Search This Blog

Showing posts with label spinach. Show all posts
Showing posts with label spinach. Show all posts

Monday, December 8, 2014

Spinach Rice

#கொடிபசலைசாதம் : #கீரை வகைகளில் வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நார் சத்து நிறைந்துள்ளது என அறிவோம். குறிப்பாக #கொடிபசலைகீரை யில் வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம் மற்றும் இரும்பு அதிக அளவில் நிறைந்துள்ளது.
இதனை மிகுந்த நேரம் வேக வைத்தால் குழ குழவென ஆகி விடும். அதன் சத்துக்களையும் இழந்து சுவையும் குறைந்துவிடும். அதனால் கொத்தமல்லி தழையை போல் கடைசியாக தூவலாம்.
இக்கீரையை உபயோகித்து சீரக சாதம் செய்யும் முறையை இங்கு காண்போம்.

கொடிபசலை சாதம்


Ingredients :
1/2 cup                           பாசுமதி அரிசி [ அ ] பச்சரிசி
1                                    வெங்காயம். பொடியாக நறுக்கவும்
8 - 10 cloves                   பூண்டு, பொடியாக நறுக்கவும்
1/2 Tsp                           ஆவக்காய் மிளகாய் எண்ணெய் கலவை 
1/2 cup                           கொடி பசலை [ Spinach ], பொடியாக நறுக்கவும்
1/2 cup                           காளான், பொடியாக நறுக்கவும்  [ optional ]
3/4 Tsp                           உப்பு
1 cup                              தண்ணீர்

To Temper :
1 Tsp                             சீரகம்
3                                    பிரின்ஜி  இலை
4                                    கிராம்பு
3                                    ஏலக்காய்
1/2 Tsp                          சீரகம்
4 Tsp                             நல்லெண்ணெய் [ til / sesame oil ]
அலங்கரிக்க கொத்தமல்லி தழை.

செய்முறை :

அரிசியை ஒரு முறை கழுவி நீரை வடித்து விட்டு நல்ல தண்ணீரில் ஊற வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சீரகத்தை முதலில் வெடிக்க விடவும்.
பின்னர் மற்ற வாசனை பொருட்களை போட்டு வறுக்கவும்.

அடுத்து பூண்டு சேர்த்து 1/2 நிமிடம் வதக்கவும்.
அதன் பின் வெங்காயத்தை சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.

ஊறிக்கொண்டிருக்கும் அரிசியில் இருந்து தண்ணீரை வடித்து விட்டு வாணலியில் சேர்க்கவும்.

சிறிது நேரம் வறுக்கவும். நன்கு வெள்ளை நிறமாக அரிசி மாறியவுடன் குக்கரில் சேர்க்கவும்.


தேவையான அளவு உப்பு, அவக்கை ஊறுகாய் எண்ணெய் கலவை  மற்றும் 1 கப் தண்ணீர் சேர்க்கவும்.


கரண்டியால் நன்கு கலக்கிய பின்னர் மூடி வெயிட் பொருத்தவும்.

அதிக தீயில் 3 விசில் வரும் வரையும், பின்னர் சிறிய தீயில் 3 நிமிடங்கள் வரையும் வேக விடவும்.
அடுப்பை அணைத்து விடவும்.

நீராவி முழுவதுமாக வெளியேறும் வரை காத்திருக்கவும்.
இதற்கு சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் ஆகும்.

ஆவி அடங்கியவுடன் குக்கரை திறந்து பொடியாக நறுக்கி வைத்துள்ள கீரையையும் காளானையும் சேர்த்து சாதத்தை நசுக்கி விடாமல் மெதுவாக கிளறி மறுபடியும் மூடி போட்டு வெயிட் பொருத்தவும்.


அடுப்பில் குறைந்த தீயில் 3 நிமிடம் வேக விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
ஆவி அடங்கிய பின்னர் திறந்து பரிமாறவும்.

