Search This Blog

Saturday, May 16, 2015

Kambu Idli

#கம்புஇட்லி : #கம்பு #சிறுதானியம் வகைகளுள் ஒன்றாகும். இந்தியாவிலேயே மிக அதிகமாக பயிரிடப்படும் சிறுதானிய வகை ஆகும்.
இதனை உபயோகித்து இட்லி செய்யும் முறையை இங்கு காண்போம்.

கம்பு இட்லி

தேவையான பொருட்கள் :
1 cupஇட்லி அரிசி
1 cupகம்பு
1/2 cupஉளுத்தம் பருப்பு
1 Tspவெந்தயம்
2 Tspஉப்பு [ Adjust ]

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் அரிசியையும் கம்பையும் எடுத்துக்கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம் எடுத்துக்கொள்ளவும்.
நன்கு இரண்டு மூன்று முறை கழுவிய பின்னர் தனித்தனியாக மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
மூன்று மணி நேரத்திற்குப் பிறகு மாவரைக்கும் இயந்திரத்தை சுத்தமாக தண்ணீர் விட்டு கழுவவும்.
முதலில் உளுந்தை அவ்வப்போது தண்ணீர் சிறுக சிறுகத் தெளித்து நன்கு உப்பி வரும்வரை அரைத்து எடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றி விடவும்.
உளுந்து மாவு சிறிதளவு எடுத்து தண்ணீரில் போட்டால் மேலே மிதக்கும்.
மேலும் மாவின் நிறமும் வெளுத்து வரும்.
அதுதான் சரியான பதம்.

பின்னர் அரிசி கம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த அரிசி சோள மாவை எடுத்து பாத்திரத்திற்கு மாற்றும் முன்னர் உப்பு சேர்த்து ஓரிரண்டு சுற்றுக்கள் சுற்ற விடவும்.
மாவரைக்கும் இயந்திரத்தை அணைத்து விட்டு உளுந்து மாவு எடுத்து வைத்துள்ள பாத்திரத்தில் எடுக்கவும்.

மாவரைக்கும் இயந்திரத்தில் ஒரு Tbsp அளவு தண்ணீர் விட்டு ஒட்டியிருக்கும் மாவை கழுவி அரைத்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும்.
கையினால் நன்கு கலந்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.
அதாவது முதல் நாள் மாலை மாவை அரைத்து வைத்தால் மறு நாள் இட்லி தயாரிக்கலாம்.

இட்லி பானையில் 3 கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
இட்லி தட்டின் குழிகளில் ஒரு சொட்டு நல்லெண்ணெய் விடவும்.
எல்லா இடங்களிலும் பரவும் படி தடவவும்.
மாவை ஒரு குழி கரண்டி கொண்டு நன்கு கலக்கி விடவும்.
இப்போது குழிகளில் மாவை நிரப்பவும்.
இட்லி பானையில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் இட்லி தட்டை உள்ளே வைத்து மூடவும்.
ஆவியில் எட்டு நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

குழிகளிலிருந்து இட்லி ஒட்டிக்கொள்ளாமல் எடுக்க ஒவ்வொரு இட்லியின் ஓரத்தை சுற்றி நீர் விட்டு பிறகு தேக்கரண்டியால் எடுக்கவும். தேக்கரண்டியை அடிக்கடி தண்ணீரால் ஈரப்படுத்திக்கொள்ளவும்.
கம்பு இட்லி
கம்பு இட்லி கம்பு இட்லி
குறிப்பு :
மாவு எடுத்து வைக்கும் பாத்திரம் பெரியதாக இருப்பது அவசியம்.
ஏனெனில் புளித்து மாவு இரண்டு மடங்காய உப்பி வரும்.

இட்லி பானையினுள் அல்லது குக்கரினுள்  இரண்டு அல்லது அதற்கு மேலும் ஒன்றன் மேல் ஒன்றாக தட்டுக்களில் மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கலாம்.
அவ்வாறு செய்யும் போது மேலே உள்ள தட்டிலிருந்து தண்ணீர் கீழே உள்ள தட்டின் இட்லியின் மேல் விழுந்து இட்லியை நச நசவென ஆகி விடும்.
அதை தடுக்க இட்லி தட்டில் மாவு நிரப்பிய பிறகு மாவின் மேலும் ஒரு ஈரமான துணியை விரித்து உள்ளே வைக்க வேண்டும். அப்போதுதான் மேல் தட்டிலிருந்து விழும் தண்ணீரை இந்த துணி உறிஞ்சிக்கொள்ளும்.





மற்றும் சில சமையல் குறிப்புகள்
குதிரைவாலி இட்லி
குதிரைவாலி இட்லி
ரவா இட்லி
ரவா இட்லி
ரவா பாப்பரை இட்லி
ரவா பாப்பரை இட்லி
இட்லி
இட்லி
சோள இட்லி
சோள இட்லி
கள்ளாப்பம்
கள்ளாப்பம்

தொட்டுக்கொண்டு சாப்பிட

தொட்டுக்க






இந்த சமையல் செய்முறை விளக்கம் மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.



1 comment:

  1. கம்பி இட்லிக்கு IR20புழுங்கல் அரிசி உபயோகிக்கலாமா? இட்லி அரிசி க்கு பதில்.

    ReplyDelete