Search This Blog

Friday, November 28, 2014

Dulce de leche

Dulce de leche : #Dulcedeleche,  போர்ச்சுகீசிய வார்த்தை ஆகும். இந்த வார்த்தை பாலிலிருந்து தயாரிக்கப்படும்  இனிப்பை குறிப்பிடுவதாகும். பாலை சுண்டக் காய்ச்சிக்கொண்டே இருந்தால் அதன் நிறம் மாறி சாக்லேட் போல இறுகி வரும்.  மிக மிக சுவையானதொரு இனிப்பாகும். ஒரு முறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தோன்றும். இந்த இனிப்பு தென் அமெரிக்க நாடுகளில் மிக பிரபலம். மேலும் அறிய கீழே கொடுக்கப் பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.

Dulce de leche

வெளிநாட்டில் வசிக்கும் எனது மகள் மூலமாக முதலில் இந்த இனிப்பை பற்றி அறிந்து கொண்டேன். அவள் பாலை  சுமார் இரண்டு மணிநேரம் காய்ச்சி இந்த இனிப்பை செய்ததாக கூறினாள். பிறகு milkmaid tin கடைகளில் கிடைக்கிறதல்லவா அதனை கொண்டு மிக எளிதாக  விடலாம் என்று செய்முறையை கூறினாள். அதனை பின்பற்றி செய்து பார்த்தேன். செய்த பின் டின்னை திறந்து ஒரு முறை  நக்கிப் பார்த்தேன். மிக அருமையாக இருந்தது. மறு படியும் சுவைக்கத் தூண்டியது!! சற்றேறக்குறைய கால் பகுதியை  நானே காலி செய்து விட்டேன். இனி செய்முறையை பார்ப்போம்.

dulce de leche

தேவையானது ஒரு milkmaid tin .

செய்முறை :

டின்னை திறக்க வேண்டாம். மேலே பிளாஸ்டிக் மூடி ஏதேனும் இருந்தால் அதனை அகற்றி விடவும்.
குக்கரில் டின்னை படுக்கப் போடவும்.
டின் மூழ்கி அதற்கு மேலும் 1 cm உயரம் வரை நீரால் நிரப்பவும்.


குக்கரை மூடி வெயிட் பொருத்தி அதிக தீயில் சூடாக்கவும்.
ஒரு விசில் வந்த பிறகு தீயை  குறைத்து விடவும்.
இவ்வாறு  குறைந்த தீயில் 25 நிமிடங்கள்  வேக விடவும்.


பிறகு அடுப்பை  விட்டு இறக்கி ஆவி அடங்கும் வரை காத்திருக்கவும்.
பின்னரும் தண்ணீரின் சூடு சிறிது குறையும் வரை காத்திருக்கவும்.
டின்னை எடுத்து வெளியில் வைத்த பின்னரும் அதன் சூடு முழுவதுமாக ஆறிய பின்னர் திறக்கவும்.
ஆஹா!! அருமையான சாக்லேட் நிறத்துடன் கூடிய இனிப்பு தயார்.

dulce de leche

இன்னுமா காத்துகொண்டிருக்கிரீர்கள்!! சுவைத்து பாருங்கள். நீ  நான் என்று எல்லோரும் போட்டி போட ஆரம்பித்து விடுவார்கள்.
இதனை ஐஸ்க்ரீம், கேக், போன்றவற்றினுடன் சுவைக்கலாம்.
செய்து பார்த்த பின் கூறவும்!!









No comments:

Post a Comment