Search This Blog

Wednesday, May 14, 2014

Mulampazham Pudhina Juice

#முலாம்பழம் புதினா பானம் : முலாம் பழம் கோடையில் கிடைக்கும் நீர் சத்தும் வைட்டமின் A & C யும் மற்றும் பொட்டாசியமும் நிறைந்த பழமாகும்.


முலாம்பழம் முலாம்பழம்

அந்தந்த காலங்களில் கிடைக்கும் பழங்களை உண்பது உடலுக்கு மிக நல்லது. இந்த பழம் சுவையானது கூட ஆகும்.

முலாம்பழம்

புதினா உணவு செரிமானத்திற்கும் இரத்த விருத்திக்கும் மிக அவசியமான ஒரு கீரையாகும். இதன் பயனை மேலும் அறிய கீழே உள்ள இணைப்பை பார்க்கவும்.

புதினா மருத்துவ குணங்கள்

இத்தகைய மருத்துவ குணமுடைய புதினாவை முலாம் பழத்துடன் சேர்த்து #பழச்சாறு செய்யும் முறையை காணலாம்.

முலாம்பழம் புதினா பானம்

தேவையான பொருட்கள் :
1 கப்                                     முலாம்பழ துண்டுகள்
1 Tsp                                     எலுமிச்சை சாறு
10                                          புதினா இலைகள்
2 சிட்டிகை                          உப்பு
1/2 கப்                                   தண்ணீர்

செய்முறை :
எல்லாவற்றையும் மிக்சி பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
நன்கு சுற்றி சாறாக்கிக் கொள்ளவும்.


பழச்சாறு தயாரித்த பின்னர் கண்ணாடி கோப்பையில் ஊற்றி பரிமாறவும்.
புதினா சீக்கிரம் நிறம் மாறக் கூடியது.
அதனால் தயாரித்தவுடன் பருகுவது மிக அவசியம்.
புதினா மணத்துடன் கூடிய அருமையான முலாம் பழச்சாறு தயார்.

முலாம்பழம் புதினா பானம்

சுவைத்து மகிழவும்.
மேலே துளசி இலை கொண்டு அலங்கரிக்கலாம்.




மேலும் முயற்சிக்க சில பானங்கள் :
பானகம்
பானகம்
மாங்காய் பானம் [ ஆம் பண்ணா ]
மாங்காய் பானம் [ ஆம் பண்ணா ]
முலாம்பழம் மாங்காய் பானம்
முலாம்பழம் மாங்காய் பானம்
முலாம்பழம் துளசி பானம்
முலாம்பழம் துளசி பானம்
எலுமிச்சை இஞ்சி பானம்
எலுமிச்சை இஞ்சி பானம்

No comments:

Post a Comment