Search This Blog

Monday, December 8, 2014

Spinach Rice

#கொடிபசலைசாதம் : #கீரை வகைகளில் வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நார் சத்து நிறைந்துள்ளது என அறிவோம். குறிப்பாக #கொடிபசலைகீரை யில் வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம் மற்றும் இரும்பு அதிக அளவில் நிறைந்துள்ளது.
இதனை மிகுந்த நேரம் வேக வைத்தால் குழ குழவென ஆகி விடும். அதன் சத்துக்களையும் இழந்து சுவையும் குறைந்துவிடும். அதனால் கொத்தமல்லி தழையை போல் கடைசியாக தூவலாம்.
இக்கீரையை உபயோகித்து சீரக சாதம் செய்யும் முறையை இங்கு காண்போம்.

கொடிபசலை சாதம்


Ingredients :
1/2 cup                           பாசுமதி அரிசி [ அ ] பச்சரிசி
1                                    வெங்காயம். பொடியாக நறுக்கவும்
8 - 10 cloves                   பூண்டு, பொடியாக நறுக்கவும்
1/2 Tsp                           ஆவக்காய் மிளகாய் எண்ணெய் கலவை 
1/2 cup                           கொடி பசலை [ Spinach ], பொடியாக நறுக்கவும்
1/2 cup                           காளான், பொடியாக நறுக்கவும்  [ optional ]
3/4 Tsp                           உப்பு
1 cup                              தண்ணீர்

To Temper :
1 Tsp                             சீரகம்
3                                    பிரின்ஜி  இலை
4                                    கிராம்பு
3                                    ஏலக்காய்
1/2 Tsp                          சீரகம்
4 Tsp                             நல்லெண்ணெய் [ til / sesame oil ]
அலங்கரிக்க கொத்தமல்லி தழை.

செய்முறை :

அரிசியை ஒரு முறை கழுவி நீரை வடித்து விட்டு நல்ல தண்ணீரில் ஊற வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சீரகத்தை முதலில் வெடிக்க விடவும்.
பின்னர் மற்ற வாசனை பொருட்களை போட்டு வறுக்கவும்.

அடுத்து பூண்டு சேர்த்து 1/2 நிமிடம் வதக்கவும்.
அதன் பின் வெங்காயத்தை சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.

ஊறிக்கொண்டிருக்கும் அரிசியில் இருந்து தண்ணீரை வடித்து விட்டு வாணலியில் சேர்க்கவும்.

சிறிது நேரம் வறுக்கவும். நன்கு வெள்ளை நிறமாக அரிசி மாறியவுடன் குக்கரில் சேர்க்கவும்.


தேவையான அளவு உப்பு, அவக்கை ஊறுகாய் எண்ணெய் கலவை  மற்றும் 1 கப் தண்ணீர் சேர்க்கவும்.


கரண்டியால் நன்கு கலக்கிய பின்னர் மூடி வெயிட் பொருத்தவும்.

அதிக தீயில் 3 விசில் வரும் வரையும், பின்னர் சிறிய தீயில் 3 நிமிடங்கள் வரையும் வேக விடவும்.
அடுப்பை அணைத்து விடவும்.

நீராவி முழுவதுமாக வெளியேறும் வரை காத்திருக்கவும்.
இதற்கு சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் ஆகும்.

ஆவி அடங்கியவுடன் குக்கரை திறந்து பொடியாக நறுக்கி வைத்துள்ள கீரையையும் காளானையும் சேர்த்து சாதத்தை நசுக்கி விடாமல் மெதுவாக கிளறி மறுபடியும் மூடி போட்டு வெயிட் பொருத்தவும்.


அடுப்பில் குறைந்த தீயில் 3 நிமிடம் வேக விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
ஆவி அடங்கிய பின்னர் திறந்து பரிமாறவும்.

கொடிபசலை சாதம்

விருப்பமான கார கறி அல்லது குருமாவுடன் சுவைக்கலாம்.





No comments:

Post a Comment