Search This Blog

Tuesday, November 4, 2014

Moulded Chocolate

#சாக்லேட் : சாக்லேட் பிடிக்காதவர்கள் யார் இருக்ககூடும்!! அதுவும் கோகோ சாக்லேட் என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார். மிகுந்த விலை குடுத்து வாங்கப்படும் இந்த சாக்லேட்டை வீட்டிலேயே அருமையாக செய்யலாம்.
எஸ்சென்ஸ் மற்றும் கேக் செய்வதற்கு தேவையான பொருட்கள் விற்கப்படும் கடைகளில் Dark chocolate compound கவரில் அடைக்கப்பட்டு நீள் சதுர கட்டிகளாக விற்கப்படுகிறது. இது அரை கிலோ பாக்கேட்டுகளாகத்தான் கிடைக்கும். அதில் சேர்க்கப்பட்டுள்ள கோகோவின் சதவிகிதத்திற்கு ஏற்ப சுவை இருக்கும். கோகோவின் அளவு அதிகமாக இருப்பின் சிறிது கசப்புத்தன்மை அதிகமாக இருக்கும். அதனால் அவரவர் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்து வாங்கிக் கொள்ளவும்.
சாக்லேட் அச்சு பிளாஸ்டிக் தட்டுகளும் தேவை இதனை செய்வதற்கு.

கோகோ சாக்லேட்

இனி எப்படி செய்வது என பார்க்கலாம்.


தேவையானபொருட்கள் 
500 gmDark compound or Dark chocolate
50 gmபாதாம் பருப்பு
50 gmநிலகடலை [ ground nut ]
50 gmகிஸ்மிஸ் திராட்சை
1 TbspEdible confetti or sprinkles

செய்முறை :
வீட்டில் எந்த பருப்பு இருக்கிறதோ அதனை எடுத்துக்கொள்ளவும்.
பாதாம் பருப்பை நீள வாக்கில் இரண்டாக பிளந்து வைக்கவும்.
நிலகடலை எடுத்திருந்தால் வறுத்து தோல் நீக்கி இரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும்.
கிஸ்மிஸ் திராட்சை [ உலர்ந்த திராட்சை ] எடுத்து தயாராக வைக்கவும்.
இவை எதுவுமே கை வசம் இல்லையென்றால் மேரி பிஸ்கட்டை அச்சின் அளவுக்கு தக்கபடி சிறு துண்டுகளாகி தனியே வைக்கவும்.
இவற்றை எடுத்துக்கொண்ட அச்சின் குழிகளில் ஒன்று அல்லது இரண்டாக போட்டு தயாராக வைக்கவும்.


இப்போது dark chocolate கட்டியை உருக்க வண்டும்.
அடுப்பில் ஒரு சிறிது குழிவான பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கவும்.
குறைந்த தீயில் சூடாக்கவும். தண்ணீர் சூடாக இருக்க வேண்டும். கொதிக்கும் நிலைக்கு வரக்கூடாது.
சாக்லட் கட்டியை உடைத்து வேறொரு சிறிய பாத்திரத்தில் போடவும்.
இந்த பாத்திரம் ஈரம் இல்லாமல் நன்கு காய்ந்து இருக்க வேண்டும்.ஒரு சிறு துளி நீர் இருந்தாலும் சாக்லேட் ஒழுங்காக வராது.




சாக்லேட் பாத்திரத்தை சூடாகிக்கொண்டிருக்கும் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் வைத்து சூடாக்கவும்.
ஒரு நீளமான தேக்கரண்டியால் கிளறவும்.
இவ்வாறு கிளரும் போது தண்ணீர் சாக்லேட் பாத்திரத்தின் உள்ளே புகாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
இலேசாக உருக ஆரம்பிக்கும்.
சுடு தண்ணீர் பாத்திரத்தில் இருந்து வெளியே எடுத்து அடுப்பு மேடை மேல் வைத்து சிறிது நேரம் கிளறவும்.


மறுபடியும் அடுப்பில் சூடாகிக் கொண்டிருக்கும் சுடுநீர் உள்ள பாத்திரத்தில் சாக்லேட் பாத்திரத்தை வைத்து கிளறவும்.
முன்பை விட சாக்லேட் கட்டிகள் நன்கு உருக ஆரம்பித்து இருக்கும்.
மிகவும் சூடாகும் வரை அடுப்பில் சாக்லேட் பாத்திரத்தை வைத்திருக்ககூடாது.
மறுபடியும் அடுப்பு மேடை மேல் வைத்து கிளறவும்.
இதேபோல சாக்லேட் அனைத்தும் நன்கு உருகி பளபளப்பாகும் வரை செய்ய வேண்டும்.


சாக்லேட் முழுவதுமாக உருகி பளபளப்பான திரவமாக ஆகி விட்டது.
இனி அச்சில் நிரப்பி சாக்லேட் செய்ய வேண்டியதுதான்.
ஒரு தேக்கரண்டியில் உருகிய சாக்லேட்டை எடுத்து ஒவ்வொரு குழியாக நிரப்பவும்.
எல்லா குழிகளையும் நிரப்பிய பிறகு பிளாஸ்டிக் அச்சை மேடையின் மேல் இலேசாக தட்டவும்.
இவ்வாறு செய்வதால் ஏதேனும் காற்று குமிழிகள் உள்ளே அடைபட்டிருந்தால் வெளியேறி விடும்.


மற்றொரு முறையிலும் குழிகளில் உருக்கிய சாக்லேட்டை நிரப்பலாம்.
முதலில் சிறிது உருக்கிய dark chocolate திரவத்தை ஊற்றவும்.
பிறகு அதன் மேல் பிஸ்கட் அல்லது பருப்புகளை போடவும்.
இப்போது மறுபடியும் உருக்கிய சாக்லேட் திரவத்தால் நிரப்பவும்.
மேலே கூறியபடி ஓரிரு முறை தட்டி உள்ளே அடைபட்ட காற்றை நீக்கவும்.


இப்போது இவ்வாறு நிரப்பிய தட்டுகளை குளிர் சாதன பெட்டியினுள் வைத்து குளிர வைக்க வேண்டும்.
Freezar இல் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் குளிரூட்டினால் கீடியாகி விடும்.
அதன் பிறகு வெளியே எடுத்து தலை கீழாக திருப்பி இலேசாக மேலே தட்டினால் சாக்லேட் தனியாக வந்து விடும்.



ஒரு நல்ல ஈரமில்லாத மூடியுடன் கூடிய டப்பாவில் வைத்து குளிர் சாதன பெட்டியில் பாதுகாக்கவும்.
சுவையான சாக்லேட் தயார். நீங்களும் சுவைத்து மற்றவருக்கும் கொடுத்து மகிழவும்.

Moulded Chocolate Molded Chocolate
செய்துதான் பாருங்களேன்! தங்களுடைய பிள்ளைகளுக்கு சொல்லிகொடுத்து விடுங்கள். பிறகு அவர்களே செய்து கொள்வார்கள்!! மிக மிக இலகுவாக செய்யக்கூடிய சுவை மிக்க சாக்லேட் ஆகும்.

குறிப்பு :
dark chocolate compound போல white compound ம் கிடைக்கும்.
white compound இனிப்பாக இருக்கும். அதனால் dark compound உடன் white compound ஐ அவரவர் ருசிக்கேற்றவாறு கலந்தும் சாக்லேட் செய்யலாம். 

1 comment:

  1. சூப்பர் செய்முறை .... தெளிவான படங்கள் ... அருமையான குறிப்புகள்

    ReplyDelete