Search This Blog

Monday, December 22, 2014

Muttaikos-Milagu-Poriyal

#முட்டைகோஸ்மிளகுபொரியல் : #முட்டைகோஸை கீரை வகைகளிலேயே சேர்ப்பது நலம். ஏனெனில் நாம் உண்ணும் முட்டைகோஸ் கொழுந்து இலைகளின் கெட்டியான உருண்டையாகும்.
இதனை உபயோகித்து சாலட், பொரியல், கூட்டு போன்ற பதார்த்தங்கள் செய்யலாம்.
மேலும் முட்டைகோஸை பற்றி அறிய
http://en.wikipedia.org/wiki/Cabbage

பொதுவாக முட்டைகோஸ் பொரியல் செய்யும் போது நான் காரத்திற்கு பச்சை மிளகாய் அல்லது சிகப்பு மிளகாய் சேர்த்தே செய்வது வழக்கம்.
ஆனால் இந்த முறை மிளகுத்தூள் சேர்த்து செய்து பார்த்தேன். சுவையும் மணமும் மிக மிக அபாரமாக இருந்தது.
இப்போது மிளகு  உபயோகித்து முட்டைகோஸ் பொரியல் எப்படி செய்யலாம் என பார்ப்போம். மூன்று பேருக்கு மதிய உணவில் தொட்டுக்கொள்ள சரியாக இருக்கும்.

முட்டைகோஸ் மிளகு பொரியல்


தேவையான பொருட்கள் :
1 1/2 கப்                                    முட்டைகோஸ் 1/2 inch துண்டுகளாக அரிந்தது
1 சிட்டிகை                               மஞ்சத்தூள்
1 Tsp                                           மிளகு தூள்
1/2 Tsp                                         உப்பு
1/ 2                                             குடை மிளகாய், 1/2 inch துண்டுகளாக அரியவும்
1 சிறிய அளவு                        வெங்காயம், நீள வாக்கில் அரியவும்
8                                                கருவேப்பிலை
சிறிது                                       கொத்தமல்லி தழை
1 Tbsp                                        தேங்காய் துருவல்

தாளிக்க :
1/2 Tsp                                       கடுகு
1 Tsp                                          உளுத்தம் பருப்பு
1/2 Tsp                                       எண்ணெய்

செய்முறை :
குக்கரில் 1/2 கப் தண்ணீர் எடுத்துகொள்ளவும்.
அதில் மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
அதில் அரிந்து வைத்துள்ள முட்டைகோஸை சேர்த்து மூடி வெயிட் பொருத்தி ஒரு விசில் வரும்வரை அதிக தீயில் வேக விடவும்.
உடனேயே ஆவியை வெளியேற்றி வேகவைத்த தண்ணீரை வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விட்டு உளுத்தம் பருப்பை சேர்க்கவும்.
பருப்பு சிவந்ததும் கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
பிறகு குடை மிளகாய் துண்டுகளை சேர்த்து முக்கால் பாகம் வேகும் வரை வதக்கவும்.
பின்னர் வேகவைத்த முட்டைகோஸை சேர்க்கவும்.
அதிக தீயில் கைவிடாமல் கிளறவும்.
அதிகப்படியான நீர் வற்றியதும் மிளகு தூள் சேர்த்து சில மணி துளிகள் கிளறவும்.
கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து 1/2 நிமிடம் பிரட்டி பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

முட்டைகோஸ் மிளகு பொரியல் முட்டைகோஸ் மிளகு பொரியல்

கலந்த சாத வகைகளுடன் அருமையாக இருக்கும்.
ரசம் மற்றும் சாம்பார் சேர்த்து பிசைந்த சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும்.
மிளகு சேர்த்திருப்பதால் தொண்டைக்கும் இதமாக இருக்கும்.

No comments:

Post a Comment