Search This Blog

Showing posts with label poriyal. Show all posts
Showing posts with label poriyal. Show all posts

Tuesday, April 4, 2017

Vazhakkai-Poriyal

 #வாழைக்காய்பொரியல் : #வாழைக்காய் உபயோகித்து ஒரு மிக மிக எளிமையான பொரியல் செய்யலாம். மரத்திலிருந்து உடனடியாக பறித்து செய்யும் போது மிக மிக சுவையாக இருக்கும்.

Vazhakkai [ raw banana ] Poriyal

தேவையானவை :
1வாழைக்காய்
2 சிட்டிகைமஞ்சத்தூள்
1 Tbsp தேங்காய் துருவல்
1/2 Tsp உப்பு [ அட்ஜஸ்ட் ]
தேவையானவை :
1/2 Tspகடுகு
1சிகப்பு மிளகாய் [ அட்ஜஸ்ட் ]
1 Tspஉளுத்தம் பருப்பு
10கருவேப்பிலை இலைகள்
1 Tspஎண்ணெய்

கொத்தமல்லி தழை அலங்கரிக்க [ விருப்பப்பட்டால் ]

செய்முறை :
வாழைக்காயை தோல் சீவி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்கவிட்டு மிளகாயை கிள்ளி போடவும்.
அடுத்து உளுத்தம் பருப்பையும் சேர்த்து சிவக்கும் வரை காத்திருக்கவும்.
கருவேப்பிலையை கிள்ளி போட்டு வாழைக்காயை 1/2 அங்குல துண்டுகளாக வெட்டி சேர்க்கவும்.
மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி விடவும்.
மூடி போட்டு வேக விடவும்.
வெந்ததும் உப்பு சரி பார்த்து தேங்காய் துருவலை சேர்க்கவும்.
நன்கு கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

மதிய உணவிற்கு சாம்பார் மற்றும் ரசம் சாதம் ஆகியவற்றுடன் ருசிக்க அருமையாக இருக்கும்.


Vazhakkai [ raw banana ] Poriyal

குறிப்பு :
வாழைக்காயை அரிந்தவுடன் உபயோகப்படுத்தவும்.
இல்லையென்றால் அரிந்த துண்டுகளை தண்ணீரில் போட்டு வைக்கவும்.
அப்போதுதான் நிறம் மாறாமல் இருக்கும்.







வாழைப்பூ பருப்புசிலி
வாழைப்பூ பருப்புசிலி
காலிப்ளவர் பொரியல்
காலிப்ளவர் பொரியல்
காலிப்ளவர் மஞ்சூரியன்
காலிப்ளவர் மஞ்சூரியன்
கேரட் பொரியல்
கேரட் பொரியல்
பலாமுசு மசாலா கறி
பலாமுசு மசாலா கறி



Thursday, September 15, 2016

Vazhaipoo-Mullangi-Poriyal

#வாழைப்பூமுள்ளங்கிபொரியல் : அறுசுவைகளில் ஒன்றான துவர்ப்பு சுவையுடைய வாழைப்பூவை அன்றாடம் நமது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அனால் அதன் துவர்ப்பு சுவை காரணமாக பலர் தவிர்த்து விடுகின்றனர். பருப்பு உசிலி செய்தால் அதன் சுவை சிறிது மட்டுப்படும். ஆனால் பருப்பு உசிலி செய்ய கூடுதல் நேரம் செலவாகும். இதனை மனதில் கொண்டு சில சுவை மிகுந்த காய்கறிகளான கேரட், பீட்ரூட் மற்றும் முள்ளங்கி போன்றவற்றுடன் வாழைப்பூவை சேர்த்து பொரியல் செய்து சுவைக்க ஆரம்பித்து விட்டேன். இதனால் இரு வேறு வகையான காய்கறிகளின் சத்தும் சுவையும் ஒருசேர நமக்கு கிடைக்கிறது.
இங்கு வாழைப்பூ, முள்ளங்கி மற்றும் பயத்தம் பருப்பு ஆகியவற்றை உபயோகித்து பொரியல் செய்வதெப்படி என காணலாம்.

வாழைப்பூ முள்ளங்கி பொரியல்

தேவையானவை :
1/2 கப்வாழைப்பூ நறுக்கியது
3/4 கப்முள்ளங்கி துருவியது
1/8 கப்பயத்தம் பருப்பு
2 Tspகுடை மிளகாய் [ இருந்தால் ]
3 Tspதேங்காய் துருவல்
1/4 கப்வெங்காயம் நறுக்கியது
2 சிட்டிகைமஞ்சத்தூள்
6 or 7கருவேப்பிலை [ விரும்பினால் ]
2பச்சை மிளகாய் [ அட்ஜஸ்ட் ]
1/2 Tspகடுகு
1/2 Tspஉளுத்தம் பருப்பு
3/4 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
1 Tspஎண்ணெய்

அலங்கரிக்க கொத்தமல்லி தழை

செய்முறை :
பொரியல் செய்ய துவங்குவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு முள்ளங்கியை தோல் நீக்கி துருவவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பயத்தம் பருப்பை எடுத்து கழுவிய பின்னர் தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு முள்ளங்கி துருவலை சேர்த்து உப்பு போட்டு கலந்து தனியே வைக்கவும்.
முள்ளங்கியுடன் உப்புடன் சேர்த்து கலந்து வைத்திருப்பதால் நீர் விட ஆரம்பிக்கும்.
இந்த நீரில் பயத்தம் பருப்பு ஊறி விடும்.