கொடிபசலை சாதம்

விருப்பமான கார கறி அல்லது குருமாவுடன் சுவைக்கலாம்.





Friday, November 14, 2014

Spinach Dosai

#பசலைகீரைதோசை : #கீரைகள் உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்களை கொடுக்க கூடியது. அதிலும் #கொடிபசலை கீரையில் வைட்டமின் A மிக அதிக அளவில் நிறைந்துள்ளது. இதை தவிர வைட்டமின் B, C மற்றும் K குறிப்பிடும் படியாக உள்ளது.
கீரைகளை நீண்ட நேரம் அதிக தீயில் வேக வைக்காமல் குறுகிய நேரத்தில் பச்சை நிறம் மாறாமல் வேக வைத்து சாப்பிடும் போதுதான் அதிலுள்ள சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கிறது.
அமராந்தம் [ அமராந்த் ] எனப்படும் கீரை விதையின் மாவையும் சிறிதளவு மாவில் சேர்த்திருக்கிறேன். அமராந்த் புரோட்டீன் நிறைந்துள்ள உணவு  பொருள் ஆகும். கிடைத்தால் உபயோகப்படுத்தவும். இல்லாவிடின் பரவாயில்லை.
இனி செய்முறையை காண்போம்.

பசலைகீரை தோசை

தேவையான பொருட்கள் :
2 cups                              Iஇட்லி மாவு  / தோசை மாவு
1/8 cup                             அமராந்த் மாவு  [ optional ]
10                                     கொடி பசலை கீரை, கழுவி பொடியாக நறுக்கவும்
1 small size                       வெங்காயம், பொடியாக நறுக்கவும்
1 Tsp                                மிளகு, பொடித்து வைக்கவும்
1 Tsp                                சீரகம்
1/2 Tsp                             உப்பு

தோசை சுட்டெடுக்க தேவையான எண்ணெய்.

செய்முறை :
இட்லி மாவு அல்லது  தோசை மாவு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ளவும்.
அதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.
நன்கு கலந்து வைக்கவும்.


அடுப்பில் மிதமான தீயில் தோசைக்கல்லை சூடாக்கவும்.
கல் சூடானதும் சில துளிகள் எண்ணெய் விட்டு தடவவும்.
பின்னர் மாவை கரண்டியில் எடுத்து தோசைகல்லின் நடுவே வைத்து, கரண்டியின் பின் பாகத்தால் சமமாக பரப்பி விடவும்.
சிறிது தடிமனான தோசையாக ஊற்ற வேண்டும்.
தோசையின் மேலும் அதனை சுற்றியும் சில துளிகள் எண்ணெய் விடவும்.
ஓரங்கள் சிவந்து வரும் போது திருப்பிப் போட்டு வெந்தவுடன் தட்டில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி சட்னி  அல்லது இட்லி மிளகாய் பொடியுடன் சுவைக்கவும்.


பசலைகீரை தோசை பசலைகீரை தோசை
பசலைகீரை தோசை பசலைகீரை தோசை





மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க :

ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை
நீர்தோசை
நீர்தோசை
முடக்கத்தான் தோசை
முடக்கத்தான் தோசை
குதிரைவாலி நீர் தோசை
குதிரைவாலிநீர்தோசை
ரவா தோசை
ரவா தோசை






Friday, November 7, 2014

Spinach Kuzhi Paniyaram

#பசலைகீரைகுழிபணியாரம் : குழிபணியாரம் செய்யும் போது பொதுவாக வெங்காயம், மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து செய்யப்படுவதுதான் வழக்கம். ஆனால் இங்கு குழிபணியாரத்தின் சத்தை மேலும் அதிகரிக்க கொடிபசலை கீரையை சேர்த்து செய்யப்பட்டிருக்கிறது. இக்கீரையை சேர்ப்பதனால் நம் உடலுக்கு தேவையான நார் சத்தும் கிடைக்கிறது.
இனி எப்படி செய்வது என காணலாம்.

