Search This Blog

Saturday, April 19, 2014

Watermelon - Apple Juice

#தர்பூசணி #ஆப்பிள் #பானம் : தர்பூசணி கோடைக்காலத்தில் கிடைக்கும் பழங்களில் ஒன்றாகும். இதில் தொண்ணூறு சதவிகிதம் தண்ணீர் சத்தும் மீதி சதைபற்றும் மிகுந்து காணப்படுகிறது. இத்தண்ணீர் சத்து கோடையில் உடலை குளிர்விக்க மிக அத்தியாவசியமாகும். இனிப்பும் நிறைந்த பழமாகும்.

இதனுடன் ஆப்பிள் பழத்தையும் சிறிது புளிப்பு சுவைக்காக எலுமிச்சை பழத்தையும் உபயோகித்து இந்த பழச்சாறை தயாரித்துள்ளேன்.
எப்படி என காண்போம்.


தேவையான பொருட்கள் :
2 கப்                                 தர்பூசணி பழத்துண்டுகள் [ கொட்டைகளை நீக்கி விடவும்]
1/2                                     ஆப்பிள் , தோலை நீக்கி துண்டுகளாக்கவும்
1 Tsp                                 எலுமிச்சை சாறு
1 அ 2 Tsp                         தேன் [ தேவையானால் ]
1 சிட்டிகை                     உப்பு

அலங்கரிக்க :
1 Tsp                                 ஆப்பிள் பொடியாக நறுக்கியது,


செய்முறை :
மிக்சியில் எல்லாவற்றையும் எடுத்து நன்கு அடித்து பழச்சாறு தயாரிக்கவும்.
கண்ணாடி கோப்பையில் ஊற்றி ஆப்பிள் துண்டுகளை மேலே போட்டு பருகவும்.



ஜூஸ் செய்யும் போது சில்லென்று வேண்டுமானால் ஐஸ் கட்டிகளுடன் சேர்த்து அடித்து தயாரிக்கலாம். ஆனால் சிலருக்கு மிக குளிர்ந்த பானம் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. பழங்களை குளிர் சாதன பெட்டியில் வைத்திருந்து பின்னர் ஜூஸ் செய்தால் சிறிது சில்லென்று இருக்கும்.

மற்ற பானங்கள் 
தர்பூசணி பானம் 

No comments:

Post a Comment