Search This Blog

Monday, April 6, 2015

Cholam-Kuzhi-Paniyaram

#சோளகுழிபணியாரம் : சென்ற பதிவில் #சோளம் உபயோகித்து #சோளஇட்லி
செய்வது எப்படி என்று பார்த்தோம். முதல் நாள் இட்லி செய்தது போக மீதம் இருந்த மாவில் பணியாரம் செய்து பார்த்தேன். மிக அருமையாக இருந்தது. அதனால் இன்று சோள பணியாரம் எவ்வாறு செய்வது என இங்கு பதிவிட விரும்புகிறேன்.
சுமார் 12 முதல் 15 பணியாரங்கள் செய்யலாம்.

சோள குழிபணியாரம்

தேவையான பொருட்கள் :
2 cupசோள இட்லி மாவு
1/4 cupரவா ( அ ) கோதுமை ரவா
1/2 Tspஉப்பு [ adjust ]
1 Tbspவெங்காயம் பொடியாக நறுக்கியது
1 Tbspகாரட் பொடியாக நறுக்கியது
1 Tbspகுடை மிளகாய் பொடியாக நறுக்கியது
1/4 cupகொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
1/4 cupவெந்தய கீரை பொடியாக நறுக்கியது
8 - 10கறுவேப்பிலை, பொடியாக நறுக்கவும்.
1 or 2பச்சை மிளகாய், பொடியாக நறுக்கவும்.
தாளிக்க :
1/2 Tspகடுகு
2 Tspகடலை பருப்பு
1/4 Tspபெருங்காய பொடி
2 Tspஎண்ணெய்

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் சோள இட்லி மாவு, ரவா ( அ ) கோதுமை ரவா மற்றும் உப்பு எடுத்துகொள்ளவும்.
1/4 கப் தண்ணீர் விட்டு கலக்கி அரை மணி நேரம் ஊற விடவும்.
அரை மணி நேரம் கழித்து அடுப்பில் குழிபணியார கல்லை சிறிய தீயில் சூடாக்கவும்.
மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் கடுகு வெடிக்க விட்ட பின்னர் கடலை பருப்பு சேர்க்கவும்.
கடலை பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
அடுத்து பெருங்காய பொடி, கருவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வெங்காயத்தையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அடுத்ததாக காரட் மற்றும் குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு வதக்கிய பொருட்களை மாவில் கொட்டவும்.
கொத்தமல்லி தழை மற்றும் வெந்தய கீரை ஆகியவற்றையும் மாவுடன் சேர்த்து கலக்கவும்.
மாவு இட்லி பதத்தில் இருக்க வேண்டும்.
தேவையெனில் சிறிது தண்ணீர் விட்டு கலக்கி வைக்கவும்.

குழி பணியார கல்லின் ஒவ்வொரு குழியிலும் 1/4 Tsp எண்ணெய் விடவும்.
கல் சரியான சூடு அடைந்ததும் கரண்டியால் மாவை எடுத்து குழிகளில் நிரப்பவும்.
பின்னர் ஒவ்வொரு குழியில் நிரப்பப்பட்ட மாவின் மேல் சில துளி எண்ணெயை ஊற்றவும்.
பணியாரத்தின் ஓரங்கள் சிவக்க ஆரம்பித்ததும் ஒரு தேக்கரண்டியால் திருப்பி விடவும்.
இரண்டு பக்கமும் சிவக்க வேக வைத்து எடுக்கவும்.
மீண்டும் குழிகளில் எண்ணெய் விட்டு அடுத்த ஈடு மாவு ஊற்றி குழி பணியாரம் சுட்டு எடுக்கவும்.


சூடான சுவை மிகுந்த குழி பணியாரத்தை
பரிமாறும் தட்டில் எடுத்து வைத்து தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி யுடன் பரிமாறவும்.

சோள குழிபணியாரம்





முயற்சி செய்து பார்க்க மேலும் சில சமையல் குறிப்புகள்
சோள இட்லி
சோள இட்லி
சோளதோச
சோளதோசை
ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை
நீர்தோசை
நீர்தோசை
முடக்கத்தான் தோசை
முடக்கத்தான் தோசை







No comments:

Post a Comment