பசலைகீரை குழிபணியாரம்

தேவையான பொருட்கள் :
1 கப்                                   தோசை மாவு அ இட்லி மாவு
1/2 கப்                                    ரவா
2 Tbsp                                     பாப்பரை மாவு
1 Tbsp                                    ரவா
3/4 Tsp                                   உப்பு

தேவையான கீரைகள் :

10                                             கொடிபசலை கீரை, பொடியாக வெட்டிக்கொள்ளவும்
10                                            கறுவேப்பிலை
3 Tsp                                        கொத்தமல்லி நறுக்கியது
15                                             புதினா பொடியாக வெட்டிக்கொள்ளவும்.
மற்ற பொருட்கள் :
1                                              வெங்காயம், பொடியாக வெட்டிக்கொள்ளவும்
1 அ 2                                     பச்சை மிளகாய், பொடியாக நறுக்கி வைக்கவும்.
தாளிக்க:
1 Tsp                                       கடுகு
2 Tsp                                      உளுத்தம் பருப்பு
2 Tsp                                      கடலை பருப்பு
1 சிட்டிகை                           பெருங்கயபொடி
3 Tsp                                      எண்ணெய்

குழி பணியாரம் சுட்டெடுக்க தேவையான எண்ணெய்.
செய்முறை :
கொடுக்கப்பட்டுள்ள மாவு அனைத்தையும் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
பதினைந்து நிமிடங்கள் ஊற விடவும்.

பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
மற்றொரு அடுப்பில் குழி பணியாரக்கல்லை சூடாக்கவும்.

 கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு , பெருங்காயம் தாளித்த பிறகு பச்சை மிளகாய் கறுவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதன் பின் வெங்காயம் சேர்த்து மணம் வரும் வரை வதக்கவும்.
மாவில் சேர்த்து கலக்கவும்.
வெட்டி வைத்துள்ள கீரைகளையும் சேர்த்து கலக்கவும்.
பணியார கல் சூடானதும் ஒவ்வொரு குழியிலும் இரண்டிரண்டு சொட்டு எண்ணெய் விடவும்.
ஒரு கரண்டியால் மாவை எடுத்து குழிகளை நிரப்பவும். மேலேயும் பணியாரத்தை சுற்றியும் ஒன்றிரண்டு சொட்டு எண்ணெய் விட்டு வேக விடவும்.
கொடிபசலை குழி பணியாரம்


ஓரத்தில் சிவந்தவுடன் ஒரு தேக்கரண்டியால் திருப்பி விட்டு வேக விடவும்.

கொடிபசலை குழி பணியாரம்


இரண்டு புறமும் பொன்னிறமானதும் பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சூடான சுவையான சத்தான கொடிபசலை குழி பணியாரம் தயார்.

கொடிபசலை குழி பணியாரம்

தக்காளி சட்னியுடன் சுவைக்கவும்.

குறிப்பு : பாப்பரை விதைகள்தான் கைவசம் இருக்கிறது என்றால் மிக்சியில் அதனை மாவாக பொடித்துக்கொள்ளவும்.



Thursday, June 5, 2014

Spinach Poori

#கொடிபசலைபூரி - #SpinachPoori : #கீரை களை அதன் நார் சத்துக்காகவும் வைட்டமின் A காகவும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்கிறோம். இவ்விரண்டையும் தவிர வைட்டமின் C ம் மற்ற தாதுக்களும் அதிக அளவில் இக்கீரையில் நிறைந்துள்ளது.

இந்த கீரையை இரண்டு நிமிடங்களுக்குள் வேக வைத்து உண்ணும் போது இதில் அடங்கியிருக்கும் சத்துக்கள் அனைத்தும் உடலில் சேருகிறது.

இந்த கீரை மேனியை பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
அதிக அளவு நார்சத்து மலசிக்கல் வராமல் பாதுகாக்கிறது.

