இந்த பழத்தில் பல வகைகள் உள்ளன. மேல்தோல் பல நிறங்களில் இருந்தாலும் மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் பொதுவாக இருக்கும். பழத்தை இரண்டாக பிளந்தால் உள்ளே நடுவில் விதைகள் நிரம்பி இருக்கும். பழத்தின் சதை பற்று வெளிர் ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இனிப்பு சுவையுடன் இருக்கும். மேல் தோலை நீக்கி விட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
முலாம்பழம் வைட்டமின் A மற்றும் C அதிக அளவில் உடையதாக உள்ளது.
துளசி மிக பழங்காலதிலிருந்தே நமது மருத்துவத்தில் சளி, இருமல், நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க என பல்வேறு உபாதைகளுக்கான மருந்தாக பயன் பட்டு வருகிறது. துளசி தொற்று நோய் எதிர்க்கும் சக்தி உடையதாக இருப்பதனால்தான் பெருமாள் கோயிலில் துளசி தீர்த்தம் தருகிறார்கள் என நான் நம்புகிறேன்.
மேலும் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை அழுத்தவும்.
துளசி
இந்த பழத்தை கொண்டு துளசியுடன் சேர்த்து ஒரு பானம் தயாரிக்கும் முறையை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள் :
1 கப் முலாம்பழம், தோல் நீக்கி துண்டுகளாக்கவும்.
20 துளசி இலைகள்
1 Tsp எலுமிச்சை சாறு
1 Tsp இஞ்சி சாறு [ இஞ்சியை இடித்து ஊற வைத்த நீர் ]
1 சிட்டிகை உப்பு
2 சிட்டிகை பட்டை பொடி
2 Tsp ஆப்பிள் துண்டுகள் அலங்கரிக்க
செய்முறை :
ஆப்பிள் துண்டுகள் நீங்கலாக அனைத்தையும் மிக்ஸி பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
மிக்சியை அரைத்து சாறு பிழிந்து எடுக்கவும்.
பழ சாற்றை கண்ணாடி கோப்பையில் ஊற்றவும்.
மேலே ஆப்பிள் துண்டுகளால் அலங்கரித்து பரிமாறவும்.
சுவையான துளசி மணம் கொண்ட முலாம்பழம் பானம் தயார்.
குறிப்பு :
இனிப்பு அவசியம் என்றால் 2 Tsp சர்க்கரை அல்லது தேன் சேர்த்து தயாரிக்கவும்.
|
|
|
||||||
|
|
No comments:
Post a Comment