் புதினா பானம்

சுவைத்து மகிழவும்.
மேலே துளசி இலை கொண்டு அலங்கரிக்கலாம்.




மேலும் முயற்சிக்க சில பானங்கள் :
பானகம்
பானகம்
மாங்காய் பானம் [ ஆம் பண்ணா ]
மாங்காய் பானம் [ ஆம் பண்ணா ]
முலாம்பழம் மாங்காய் பானம்
முலாம்பழம் மாங்காய் பானம்
முலாம்பழம் துளசி பானம்
முலாம்பழம் துளசி பானம்
எலுமிச்சை இஞ்சி பானம்
எலுமிச்சை இஞ்சி பானம்

Mulampazham Tulasi Juice

#முலாம்பழம்துளசிபானம் : முலாம் பழம் வெய்யில் காலத்தில் கிடைக்கக்கூடிய ஒரு பழமாகும்.

முலாம்பழம்


இந்த பழத்தில் பல வகைகள் உள்ளன. மேல்தோல் பல நிறங்களில் இருந்தாலும் மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் பொதுவாக இருக்கும். பழத்தை இரண்டாக பிளந்தால் உள்ளே நடுவில் விதைகள் நிரம்பி  இருக்கும். பழத்தின் சதை பற்று வெளிர் ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இனிப்பு சுவையுடன் இருக்கும். மேல் தோலை நீக்கி விட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
முலாம்பழம் வைட்டமின் A மற்றும் C அதிக அளவில் உடையதாக உள்ளது.

முலாம்பழம்


துளசி மிக பழங்காலதிலிருந்தே நமது மருத்துவத்தில் சளி, இருமல், நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க என பல்வேறு உபாதைகளுக்கான மருந்தாக பயன் பட்டு வருகிறது. துளசி தொற்று நோய் எதிர்க்கும் சக்தி உடையதாக இருப்பதனால்தான் பெருமாள் கோயிலில் துளசி தீர்த்தம் தருகிறார்கள் என நான் நம்புகிறேன்.
மேலும் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை அழுத்தவும்.
துளசி 

இந்த பழத்தை கொண்டு துளசியுடன் சேர்த்து ஒரு பானம் தயாரிக்கும் முறையை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள் :


1 கப்                                   முலாம்பழம், தோல் நீக்கி துண்டுகளாக்கவும்.

முலாம்பழம் தோல் சீவியது

20                                         துளசி இலைகள்
1 Tsp                                    எலுமிச்சை சாறு
1 Tsp                                    இஞ்சி சாறு [ இஞ்சியை இடித்து ஊற வைத்த நீர் ]
1 சிட்டிகை                         உப்பு
2 சிட்டிகை                         பட்டை பொடி
2 Tsp                                     ஆப்பிள் துண்டுகள் அலங்கரிக்க

செய்முறை :

ஆப்பிள் துண்டுகள் நீங்கலாக அனைத்தையும் மிக்ஸி பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.


மிக்சியை அரைத்து சாறு பிழிந்து எடுக்கவும்.


பழ சாற்றை கண்ணாடி கோப்பையில் ஊற்றவும்.
மேலே ஆப்பிள் துண்டுகளால் அலங்கரித்து பரிமாறவும்.

முலாம்பழம் துளசி பானம்

சுவையான துளசி மணம் கொண்ட முலாம்பழம் பானம் தயார்.

குறிப்பு :
இனிப்பு அவசியம் என்றால் 2 Tsp  சர்க்கரை அல்லது தேன் சேர்த்து தயாரிக்கவும்.





இதனையும் முயற்சிக்கலாமே!!
பானகம்
பானகம்
மாங்காய் பானம் [ ஆம் பண்ணா ]
மாங்காய் பானம் [ ஆம் பண்ணா ]
முலாம்பழம் மாங்காய் பானம்
முலாம்பழம் மாங்காய் பானம்
எலுமிச்சை இஞ்சி பானம்
எலுமிச்சை இஞ்சி பானம்
முலாம்பழம் புதினா பானம்
முலாம்பழம் புதினா பானம்

Sunday, April 20, 2014

Watermelon - Orange Juice

#தர்பூசணி #ஆரஞ்சு #பானம் : வெய்யில் காலங்களில் தர்பூசணி பழம் சாலையோரத்தில் குவிக்கப்பட்டு விற்கப்படும். பச்சை நிறத்தின் வெவ்வேறு நிறங்களில்  இந்த பழங்களை காணலாம். இந்த பழம் கோடையில் உடலை குளிர்விக்க மிக மிக அவசியமானது.

