#மாங்காய்சட்னி 1: கோடைகாலக் காயான #மாங்காய் கொண்டு வித விதமான உணவுகளை செய்து சுவைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் இன்று இட்லி, தோசை, பொங்கல் மற்றும் உப்புமா ஆகியவற்றுடன் தொட்டுக்கொண்டு சுவைக்கக் கூடிய ஒரு #சட்னி யை இங்கு பார்க்கப்போகிறோம். சென்ற முறை செய்து சுவைத்த மாங்காய் சட்னி யை விட சிறிது வித்தியாசமானது இந்த சட்னி.
தேவையான பொருட்கள் : | |
---|---|
1/4 கப் | மாங்காய் செதுக்கியது |
1/2 கப் | தேங்காய் துருவல் |
3 or 4 | சிகப்பு காய்ந்த மிளகாய் |
2 Tsp | கடலை பருப்பு |
1/4 Tsp | பெருங்காயத்தூள் |
1/2 Tsp | எண்ணெய் |
3/4 Tsp | உப்பு [ adjust ] |
To Temper : | |
1/2 Tsp | எண்ணெய் |
1/2 Tsp | கடுகு |
8 - 10 | கருவேப்பிலை |
செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடான பின்னர் மிளகாய் மற்றும் கடலை பருப்பை சிவக்க வறுக்கவும்.
கடைசியாக பெருங்காய தூளை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
வறுத்த பருப்பு, மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றுடன் கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களை மிக்ஸியில் போட்டு முதலில் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிது கொரகொரப்பாக
அரைக்கவும்.
அரைத்த சட்னியை ஒரு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
அடுப்பில் மறுபடியும் வாணலியை சூடாக்கி எண்ணெய் விட்டு கடுகு மற்றும் கறுவேப்பிலை தாளித்து சட்னியின் மேல் கொட்டவும்.
புளிப்பும் காரமும் கொண்ட சுவையான மாங்காய் சட்னி தயார்.
மேலும் சில சட்னி சமையல் குறிப்புகள்
|
|
|
|
No comments:
Post a Comment