Search This Blog

Monday, November 17, 2014

Kothavarangai-Paruppu-Usili

#கொத்தவரங்காய்பருப்புசிலி : #கொத்தவரங்காய் அல்லது #கொத்தவரைக்காய் #பருப்புசிலி செய்ய மிகவும் ஏற்றதாகும்.
இதன் செய்முறையை இரு பாகங்களாக பிரிக்கலாம். பருப்பை ஊற வைத்து மசாலாவுடன் சேர்த்து அரைத்து ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும்.
பிறகு வேக வைத்த கொத்தவரங்காயுடன் அடுப்பில் பிரட்டி எடுக்க வேண்டும்.
இனி விரிவாக காண்போம்.

கொத்தவரங்காய் பருப்புசிலி [ Cluster Beans Lentil Masala Curry ]

தேவையான பொருட்கள் :
1/4 kgகொத்தவரங்காய் [ Cluster Beans ]
1 சிட்டிகைமஞ்சத்தூள்
1/2 Tspசாம்பார் பொடி
1/2 Tspஉப்பு [ adjust ]
ஊறவைக்க வேண்டியவை :
2 Tbspதுவரம் பருப்பு
2 Tbspகடலை பருப்பு
மசாலாவிற்கு :
3 Tspதேங்காய் துறுவல்
2 or 3சிகப்பு மிளகாய்
1 Tspசீரகம்
1/2 Tspசோம்பு
1/2 Tspமல்லித்தூள்
2 பற்கள்பூண்டு 
4 or 5சின்ன வெங்காயம்
1வெங்காயம்
10கறுவேப்பிலை
20 to 25புதினா இலைகள்
1 Tbspகொத்தமல்லி தழை
1/2 Tspஉப்பு
தாளிக்க :
1 Tspகடுகு
1 Tspஉளுத்தம் பருப்பு
2 Tspஎண்ணெய்


அலங்கரிக்க தேவையான கொத்தமல்லி

செய்முறை :
ஊற வைத்த பருப்பு வெங்காயம் நீங்கலாக மற்றவற்றை மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
சிறிது தண்ணீர் [ மிகவும் குறைவாக ] பின்னர் சேர்த்து நன்கு அரைக்கவும்.


இப்போது தண்ணீரை வடித்து விட்டு பருப்பு மற்றும் வெங்காயத்தை சேர்க்கவும்.
ஒன்றிரண்டாக உடைபடுமாறு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.  

இட்லி பானையில் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
இட்லி தட்டில் எண்ணெய் தடவி அரைத்து வைத்துள்ள பருப்பு மசாலாவை பரப்பி வைக்கவும்.
இட்லி பானையில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதனுள்ளே வைத்து 5 முதல் 7 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.


வெந்ததும் ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.



ஆவியில் மசாலா வெந்து கொண்டிருக்கும் போது மற்றொரு அடுப்பில் குக்கரில் அரிந்து வைத்துள்ள கொத்தவரங்காயை சாம்பார் பொடி, உப்பு, மஞ்சத்தூள் ஆகியவற்றுடன் 1/4 கப் தண்ணீர் விட்டு மூடி போட்டு  வேகவிடவும்.
ஒரு விசில் வந்ததும் உடனே நிறுத்தி ஆவியை வெளியேற்றி விட்டு வெந்த காயை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

இப்போது அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்கவிட்டு உளுத்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.
உளுத்தம் பருப்பு சிவந்தவுடன் காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அதற்குப் பிறகு ஆவியில் வேக வைத்துள்ள பருப்பு மசாலாவை சேர்க்கவும்.
கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும்.
தண்ணீர் வற்றி சிறிது சிவந்து வரும் வரை அடுப்பில் சிறிய தீயில் வைத்திருக்கவும்.
கொத்தவரங்காய் பருப்புசிலி

அடுப்பை அணைத்துவிட்டு ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
மிக ருசியான பருப்புசிலி தயார். சாம்பார் மற்றும் ரசம் சாதத்திற்கு ஏற்ற கறியாகும்.
கொத்தவரங்காய் பருப்புசிலி

No comments:

Post a Comment