தர்பூசணியுடன்  ஆரஞ்சு பழச்சாறு மற்றும் ஆப்பிள் சேர்த்து செய்யப்பட்டது இந்த ஜூஸ்.


தேவையான பொருட்கள் :


2 கப்                               தர்பூசணி துண்டுகள்
2                                     ஆரஞ்சு, பழச்சாறு எடுத்து தனியே வைக்கவும்
1 சிட்டிகை                    உப்பு
1 அ 2                              தேன்
1/4                                   ஆப்பிள், தோல் சீவி துண்டுகளாக்கவும்

 அலங்கரிக்க :
1 Tsp                              ஆப்பிள் துண்டுகள்
3 அ 4                              புதினா இலைகள்

செய்முறை :
அனைத்தையும் மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொள்ளவும்.
நன்கு அடித்து ஜோசாக்கவும்.
கண்ணாடி கோப்பையில் ஊற்றி ஆப்பிள் துண்டுகளையும் புதினா இலைகளையும் போட்டு பருகவும்.


ஜூஸ் செய்யும் போது சில்லென்று வேண்டுமானால் ஐஸ் கட்டிகளுடன் சேர்த்து அடித்து தயாரிக்கலாம். ஆனால் சிலருக்கு மிக குளிர்ந்த பானம் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. பழங்களை குளிர் சாதன பெட்டியில் வைத்திருந்து பின்னர் ஜூஸ் செய்தால் சிறிது சில்லென்று இருக்கும்.

மற்ற பானங்கள்

தர்பூசணி ஆப்பிள் பானம் 
தர்பூசணி பானம் 

Saturday, April 19, 2014

Watermelon - Apple Juice

#தர்பூசணி #ஆப்பிள் #பானம் : தர்பூசணி கோடைக்காலத்தில் கிடைக்கும் பழங்களில் ஒன்றாகும். இதில் தொண்ணூறு சதவிகிதம் தண்ணீர் சத்தும் மீதி சதைபற்றும் மிகுந்து காணப்படுகிறது. இத்தண்ணீர் சத்து கோடையில் உடலை குளிர்விக்க மிக அத்தியாவசியமாகும். இனிப்பும் நிறைந்த பழமாகும்.

இதனுடன் ஆப்பிள் பழத்தையும் சிறிது புளிப்பு சுவைக்காக எலுமிச்சை பழத்தையும் உபயோகித்து இந்த பழச்சாறை தயாரித்துள்ளேன்.
எப்படி என காண்போம்.


தேவையான பொருட்கள் :
2 கப்                                 தர்பூசணி பழத்துண்டுகள் [ கொட்டைகளை நீக்கி விடவும்]
1/2                                     ஆப்பிள் , தோலை நீக்கி துண்டுகளாக்கவும்
1 Tsp                                 எலுமிச்சை சாறு
1 அ 2 Tsp                         தேன் [ தேவையானால் ]
1 சிட்டிகை                     உப்பு

அலங்கரிக்க :
1 Tsp                                 ஆப்பிள் பொடியாக நறுக்கியது,


செய்முறை :
மிக்சியில் எல்லாவற்றையும் எடுத்து நன்கு அடித்து பழச்சாறு தயாரிக்கவும்.
கண்ணாடி கோப்பையில் ஊற்றி ஆப்பிள் துண்டுகளை மேலே போட்டு பருகவும்.



ஜூஸ் செய்யும் போது சில்லென்று வேண்டுமானால் ஐஸ் கட்டிகளுடன் சேர்த்து அடித்து தயாரிக்கலாம். ஆனால் சிலருக்கு மிக குளிர்ந்த பானம் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. பழங்களை குளிர் சாதன பெட்டியில் வைத்திருந்து பின்னர் ஜூஸ் செய்தால் சிறிது சில்லென்று இருக்கும்.

மற்ற பானங்கள் 
தர்பூசணி பானம்