#கேழ்வரகுஇனிப்புகுழிபணியாரம் : #கேழ்வரகு #சிறுதானியம் வகைகளுள் ஒன்று. கேழ்வரகை கேப்பை என்றும் கேவுரு என்றும் பேச்சு வழக்கில் கூறப்படுகிறது. இந்த சிறு தானியத்தை பொதுவாக #ராகி என்றும் #FingerMillet என்றும் ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.
கேழ்வரகில் அரிசி மற்றும் கோதுமையை காட்டிலும் அதிக அளவு கால்சியம் சத்து நிறைந்துள்ளது. புரதம், இரும்பு சத்து, நார்சத்து, பாஸ்பரஸ் மற்றும் விட்டமின்கள் அதிக அளவில் கொண்டுள்ளது.
இத்தகைய இன்றியமையாத சத்துக்கள் நிறைந்துள்ள கேழ்வரகை தினமும் நமது உணவில் ஏதாவது ஒரு விதத்தில் சேர்த்துக்கொள்வது மிக மிக அவசியம்.
இன்று இதனை கொண்டு ஒரு இனிப்பு பணியாரம் செய்யும் முறையை காண்போம்.
12 முதல் 15 குழி பணியாரம் தயாரிக்கலாம்.
கேழ்வரகில் அரிசி மற்றும் கோதுமையை காட்டிலும் அதிக அளவு கால்சியம் சத்து நிறைந்துள்ளது. புரதம், இரும்பு சத்து, நார்சத்து, பாஸ்பரஸ் மற்றும் விட்டமின்கள் அதிக அளவில் கொண்டுள்ளது.
இத்தகைய இன்றியமையாத சத்துக்கள் நிறைந்துள்ள கேழ்வரகை தினமும் நமது உணவில் ஏதாவது ஒரு விதத்தில் சேர்த்துக்கொள்வது மிக மிக அவசியம்.
இன்று இதனை கொண்டு ஒரு இனிப்பு பணியாரம் செய்யும் முறையை காண்போம்.
12 முதல் 15 குழி பணியாரம் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள் : | |
---|---|
3/4 கப் | கேழ்வரகு மாவு [கேவுரு மாவு ] |
1/2 கப் | ரவா [ Sooji ] |
1 Tbsp | பாப்பரை மாவு [ buckwheat flour ]* |
2 | வாழைப்பழம் பழுத்தது |
1/2 cup | வெல்லம் [ அட்ஜஸ்ட் ] |
2 | ஏலக்காய் |
சிறு துண்டு | ஜாதிக்காய் |
ஒரு சிட்டிகை | உப்பு |
2 சிட்டிகை | சமையல் சோடா |
குழிபணியாரம் சுட்டெடுக்க தேவையான நல்லெண்ணெய் மற்றும் நெய்.
*பாப்பரை மாவுக்கு பதில் கோதுமை மாவை உபயோகப்படுத்தலாம்.
செய்முறை :
ஏலக்காய் மற்றும் ஜாதிக்காயை சிறிது சர்க்கரை சேர்த்து பொடித்து எடுத்து வைக்கவும்.
வெல்லத்தை தூளாக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
அரை கப் தண்ணீர் விட்டு அடுப்பில் மிதமான தீயில் சூடாக்கவும்.
ஒரு கரண்டி கொண்டு கலக்கி வெல்லத்தை கரைத்து விடவும்.
வடிகட்டி ஆற விடவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, ரவா, பாப்பரை மாவு, உப்பு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.
அதில் தயார் செய்து வைத்துள்ள வெல்ல கரைசலை ஊற்றி கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.
மாவு தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
அப்போதுதான் ரவா ஊறிய பிறகு இட்லி மாவு பதத்திற்கு வந்து விடும்.
வாழை பழத்தை மிக்ஸியில் கூழாக அரைத்து மாவில் சேர்க்கவும்.
நன்கு கலந்து விடவும்.
கரைத்த மாவை ஒரு அரை மணி நேரம் ஊற விடவும்.
அரை மணி நேரம் கழித்து அடுப்பில் குழி பணியாற கல்லை மிதமான தீயில் சூடாக்கவும்.
ஒவ்வொரு குழியிலும் நல்லெண்ணெய் 1/4 தேக்கரண்டியும் நெய் 1/4 தேக்கரண்டியும் விடவும்.
மாவில் ஏலக்காய்-ஜாதிக்காய் பொடி மற்றும் சமையல் சோடாவை சேர்த்து கலக்கவும்.
குழிபணியார கல் சூடானதும் ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றவும்.
ஊற்றிய மாவின் மேல் எண்ணெய் நெய் கலவையை ஓரிரண்டு சொட்டுகள் விடவும்.
ஓரங்கள் சிவக்க ஆரம்பித்ததும் ஒரு தேக்கரண்டியால் குழி பணியாரத்தை திருப்பி விடவும்.
இரு பக்கமும் நன்கு சிவக்க வெந்தவுடன் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
மறுபடியும் எண்ணெய்-நெய் கலவையை விட்டு மாவு நிரப்பி மீண்டும் ஒரு ஈடு குழி பணியாரம் சுட்டெடுக்கவும்.
ஆறிய பிறகு சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.
மிக மிக சத்தான சுவையான கேழ்வரகு இனிப்பு குழி பணியாரத்தை செய்து பலனடையவும்!!
மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
|
|
|
||||||
|
|
No comments:
Post a Comment