Search This Blog

Monday, May 25, 2015

Thinai Pongal

#தினைபொங்கல் : #தினைஅரிசி அல்லது சுருக்கமாக #தினை #சிறுதானியம் வகைகளுள் ஒன்றாகும். தினை அரிசியில் மற்ற சிறு தானியங்களை போல புரோட்டீன் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளது. முக்கியமாக இரும்பு சத்தும் துத்தநாக சத்தும் அதிக அளவில் நிறைந்துள்ளன. இரும்பு சத்து குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக மிக இன்றியமையாத ஒன்றாகும். அதனால் அடிக்கடி நமது உணவில் தினையை சேர்த்துக் கொள்வது நல்லது.
தினையை உபயோகித்து சில இனிப்பு வகைகளும் பாயச வகைகளும் செய்யும் முறையை கண்டோம். இப்போது இதை உபயோகித்து சுவையான பொங்கல் செய்முறையை காண்போம்.

Thinai Pongal [ Foxtail millet pongal ]

தேவையான பொருட்கள் :
3/4 கப்தினை [ Foxtail millet ]
1/4 கப்பயத்தம் பருப்பு
1 Tspமிளகு
1 1/2 Tspசீரகம்
1/2 Tspமிளகுத்தூள்
1 or 2பச்சை மிளகாய் [ optional ]
10 - 15கறுவேப்பிலை
3 clovesபூண்டு, பொடியாக நறுக்கவும்
1 Tspஇஞ்சி பொடியாக நறுக்கியது
தாளிக்க :
4 to 5முந்திரி பருப்பு
1 Tspசீரகம்
1 Tspமிளகு
8 - 10கறுவேப்பிலை
3 Tspநெய்
செய்முறை :
தினை  அரிசியுடன்  பருப்பையும் ஒன்றாக  குக்கரில் எடுத்துக் கொள்ளவும்.
இரண்டு முறை நன்றாக கழுவிய பின்னர் மற்ற பொருட்களையும் சேர்க்கவும்.
3 1/2 கப் தண்ணீர்ஊற்றவும்.
ஒரு கரண்டியினால் கலக்கி விடவும்.
குக்கரை மூடி வெயிட்டை பொருத்தவும்.
அடுப்பில் அதிக தீயில் 3 விசில் வரை வேக விடவும்.
மேலும் 5 நிமிடங்கள் சிறிய தீயில் வேக வைத்து இறக்கவும்.
ஆவி அடங்கியவுடன் மூடியை திறந்து கரண்டியினால் கிண்டவும்.
எண்ணெய்  சட்டியை அடுப்பில் மிதமான தீயில் வைத்து நெய் ஊற்றி முதலில் முந்திரி துண்டுகளை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு சீரகம், மிளகு மற்றும் கருவப்பிலை வறுத்து எடுக்கவும்.
வறுத்த பொருட்களை பொங்கலுடன் சேர்த்து கிண்டவும்.
சூடான சுவையான தினை பொங்கல் தயார்.
பரிமாறும் தட்டில் இட்டு அதன் மேல் நெய் விட்டு துவையலுடன் பரிமாறவும்.
அடுப்பிலிருந்து இறக்கியவுடன் சூடாக நெய் ஒன்றிரண்டு தேக்கரண்டி சேர்த்து சாப்பிட்டால் சுவையே அலாதிதான்.

Thinai Pongal [ Foxtail millet pongal ]




முயற்சி செய்ய மேலும் சில சமையல் குறிப்புகள்
தினை பழ கஸ்டர்ட்
தினை பழ
கஸ்டர்ட்
தினை குழி பணியாரம்
தினை குழி
பணியாரம்
தினை இனிப்பு உருண்டை
தினை இனிப்பு 
உருண்டை
தினை காரட் பாயசம்
தினை காரட்
பாயசம்




No comments:

Post a Comment