இத்தகைய அருமையான கீரையை குழந்தைகளையும் மற்றவர்களையும் சாப்பிட வைப்பது மிக மிக கடினமான காரியம்! ஏதோ ஒருவகையில் மறைத்து சமையலில் உபயோகிப்பதின் மூலம் இக்கீரையின் பயனை எல்லோரும் அடையலாம். ஐயோ!... கீரையா என ஓடுபவர்கள் கூட விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவு வகையை இங்கு காணலாம். அதுதான்... பூரி.
பூரியுடன் இக்கீரையை சேர்த்து செய்யும் போது மறுக்காமல் எல்லோரும் முக்கியமாக குழந்தைகளும் விரும்பி உண்டு விடுவார்கள்.



இன்று பசலையை உபயோகித்து பூரி எவ்வாறு செய்யலாம் என காண்போம்.
சுமார் 12 முதல் 15 பூரிகள் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள் :
3/4 கப்                                     மைதா மாவு
3/4 கப்                                     கோதுமை மாவு
10 - 15                                     கொடி பசலை கீரை
1 Tsp                                        நெய் [ விருப்பப்பட்டால் ]
1/2 Tsp                                      உப்பு
1 Tsp                                        எண்ணெய்

1 கப்                                       எண்ணெய் பொரிப்பதற்கு

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து, பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு குறைந்த தீயில் சூடாக்கவும்.

எண்ணெய் சூடாவதற்குள் பூரி மாவை தயாரித்து விடலாம்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மாவை எடுத்துக்கொள்ளவும்.


அதில் நெய்யையும் உப்பையும் சேர்க்கவும்.
கைகளால்  பிசறி விடவும்.
கீரையை நன்கு கழுவிய பிறகு மிக்ஸி பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
முதலில் தண்ணீர் விடாமல் அரைக்கவும்.

பின்னர் 1/4 கப் தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த கீரை விழுதை மாவுடன் சேர்க்கவும்.


மாவை பிசையவும். தண்ணீர் சேர்த்து அரைத்த கீரை விழுதே போதுமானது. தேவையானால் சிறிது நீர் சேர்த்து பிசையலாம்.

மாவு ஒன்றுசேர்ந்தாற்போல வந்தவுடன் 1 Tsp எண்ணெய் சேர்க்கவும்.
மறுபடியும் நன்கு பிசையவும்.


அழுத்தி பிசைய பிசைய மாவு நன்கு மிருதுவாக வரும்.


சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.


இப்போது பூரிகளை இட சப்பாத்தி அமுக்கும் [ ப்ரஸ் ] கருவியை உபயோகிக்கலாம்.
இல்லையென்றால் வட்ட வட்டமாக பூரி கட்டை கொண்டு இடவும்.

நான் இங்கு சப்பாத்தி ப்ரஸில் எப்படி இடுவது என பார்க்கலாம்.


ப்ரெசின் உள்ளே அடி தட்டிலும் மேல் தட்டிலும் எண்ணெய் தடவிக் கொள்ளவும்.

அடி தட்டின் மேல் உருட்டி வைத்துள்ள மாவை வைத்து மேல் தட்டால் மூடி கைப்பிடியால் அழுத்தம் கொடுத்து வட்ட வடிவ பூரியை உருவாக்கவும்.
இவ்வாறு தட்டிய பூரி மிகவும் மெல்லியதாகவும் இருக்ககூடாது.
தடிமனாகவும் இருக்கக் கூடாது.
ஒரே சீராக 1/2 mm தடிமன் உடையதாக இருக்கலாம்.

எண்ணெய் நன்கு புகை வரும் அளவுக்கு சூடாக இருக்க வேண்டும்.
திரட்டிய பூரி மாவை எண்ணெய்யில் மெதுவாக விடவும்.

போட்ட உடனேயே பந்து போல உப்பி மேலெழுந்து வரும்.


சாரணியால் அடுத்த பக்கத்திற்கு திருப்பி விடவும்.


