Search This Blog

Sunday, September 28, 2014

Thinai Payasam

#தினைபாயசம் : பழங்காலம் தொட்டு உபயோகத்தில் இருக்கும் ஒரு #சிறுதானியம் தினையாகும். #தினை கொண்டு முன்பே ஒரு
பால் பாயசம் செய்துள்ளோம். இந்த முறை வாங்கிய தினை நன்கு ஊறவைத்த பின்னர் எவ்வளவு அரைத்தாலும் உமி தங்குகிறது. மேலும் முழுங்கும் போது தொண்டையில் மாட்டிக்கொள்கிறது. அதனால் வேறொரு முறையில் முயற்சி செய்து பார்த்தேன். அதனை இங்கு பதிவேற்றுகிறேன்.

தினை பாயசம்


தேவையான பொருட்கள் :
1/4 கப்                             தினை
1 கப்                                 பால்
1 Tbsp                               சேமியா வறுத்தது
1/4 கப்                             சர்க்கரை [ அட்ஜஸ்ட் ]
1 சிட்டிகை                   உப்பு
1/4 Tsp                             ஜாதிக்காய் அல்லது ஏலக்காய் பொடி
4 அ 5                              குங்குமப்பூ
1 அ 2                              பாதாம் பருப்பு

செய்முறை :
தினையை கழுவி 2 அல்லது 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
குறிப்பிட்ட மணி நேரம் கழித்து மிக்சியில் தண்ணீர் விட்டு அரைத்து ஒரு டீ வடிக்கட்டியின் மூலம் வடிகட்டவும்.
தினை தானியம் [ foxtail millet ]

வடிகட்டியதை மற்றுமொரு முறை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து மறுபடியும் அதே பாத்திரத்தில் வடி கட்டிக்கொள்ளவும்.
மூன்றாவது முறையும் மிக்ஸியில் அரைத்து பால் எடுத்து அதே பாத்திரத்தில் வடி கட்டவும்.
வடிகட்டிய கரைசல் பால் போல இருக்கும்.
இதனை தினை பால் என்று இனி அழைக்கலாம்.

டீ வடிகட்டியில் தங்கும் தினை உமியை தூக்கி எறிந்து விடவும்.
தினை பால் தினை உமி

பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
அடுப்பில் மிதமான தீயில் சூடாக்கவும்.
பால் பொங்கியவுடன் தீயை குறைத்து தினைபால்  சேர்த்து கரண்டியால் விடாமல் கலக்கவும்.
இல்லாவிடில் பாத்திரத்தில் அடி பிடித்து விடும்.
கலக்கிகொண்டே இருக்கும் போது பால் பளபளப்பாக மாறி கஞ்சி பதத்திற்கு வரும்.

பாலில் தினை பால் சேர்த்து காய்ச்சவும்

இந்த தருணத்தில் சேமியாவை சேர்த்து கலக்கவும்.
சேமியா சிறிது நேரத்திலேயே வெந்து விடும்.
சேமியா  வெந்த பிறகு சர்க்கரையை சேர்த்து கலக்கி 4 அல்லது 5 நிமிடங்கள் சிறிய தீயில் கொதிக்கவிடவும்.
கடைசியாக பாயசத்தில் வாசனைக்காக ஜாதிக்காய் அல்லது ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

பாயசத்தில் வாசனைக்காக ஜாதிக்காய் அல்லது ஏலக்காய் பொடி சேர்க்கவும்

பரிமாறும் கிண்ணத்தில் ஊற்றி மேலே குங்குமப்பூவையும் பாதாமை சீவி போட்டும் அருந்தவும்.

தினை பாயசம்

சிறு பிள்ளைகளுக்கு கொடுக்கப் படும் Farex போன்ற சுவையுடன் இருக்கும்.
மிக மிக அருமையான மணமும் சுவையும் கொண்டது இந்த பாயசம்!!
தினையில் செய்யப்படும் மற்ற அனைத்து உணவுப் பொருட்களில் எனக்கு மிகவும் பிடித்தது தினை பாயசம்தான்!!!...




மேலும் சில உணவு குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
திணை பால் பாயாசம் தினை பொட்டுக்கடலை உருண்டை தினை மாவு உருண்டை காரட் தினை பாயசம்






No comments:

Post a Comment