#காய்கறிகொத்தமல்லிகூட்டு [ #VegetableCorianderLentil ] : இந்த கூட்டை சிலர் #பொரித்தகுழம்பு என்றும், சிலர் #புளில்லாகறி என்றும் கூறுவார்கள். சில காய்கறிகள்தான் இந்த கூட்டு செய்வதற்கு உகந்ததாகும். அவையாதெனில், கத்தரிக்காய், பீர்கங்காய், முருங்கைக்காய், அவரைக்காய், மற்றும் பலாக்கொட்டை. இவற்றில் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்தும் அல்லது எவையெல்லாம் வீட்டில் இருக்கிறதோ அவற்றை கொண்டு கூட்டு செய்யலாம்.
இனி செய்முறையை காண்போம்.
ஒன்று முதல் 1 1/2 கப் கூட்டு செய்யலாம்.
இரண்டு முதல் மூன்று பேர் சாப்பிட சரியாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
கத்தரிக்காய் : 1 சிறியது, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
முருங்கைக்காய் : 1/2, 1 அங்குல துண்டுகளாக்கவும்.
பீர்கங்காய் : 1/2, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
அவரைக்காய் : 6, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
கொத்தமல்லி தழை 1/4 கப் பொடியாக நறுக்கியது
வெங்காயம் : 1 சிறியது, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
பூண்டு : 2 பற்கள், பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
பயத்தம் பருப்பு : 1/4 கப்
மஞ்சத்தூள் : 1 சிட்டிகை
சாம்பார் தூள் : 3/4 Tsp
அரைப்பதற்கு :
தேங்காய் துருவியது : 3 Tsp
சீரகம் : 1/4 Tsp
மிளகு : 3 அ 4 [ விரும்பினால் ]
அரிசிமாவு : 1/4 Tsp
தாளிக்க :
வெங்காய வடவம் சிறிது
எண்ணெய் : 1/2 Tsp
செய்முறை :
பயத்தம் பருப்பை கழுவி 1/2 கப் தண்ணீர் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சத்தூள் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
அதாவது அதிக தீயில் 1 விசில் வந்தவுடன் தீயை குறைத்து 3 நிமிடங்கள் வேக விடவும்.
ஆவி அடங்கிய பிறகு ஒரு கிண்ணத்தில் எடுத்து தனியே வைக்கவும்.
அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் விட்டு, சாம்பார் தூள், மஞ்சத்தூள், உப்பு, வெங்காயம், பூண்டு மற்றும் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து வேக விடவும்.
வெந்தவுடன் வேகவைத்த பருப்பு, கொத்தமல்லி மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் 3 முதல் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
மிகுந்த நேரம் கொதிக்க தேவையில்லை. ஒன்று சேர்ந்தாற் போல வந்தால் போதும்.
கீழே இறக்கி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி வெங்காய வடவம் தாளித்து கூட்டின் மேல் சேர்க்கவும்.
சுவையும் மணமும் நிறைந்த புளில்லாகறி தயார்.
சூடான சாதத்தின் மேல் ஊற்றி சிறிது நெய் சேர்த்து பிசைந்து பொரித்த வெங்காய வற்றல் உடன் சுவைத்தால் ஆஹா! ஆஹஅஹா!!... அபாரமாக இருக்கும். செய்து சுவைத்து பார்க்கவும்.

No comments:
Post a Comment