Search This Blog

Sunday, December 14, 2014

Adai

#அடை : எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான டிபன் வகைகளுள் ஒன்றாகும். விருந்தினர்கள் வந்திருந்தால் இரவு உணவிற்காக விஷேசமாக செய்யப்படும் ஒரு உணவு வகையாகும். கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பு சேர்த்து செய்யப் படுவதால் புரத சத்து நிறைந்த உணவாகும். இதனுடன் சுரைக்காய், பரங்கி பிஞ்சு, முருங்கைகீரை, கொத்தமல்லி ஆகியவற்றில் ஒன்றை அதிகமாக சேர்த்து செய்யப்படுவதால் அதனுடைய சத்துக்களும் நமக்கு கிடைக்கிறது.
இனி எப்படி செய்வது என காணலாம்.

அடை [ பருப்பு அடை ]

தேவையான பொருட்கள் :
1/3 கப்                                        : புழுங்கரிசி [ boiled rice or idly rice ]
1/3 கப்                                         பச்சரிசி
1 Tsp                                            உளுத்தம் பருப்பு
1/3 கப்                                         கடலை பருப்பு
1/3 கப்                                         துவரம் பருப்பு
மற்ற பொருட்கள் :
3 அ 4                                          சிகப்பு மிளகாய்
சிறு துண்டு                             பெருங்காயம் மற்றும் இஞ்சி
1 Tsp                                            சீரகம்
1 Tsp                                            சோம்பு [ விருப்பப்பட்டால் ]
1 Tsp                                            உப்பு [ அட்ஜஸ்ட் ]

மாவில் அரிந்து சேர்க்க வேண்டியவை :

chopped bottle gourd

1 சிறிய அளவு                       வெங்காயம்
1 கப்                                           சுரைக்காய் மெல்லியதாக அறிந்தது
10 - 15                                         கறுவேப்பிலை
1/4 கப்                                        கொத்தமல்லி
1 Tbsp                                         காரட் துருவியது [ விருப்பப்பட்டால் ]

அடை சுட்டெடுக்க தேவையான எண்ணெய்
செய்முறை :
அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஒன்றாக கழுவி ஊற வைக்கவும்.
பருப்பு இரண்டையும் கழுவி மற்றொரு பாத்திரத்தில் ஊற வைக்கவும்.
இரண்டும் சுமார் 2 மணி நேரம் ஊற வேண்டும்.

முதலில் கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களை மிக்ஸியில் கொரகொரவென தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
பின்னர் அதனுடன் அரிசியை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொரகொரவென அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.


அடுத்து ஊறிக்கொண்டிருக்கும் பருப்பிலிருந்து சுத்தமாக தண்ணீரை வடித்து விடவும்.
மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் ஓரிரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.
இவ்வாறு கொரகொரவென அரைத்த பருப்பையும் முன்பு அரைத்து வைத்துள்ள அரிசி மாவுடன் கலக்கவும்.

ஒரு குழி கரண்டியால் நன்கு கலக்கி விடவும்.
மாவு இட்லி மாவு போல சிறிது கெட்டியாக இருக்க வேண்டும்.


அடுப்பை பற்ற வைத்து தோசை கல்லை மிதமான தீயில் சூடாக்கவும்.

மாவில் அரிந்து வைத்துள்ள வெங்காயம், சுரைக்காய் துண்டுகள், கறுவேப்பிலை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

கல் சூடானதும் எண்ணெய் பரப்பி அடை மாவை கல்லின் நடுவே வைத்து கரண்டியின் பின் பகுதியால் சமமாக வட்ட வடிவமாக பரப்பவும்.
தடிமனாக இருக்குமாறு கரண்டியால் பரப்பவும்.
அடையின் மேலும் சுற்றியும் எண்ணெய் விட்டு ஒரு மூடியால் மூடவும்.

ஓரங்கள் சிவந்தபின் திருப்பிபோடவும்.
இப்போது தட்டினால் மூட வேண்டாம்.

இரண்டாவது பக்கமும் சிவக்க வெந்த பின் எடுத்து தட்டிலோ அல்லது சூடாக வைத்திருக்கக் கூடிய டப்பாவில் வைக்கவும்.

அடுத்தடுத்து மாவு இருக்கும் வரை ஒவ்வொன்றாக ஊற்றி எடுக்கவும்.

அடை [ பருப்பு அடை ]
அடை [ பருப்பு அடை ] அடை [ பருப்பு அடை ]

சட்னியுடன் அல்லது அவியலுடன் சாப்பிடலாம்.
வெல்லம் தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.
சூடான அடையின் மேல் நெய் தடவி ஒன்றுமே தொட்டுக்கொள்ளாமல் சாப்பிட்டாலும் நன்றாகத்தான் இருக்கும்!!...

குறிப்பு :
அடை சிறிது தடிமனாக பரப்பி சுடப்படுவதால் தோசையை விட வேக சிறிது அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.









மேலும் சில தோசை மற்றும் அடை வகைகள் முயற்சி செய்து பார்க்க

பரங்கிக்காய் அடை
பரங்கிக்காய் அடை
முடக்கத்தான் கீரை தோசை
முடக்கத்தான் தோசை
கொடி பசலை கீரை தோசை
பசலை கீரை தோசை
பெசரட்டு
பெசரட்டு
வாழைப்பூ பசலை அடை
வாழைபூபசலைஅடை



இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.



No comments:

Post a Comment