அரை மணி நேரம் கழித்து அடுப்பின் மீது வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகு சேர்த்து வெடித்த பின்னர் உளுத்தம் பருப்பை சேர்த்து சிவக்கும் வரை காத்திருக்கவும்.
 அடுத்து கருவேப்பிலை மற்றும் நீளமாக கீறிய பச்சை மிளகாய் போட்டு அரை நிமிடம் வதக்கவும்.
நறுக்கிய வெங்காயம் மற்றும் மஞ்சத்தூள் சேர்த்து வெங்காயம் வெளிர் நிறமாக மாறும் வரை வதக்கவும்.
அடுத்து வெட்டி வைத்துள்ள குடை மிளகாயை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
இப்போது நறுக்கி வைத்துள்ள வாழைப்பூ மற்றும் அதற்கு தேவையான உப்பு சேர்த்து ஒரு முறை கிளறி விட்ட பின் முள்ளங்கியை சிறிது கையால் பிழிந்து விட்ட பின் சேர்க்கவும்.
நன்கு கிளறி விட்ட பின்னர் ஒரு மூடி போட்டு மூடி  தீயின் மீது வேக விடவும்.

ஐந்து நிமிடங்களுக்குள்  வாழைப்பூவும் முள்ளங்கியும் வெந்து விடும்.
உப்பு சரி பார்த்த பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.

பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தழையால் அலங்கரிக்கவும்.
மதிய உணவின் போது சாம்பார் மற்றும் ரசம் சாதத்திற்கு உகந்த பொரியல் ஆகும்.

வாழைப்பூ முள்ளங்கி பொரியல்

வாழைப்பூ முள்ளங்கி பொரியல்






சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்ப்பதற்காக

குதிரைவாலி வாழைப்பூ புலாவ்
குதிரைவாலி வாழைப்பூ புலாவ்
வாழைப்பூ குழம்பு
வாழைப்பூ
குழம்பு
வாழைப்பூ மிளகு குழம்பு
வாழைப்பூ மிளகு குழம்பு
வாழைப்பூ வடை மோர் குழம்பு
வாழைப்பூ வடை மோர் குழம்பு
வாழைப்பூ விரல்கள்
வாழைப்பூ
விரல்கள்





Tuesday, March 29, 2016

Beetroot-Vazhaipoo-Poriyal

#பீட்ரூட்வாழைப்பூபொரியல் : #வாழைப்பூ #துவர்ப்பு சுவையுடையது என நாம் அனைவரும் அறிவோம். அறுசுவைகளில் ஒரு சுவையான துவர்ப்பு சுவை நமது உணவில் இடம் பெறுவது மிகவும் அத்தியாவசியமாகும். வாழைப்பூ துவட்டல் செய்தால் அதன் சுவை காரணமாகவே பலரும் சாப்பிட விருப்பபட மாட்டார்கள். அதன் சுவையை மட்டுபடுத்த பருப்பு உசிலி செய்தால் சுவைக்க முயற்சி செய்வார்கள். ஆனால் பருப்பு உசிலி செய்ய சிறிது அதிக நேரம் தேவை.  அதனால் பிற காய்கறிகளுடன் வழைப்பூவை சேர்த்து பொரியல் செய்தால் சுவை மிக மிக அபாரமாக இருக்கும். எல்லோரும் விரும்பி உண்ணும் படியாகவும் இருக்கும்.
இதை கருத்தில் கொண்டு வாழைப்பூ, பீட்ரூட் மற்றும் குடை மிளகாய் சேர்த்து  பொரியல் செய்து பார்த்தேன். சுவை மிக மிக அருமையாக இருந்தது.

பீட்ரூட் வாழைப்பூ பொரியல்


தேவையான பொருட்கள் :
1/2 கப்வாழைப்பூ பொடியாக நறுக்கியது
3/4 கப்பீட்ரூட் துருவியது
3 Tspகுடை மிளகாய் பொடியாக நறுக்கியது
3 Tspதேங்காய் துருவல்
1/4 கப்வெங்காயம் நறுக்கியது
2 சிட்டிகைமஞ்சத்தூள்
6 or 7கறுவேப்பிலை [ optional ]
1 Tspசாம்பார் பொடி
1/2 Tspகடுகு
1/2 Tspஉளுத்தம் பருப்பு
1/2 Tspஉப்பு
1 Tspஎண்ணெய்

அலங்கரிக்க தேவையான கொத்தமல்லி தழை

செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
முதலில் கடுகு போட்டு வெடித்த பின்னர்  உளுத்தம் பருப்பை சேர்த்து சிவக்கும் வரை வறுக்கவும்.
அடுத்து கறுவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கிய பிறகுகுடைமிளகாயை சேர்த்து சில மணித்துளிகள் வதக்கவும்.
அடுத்து  சாம்பார் பொடி சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
இப்போது துருவிய பீட்ரூட் மற்றும் வாழைப்பூவை சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
வாணலியை மூடி போட்டு மூடி பீட்ரூட் மற்றும் வாழைப்பூ வேகும் வரை அடுப்பின் மேல் சிறிய தீயில் வேக விடவும்.
வெந்ததும் மூடியை எடுத்து விட்டு தேங்காய் துருவலை சேர்த்து கிளறி விடவும்.
அடுப்பை அணைத்து விட்டு தயாரித்த பொரியலை பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

மதிய உணவின் போது சாம்பார் அல்லது ரசம் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.




