Search This Blog

Friday, April 10, 2015

Carrot-Thinai-Payasam

#காரட்தினைபாயசம் : #காரட் பிடிக்காதவர்கள் யார்தான் இருக்கக்கூடும். காரட் எல்லா வகையான உணவு பொருட்களும் செய்ய ஏதுவான காய் ஆகும். காரட்டில் வைட்டமின் A நிறைந்துள்ளது என நாம் அனைவரும் நன்கு அறிவோம்.
#தினை #சிறுதானியம் வகைகளுள் ஒன்று ஆகும். மற்ற சிறு தானியங்களைப் போலவே இதுவும்  அமிலத்தன்மை உருவாக்குவதில்லை. நார் சத்து, இரும்பு, துத்தநாக மற்றும் தாமிர சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் இதில் மற்ற சிறு தானியங்களை விட அதிக அளவு புரோட்டீன் நிறைந்துள்ளது.
இத்தனை இன்றியமையா சத்துக்கள் கொண்ட தினை மற்றும் காரட் இரண்டையும் சேர்த்து பாயசம் செய்து பார்த்தால் எப்படி இருக்கும் என யோசித்தேன். நேற்று செய்தும் பார்த்து விட்டேன். இன்றியமையா சத்துக்கள் மட்டுமல்லாமல் சுவையும் மிக மிக அருமையாக இருந்தது.
இனி எப்படி செய்வது என காண்போம்.
1 1/2 முதல் 2 கப் பாயசம் தயாரிக்கலாம்.

காரட் தினை பாயசம் [ Carrot Foxtail Millet Payasam ]



தினை தானியம் [ foxtail millet ]


தேவையான பொருட்கள் :
1/4 கப்தினை [ foxtail millet ]
1 கப்பால்
1/4 கப்காரட் துருவியது
1/4 கப்சர்க்கரை [ adjust ]
1 சிட்டிகைஉப்பு
2 or 3பாதாம் பருப்பு துருவியது
1/4 Tspஏலக்காய் பொடி

செய்முறை :
தினையை கழுவி விட்டு ஒரு கிண்ணத்தில் 2 முதல் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
குறிப்பிட்ட மணி நேரம் கழித்து மிக்சியில் 1/4 தண்ணீர் விட்டு அரைத்து ஒரு டீ வடிக்கட்டியின் மூலம் வடிகட்டவும்.
வடிகட்டியதை மற்றுமொரு முறை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து மறுபடியும் அதே பாத்திரத்தில் வடி கட்டிக்கொள்ளவும்.
மூன்றாவது முறையும் மிக்ஸியில் அரைத்து பால் எடுத்து அதே பாத்திரத்தில் வடி கட்டவும்.
வடிகட்டிய கரைசல் பால் போல இருக்கும்.
இதனை தினை பால் என்று இனி அழைக்கலாம்.

டீ வடிகட்டியில் தங்கும் தினை உமியை தூக்கி எறிந்து விடவும்.
ஒரு பாத்திரத்தில் பாலை காய்ச்சி தயாராக வைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் சிறிய தீயின் மேல் வைத்து துருவிய காரட் சேர்க்கவும்.
ஒரு நீண்ட கரண்டியால் வதக்கவும்.
காரட் சிறிது நேரத்திலேயே வெந்து விடும்.
பிறகு சர்க்கரையை போட்டு கிளறவும்.
சர்க்கரை உருகி தண்ணீர் விட ஆரம்பிக்கும்.
இத்தருணத்தில் காய்ச்சிய பாலை சேர்த்து கொதிக்க விடவும்.
குறைந்த தீயில் வைத்து தினை பாலை சேர்த்து விடாமல் கலக்கவும்.
கிண்டிகொண்டே இருக்கும் போது பளபளப்பாகவும் கஞ்சி பதத்திற்கும் மாறும்.
சில நிமிடங்கள் கலக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு ஏலக்காய் பொடி தூவி கலக்கி விடவும்.


பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைத்து மேலே பாதாம் துகள்களை தூவி பருகவும்.
அருமையான சுவை மிகுந்த பாயசம் ஆகும்.
செய்து சுவைத்து பாருங்கள்.

காரட் தினை பாயசம் [ Carrot Foxtail Millet Payasam ]







இவற்றையும் முயற்சி செய்து பார்க்கலாமே!
திணை பால் பாயாசம் தினை பொட்டுக்கடலை உருண்டை தினை மாவு உருண்டை தினை பாயசம் 1





1 comment:

  1. நல்ல சத்தான பாயாசம் !... Last photo super !!!.... - chudachuda.com

    ReplyDelete