#குதிரைவாலிகொத்தமல்லிசாதம் : #குதிரைவாலி #சிறுதானியம் வகைகளுள் ஒன்றாகும். இதற்கு ஆங்கிலத்தில் Barnyard Millet என பெயர்.
இதனுடைய அறிவியல் பெயர் : Echinochloa frumantacea .
மற்ற சிறு தானியங்களை போல தாது உப்புக்கள் நிறைந்துள்ளது.
இதன் நார்சத்து மற்ற சிறு தானியங்கள் மற்றும் தானியங்களைக் காட்டிலும் அதிக அளவில் நிறைந்துள்ளது.
இதனை கொண்டு சில உணவு வகைகள் செய்யும் முறையை முன்பே பார்த்திருக்கிறோம். அவையாதெனில், குதிரைவாலி பொங்கல், குதிரைவாலி இட்லி, குதிரைவாலி வாழைப்பூ புலாவு , குதிரைவாலி உப்புமா .
இங்கு குதிரைவாலியுடன் கொத்தமல்லி சேர்த்து ஒரு #கலந்தசாதம் செய்வதெப்படி என காண்போம்.
இதனை மற்ற கலந்த சாதங்களை போல மதிய உணவிற்காக டிபன் டப்பாவில் அடைத்து எடுத்துச் செல்லலாம். நன்கு ஆற விட்ட பிறகு அடைத்து மூடி போட்டு மூடி எடுத்துச் செல்வது நலம்.
வேறு சில சமையல் குறிப்புகள் :

1/2 cup குதிரைவாலி [ Barnyard millet ]
10 சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கவும்.
or
1 வெங்காயம், பொடியாக நறுக்கவும்.
6 cloves பூண்டு, பொடியாக நறுக்கவும்.
1/2 cup கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது.
1/2 Tsp மிளகு சீரகபொடி
1/2 Tsp உப்பு
1/2 Tsp சீரகம்
2 Tsp நெய்
2 Tsp நல்லெண்ணெய் [ till / sesame oil ]
செய்முறை :
குக்கரில் அரிசியை கழுவி சேர்த்து 1 கப் தண்ணீர் விடவும்.
மூடி போட்டு வெயிட் வைத்து 3 விசில் வரும் வரை அதிக தீயில் வேக விடவும்.
பின்னர் தீயை குறைத்து 3 நிமிடங்கள் வேக விடவும்.
ஆவி அடங்கிய பின்னர் திறந்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி 1 Tsp நல்லெண்ணெய் ஊற்றி காற்றாடியின் கீழே வைத்து ஆற விடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து 1 Tsp எண்ணெய் விட்டு சீரகத்தை வெடிக்க விடவும்.
பின்னர் வெங்காயத்தையும் பூண்டையும் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
பிறகு கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும்.
மிளகு சீரகப்பொடி மற்றும் உப்பு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி விட்டு அடுப்பை அணைத்து விடவும்
இதனை ஆறவிட்ட குதிரைவாலி சாதத்தின் மேல் கொட்டவும்.
நெய் விட்டு தேக்கரண்டியல் மென்மையாக கலந்து விடவும்.
உப்பு மற்றும் மிளகு காரம் சரி பார்க்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
விருப்பமான பொரியல் அல்லது தயிர் பச்சடியுடன் சுவைக்கவும்.
இதனை மற்ற கலந்த சாதங்களை போல மதிய உணவிற்காக டிபன் டப்பாவில் அடைத்து எடுத்துச் செல்லலாம். நன்கு ஆற விட்ட பிறகு அடைத்து மூடி போட்டு மூடி எடுத்துச் செல்வது நலம்.
வேறு சில சமையல் குறிப்புகள் :
புது மாதிரி இருக்கிறதே. செய்து பார்த்து விடுவோம்.
ReplyDelete