பீட்ரூட் வாழைப்பூ பொரியல் பீட்ரூட் வாழைப்பூ பொரியல்






சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்ப்பதற்காக

குதிரைவாலி வாழைப்பூ புலாவ்
குதிரைவாலி வாழைப்பூ புலாவ்
வாழைப்பூ குழம்பு
வாழைப்பூ
குழம்பு
வாழைப்பூ மிளகு குழம்பு
வாழைப்பூ மிளகு குழம்பு
வாழைப்பூ வடை மோர் குழம்பு
வாழைப்பூ வடை மோர் குழம்பு
வாழைப்பூ விரல்கள்
வாழைப்பூ
விரல்கள்





Monday, December 22, 2014

Muttaikos-Milagu-Poriyal

#முட்டைகோஸ்மிளகுபொரியல் : #முட்டைகோஸை கீரை வகைகளிலேயே சேர்ப்பது நலம். ஏனெனில் நாம் உண்ணும் முட்டைகோஸ் கொழுந்து இலைகளின் கெட்டியான உருண்டையாகும்.
இதனை உபயோகித்து சாலட், பொரியல், கூட்டு போன்ற பதார்த்தங்கள் செய்யலாம்.
மேலும் முட்டைகோஸை பற்றி அறிய
http://en.wikipedia.org/wiki/Cabbage

பொதுவாக முட்டைகோஸ் பொரியல் செய்யும் போது நான் காரத்திற்கு பச்சை மிளகாய் அல்லது சிகப்பு மிளகாய் சேர்த்தே செய்வது வழக்கம்.
ஆனால் இந்த முறை மிளகுத்தூள் சேர்த்து செய்து பார்த்தேன். சுவையும் மணமும் மிக மிக அபாரமாக இருந்தது.
இப்போது மிளகு  உபயோகித்து முட்டைகோஸ் பொரியல் எப்படி செய்யலாம் என பார்ப்போம். மூன்று பேருக்கு மதிய உணவில் தொட்டுக்கொள்ள சரியாக இருக்கும்.

முட்டைகோஸ் மிளகு பொரியல்


தேவையான பொருட்கள் :
1 1/2 கப்                                    முட்டைகோஸ் 1/2 inch துண்டுகளாக அரிந்தது
1 சிட்டிகை                               மஞ்சத்தூள்
1 Tsp                                           மிளகு தூள்
1/2 Tsp                                         உப்பு
1/ 2                                             குடை மிளகாய், 1/2 inch துண்டுகளாக அரியவும்
1 சிறிய அளவு                        வெங்காயம், நீள வாக்கில் அரியவும்
8                                                கருவேப்பிலை
சிறிது                                       கொத்தமல்லி தழை
1 Tbsp                                        தேங்காய் துருவல்

தாளிக்க :
1/2 Tsp                                       கடுகு
1 Tsp                                          உளுத்தம் பருப்பு
1/2 Tsp                                       எண்ணெய்

செய்முறை :
குக்கரில் 1/2 கப் தண்ணீர் எடுத்துகொள்ளவும்.
அதில் மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
அதில் அரிந்து வைத்துள்ள முட்டைகோஸை சேர்த்து மூடி வெயிட் பொருத்தி ஒரு விசில் வரும்வரை அதிக தீயில் வேக விடவும்.
உடனேயே ஆவியை வெளியேற்றி வேகவைத்த தண்ணீரை வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விட்டு உளுத்தம் பருப்பை சேர்க்கவும்.
பருப்பு சிவந்ததும் கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
பிறகு குடை மிளகாய் துண்டுகளை சேர்த்து முக்கால் பாகம் வேகும் வரை வதக்கவும்.
பின்னர் வேகவைத்த முட்டைகோஸை சேர்க்கவும்.
அதிக தீயில் கைவிடாமல் கிளறவும்.
அதிகப்படியான நீர் வற்றியதும் மிளகு தூள் சேர்த்து சில மணி துளிகள் கிளறவும்.
கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து 1/2 நிமிடம் பிரட்டி பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

முட்டைகோஸ் மிளகு பொரியல் முட்டைகோஸ் மிளகு பொரியல்

கலந்த சாத வகைகளுடன் அருமையாக இருக்கும்.
ரசம் மற்றும் சாம்பார் சேர்த்து பிசைந்த சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும்.
மிளகு சேர்த்திருப்பதால் தொண்டைக்கும் இதமாக இருக்கும்.