இரண்டு பக்கமும் வெந்ததும் எண்ணையை வடித்து ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.

இதே போல ஒவ்வொன்றாக பொரித்தெடுக்கவும்.

எண்ணெய்யின் சூட்டை தேவைக்கேற்றவாறு அவ்வப்போது தீயை கூட்டி குறைத்து கொள்ளவும்.

பூரி கிழங்குடன் அல்லது பன்னீர் மசாலாவுடன் அல்லது குருமாவுடன் பரிமாறலாம்.


இங்கு தக்காளி வெண்டைக்காய் கறியுடன் பரிமாறப் பட்டுள்ளது.




இதையும் முயற்சி செய்யலாமே!!
  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
பூரி பூரி கிழங்கு பீட்ரூட் பூரி பன்னீர் மசாலா கறி வெண்டைக்காய் தக்காளி கறி





இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.




Monday, November 18, 2013

Spinach Sorghum Stirfry

பசலை கீரை சோளம் வதக்கல் : சோளம் சிறுதானிய வகையில் ஒன்றாகும். இத்தானியம் ஆங்கிலத்தில் Sorghum என்று அழைக்கப்படுகிறது. சோளம் பரவலாக எல்லாராலும் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. கர்நாடகாவில் சோளமாவை ரொட்டி தயாரிக்க பயன் படுத்துகிறார்கள். நான் பொதுவாக சோள  மாவை பயன் படுத்தி தோசை தயாரிப்பேன். தற்போதுதான் முழு தானியமாக பயன் படுத்த துவங்கியுள்ளேன். இந்த தானியம் வேக சிறிது நேரமாகும். வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து பிறகு தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
1 Cup சோளத்திற்கு 2 Cup தண்ணீர் சரத்து வேக வைக்க வேண்டும்.
குக்கரில் 3 விசில் வந்தவுடன் சிறிய தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.
ஆவி நன்கு அடங்கியவுடன் குக்கரை திறக்கவும்.
நன்றாக மலர்ந்து வெந்து இருக்கிறதா என்று பார்க்கவும்.
இல்லையென்றால் மீண்டும் ஒரு 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.


தேவையான பொருட்கள் :
வேகவைத்த சோளம்     : 1 Cup
கடுகு                                     : 1/2 Tsp
கடலை பருப்பு                  : 1 Tsp
நிலக்கடலை                     : 2 Tsp
பெருங்காய தூள்             : 2 சிட்டிகை
சிகப்பு மிளகாய்                : 1 ( அட்ஜஸ்ட் )
பசலை கீரை                      : 1 Cup

பெரிய வெங்காயம்         : 1 சிறியது
காரட் துண்டுகள்              : 2 Tsp
நல்லெண்ணெய்              : 2 Tsp
மிளகுத்தூள்                        : 1/2 Tsp 

செய்முறை :
வாணலியை அடுப்பில் வைத்து 2 Tsp எண்ணெய்  விடவும்.
கடுகை தாளிக்கவும். கடுகு பட பட என பொரிந்தவுடன் கிள்ளிய சிகப்பு மிளகாய், கடலை பருப்பு பிறகு நிலக்கடலை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
இப்போது நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்.
 காரட் துண்டுகள் மற்றும்  கழுவி வெட்டி வைத்துள்ள கீரையையும் சேர்க்கவும்.
நன்கு வதக்கவும்.
கீரை லேசாக வெந்தவுடன் வேகவைத்த சோளத்தை சேர்க்கவும்.


தேவையான உப்பு சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.


இப்போது பசலை கீரை சோள வதக்கல் தயார்.


மாலை சிற்றுண்டியாகவோ அல்லது காலை உணவாகவோ சாப்பிடலாம்.

குறிப்பு : கீரை மற்றும் கரத்தின் அளவை அவரவர் விருப்பப்படி கூட்டி குறைத்துக்கொள்ளவும்.