#முருங்கைக்காய்கத்தரிக்காய்கூட்டு : சில காய்கறிகளை மற்றொரு குறிப்பிட்ட காயுடன் சேர்த்து கூட்டு செய்யும் போது சுவையும் மனமும் மிகவும் அலாதியாக இருக்கும். அதில் முருங்கைக்காய் கத்தரிக்காய் இணை ஒரு அருமையான ஒன்றாகும். இந்த காய்களுடன் பலாக்கொட்டையும் சேர்த்தால் இன்னும் அருமையாக இருக்கும்.
இனி செய்முறையை காண்போம்.
தேவையான பொருட்கள் :
1 : முருங்கைக்காய், துண்டுகளாக வெட்டவும்.
1 சிறியது : கத்தரிக்காய், சிறு துண்டுகளாக்கவும்.
1 சிறியது : பெரிய வெங்காயம்
3 பற்கள் : பூண்டு, பொடியாக நறுக்கவும்.
1/4 கப் : கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
1 சிட்டிகை : மஞ்சத்தூள்
3/4 Tsp : சாம்பார் பொடி
3/4 Tsp : உப்பு
2 Tbsp : வேக வைத்த பச்சை பருப்பு
அரைக்க :
3 Tsp : தேங்காய் துருவல்
1/4 Tsp : சீரகம்
1/4 Tsp : அரிசி மாவு
தாளிக்க :
1/2 Tsp : வெங்காய வடவம்
1/2 Tsp : எண்ணெய்
செய்முறை :
மிக்சியில் அரைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 3/4 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
அதில் சாம்பார் பொடி, மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் தீயை சிறியதாக்கி வெட்டி வைத்துள்ள காய்கறிகளை போட்டு மூடி போட்டு வேக விடவும்.
காய்கறிகள் வெந்தவுடன் வேகவைத்த பருப்பு, கொத்தமல்லி தழை மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து கலக்கி விடவும்.
மிதமான தீயில் 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
அடுப்பில் எண்ணெய் விட்டு வாணலியை சூடாக்கவும்.
வெங்காய வடவம் தாளித்து கூட்டின் மேல் கொட்டவும்.

சூடான சாதத்தில் கூட்டை ஊற்றி பிசைந்து சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும்.
மற்ற கூட்டு வகைகள் :
No comments:
Post a Comment