Search This Blog

Sunday, May 3, 2015

Samai-Buckwheat-Payasam

#சாமைபாப்பரைபாயசம் : #சாமைஅரிசி சுருக்கமாக #சாமை #சிறுதானியம் வகைகளுள் ஒன்று. இத்தானியத்தின் அளவு மற்ற எல்லா சிறு தானியத்தை விட மிக மிக சிறியது. அதனால்தானோ இதனை #LittleMillet என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். தானியத்தின்  அளவுதான் சிறியது ஆனால் இதன் கீர்த்தியோ மிக மிக பெரியது. மற்ற சிறுதானியங்கள், அரிசி மற்றும் கோதுமையை காட்டிலும் சாமையில் நார்சத்து மிக அதிக அளவில் நிறைந்துள்ளது. அதனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கும் மலசிக்கலால் அவதிப் படுபவர்களுக்கும் ஏற்ற உணவாகும். அதே போல இரும்பு சத்தும் அபரிமிதமாக உள்ளது. அதனால் இரத்த சோகை உடையவர்களும் பெண்களும் இதனை உணவில் பிரத்யேகமாக சேர்த்து கொள்வது நலம்.
#பாப்பரை ஆங்கிலத்தில் #Buckwheat என அழைக்கிறார்கள். இது ஒரு தாவரத்தின் விதையாகும். புரத சத்து மிக அதிக அளவில் கொண்ட ஒரு உணவுப்பொருள் ஆகும்.

இவ்விரண்டையும் சேர்த்து தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து சுவையான பாயசம் செய்வது எப்படி என காண்போம்.

சாமை பாப்பரை பாயசம்


தேவையான பொருட்கள் :
1/4 கப்சாமை [ Little Millet ]
1 Tbspபாப்பரை [ Buckwheat ]
1 சிட்டிகைஉப்பு
1/3 கப்தேங்காய் பால்
1/4 கப்வெல்லம் [ adjust ]
அரைக்க :
3 Tspதேங்காய் துருவல்
1 Tspகசகசா [ poppy seeds ]
2ஏலக்காய்
சிறு துண்டுஜாதிக்காய்
2 or 3முந்திரி பருப்பு
அலங்கரிக்க :
2 Tspபாதாம் துகள்கள்

செய்முறை :
சாமை மற்றும் பாப்பரை இரண்டையும் ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். 
நன்கு கழுவிய பிறகு 3/4 கப் தண்ணீர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். 
அடுப்பில் குக்கரை வைத்து ஒரு கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
கிண்ணத்தை குக்கரினுள் வைக்கவும்.
குக்கரை மூடி வெயிட் வைத்து அதிக தீயில் மூன்று விசில் வரும் வரை வைத்திருக்கவும்.
மூன்று விசில் வந்த பிறகு தீயை குறைத்து மேலும் 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
இதற்குள் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் நன்கு மைய அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
வெல்லத்தை 1/4 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடாக்கி கரைக்கவும்.
பிறகு வடிகட்டி வைக்கவும்.
வேக வைத்த வரகரிசியை கரண்டியால் மசித்து 1/2 கப் தண்ணீருடன் அடுப்பில் குறைந்த தீயில் சூடாக்கவும்.
வெல்ல கரைசலை விட்டு கலக்கவும்.
2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
Buckwheat Samai Arisi { Little Millet }
பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து 5 - 8 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
ஒன்று சேர்ந்து பதமாக வந்தவுடன் தேங்காய் பாலை சேர்க்கவும்.
சுமார் 2 நிமிடங்கள் சிறிய தீயில் கொதிக்க விடவும்.
அடுப்பை அணைத்து விட்டு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
பாதாம் துகள்களை தூவி பரிமாறவும்.
சுவையான சமை பாப்பரை பாயசம் தயார்.
கம்பு பகோடா அல்லது பஜ்ஜி அல்லது வடை ஆகியவற்றுடன் சுவைக்கவும்.

Samai Buckwheat Payasam
  • தேங்காயை சிறு சிறு துண்டுகளாக்கி நெய்யில் வறுத்து பாயசத்தில் சேர்க்கலாம்.
  • பொதுவாக பாயசத்தின் நிறம் வெல்லத்தின் நிறத்தை பொருத்தே அமையும்.
  • வெல்லத்தின் அளவை சுவைக்கேற்றவாறு கூட்டி குறைத்துக் கொள்ளலாம்.


மற்ற சில சமையல் குறிப்புகள் 
வரகரிசி  பாயசம்
வரகரிசி  பாயசம்
சாமை அரிசி பாயசம்
சாமை அரிசி பாயசம்
தினை பால் பாயசம்
தினை பால் பாயசம்





No comments:

Post a Comment