Search This Blog

Showing posts with label மாங்காய். Show all posts
Showing posts with label மாங்காய். Show all posts

Tuesday, June 16, 2015

Maangai-kaara-chutney

#மாங்காய்காரசட்னி : #மாங்காய் உபயோகித்து மற்றுமொரு சட்னி. முன்பு பதிவிட்ட அனைத்து சட்னியிலும் மாங்காயுடன் தேங்காய்  துருவலை சேர்த்துதான் சட்னி செய்துள்ளேன். இந்த முறை மாங்காய் மட்டுமே உபயோகித்து ஒரு சட்னி முயற்சி செய்தேன்.வெகு சமீபத்தில் தொலை காட்சியில் ரேவதி சண்முகம் அவர்கள் செய்து காட்டிய முறையை ஒட்டி இருக்கும். ஆனால் நான் மேலும் சில பொருட்களையும் புதினாவையும் கூடுதலாக சேர்த்து செய்துள்ளேன்.
இனி சட்னி செய்முறையை காண்போம்.


மாங்காய் கார சட்னி

தேவையான பொருட்கள் :
3/4 கப்மாங்காய் துருவியது
3 or 4சிகப்பு மிளகாய்
3 or 4பச்சை மிளகாய்
1 Tspகடுகு
1 1/2 Tspஉளுத்தம் பருப்பு
2 Tspகடலை பருப்பு
1/2 Tspகொத்தமல்லி விதை
1/4 Tspபெருங்காய தூள்
20 - 25புதினா இலைகள்
1 Tspஎண்ணெய்
1 Tspஉப்பு [ adjust ]

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடுகை வெடிக்க விட்ட பின்னர் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பை சேர்க்கவும்.
சாரணியால் திராவி விட்டுக்கொண்டே இருக்கவும்.
பருப்பு  இலேசாக நிறம் மாறியதும்  கொத்தமல்லி விதை மற்றும் பெருங்காய தூளை சேர்த்து வறுக்கவும்.
பொன்னிறமாக வறுபட்டவுடன் சிகப்பு மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ஓரிரு நிமிடம் வதக்கவும்.
மிளகாயை இலேசாக வறுத்தால் போதுமானது.
அடுப்பை அணைத்து விட்டு வறுத்த பொருட்களை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
வாணலியில் துருவிய மாங்காயை சேர்த்து இருக்கும் சூட்டில் வதக்கவும்.
எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
உப்பு சரி பார்த்த பின்னர் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சாதத்தில் கலந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
பொங்கல், & இட்லி மற்றும் தோசை ஆகியவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
Maangai Spicy Chutney [ Raw mango spicy chutney ]





மேலும் சில சட்னி வகைகள் முயற்சி செய்து பார்க்க
மாங்காய் தேங்காய் சட்னி
மாங்காய் தேங்காய் சட்னி
சிகப்பு பூண்டு மிளகாய் சட்னி
சிகப்பு பூண்டு மிளகாய் சட்னி
மாங்காய் சட்னி 1
மாங்காய்
சட்னி 1
வல்லாரை சட்னி 1
வல்லாரை
சட்னி 1
வல்லாரை பருப்பு துவையல்
வல்லாரை பருப்பு துவையல்




Monday, June 15, 2015

Maangai-Thaengai-Chutney

#மாங்காய்தேங்காய்சட்னி : #மாங்காய் உபயோகித்து மற்றுமொரு கோடைகால சிறப்பு சட்னி. புளிப்பும் காரமும் கொண்ட சுவையான சட்னி.
எல்லா வகையான சிற்றுண்டிகளுக்கும் ஏற்ற சட்னியும் கூட.
இனி செயல் விளக்கத்தை காண்போம்.

மாங்காய் தேங்காய் சட்னி

தேவையான பொருட்கள் :
1/2 கப்தேங்காய் துருவல்
4 - 5 மாங்காய் துண்டுகள் [ அட்ஜஸ்ட் ]
3 - 4சிகப்பு மிளகாய்
1/4 கப்பொட்டு கடலை [ வறு கடலை ]
1 பல்பூண்டு
1/2 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
1/2 Tspஎண்ணெய்
தாளிக்க :
1/2 Tspகடுகு
8 - 10கறுவேப்பிலை
1/2 Tspஎண்ணெய்

செய்முறை :
அடுப்பில் வாணலியை சூடாக்கி அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிளகாயை மட்டும் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
வறுத்த மிளகாயுடன் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு தேவையான நீர் விட்டு அரைத்து எடுக்கவும்.
ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு கறுவேப்பிலை தாளித்து சட்னியின் மேல் கொட்டவும்.

நாவை சப்புக்கொட்ட வைக்கும் அருமையான சட்னி!!

Maangai Thaengai Chutney





மற்ற சட்னி வகைகள் சில
மாங்காய் சட்னி 1
மாங்காய் சட்னி 1
வல்லாரை சட்னி 1
வல்லாரை சட்னி 1
வல்லாரை பருப்பு துவையல்
வல்லாரை பருப்பு...
துரை துவையல்
துரை துவையல்
வல்லாரை தேங்காய் சட்னி
வல்லாரை தேங்காய்..





Thursday, May 21, 2015

Maangai-Chutney 1

#மாங்காய்சட்னி  1: கோடைகாலக் காயான #மாங்காய் கொண்டு வித விதமான உணவுகளை செய்து சுவைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் இன்று இட்லி, தோசை, பொங்கல் மற்றும் உப்புமா ஆகியவற்றுடன் தொட்டுக்கொண்டு சுவைக்கக் கூடிய ஒரு #சட்னி யை இங்கு பார்க்கப்போகிறோம். சென்ற முறை செய்து சுவைத்த மாங்காய் சட்னி யை விட சிறிது வித்தியாசமானது இந்த சட்னி.

மாங்காய் சட்னி


தேவையான பொருட்கள் :
1/4 கப்மாங்காய் செதுக்கியது
1/2 கப்தேங்காய் துருவல்
3 or 4சிகப்பு காய்ந்த மிளகாய்
2 Tspகடலை பருப்பு
1/4 Tspபெருங்காயத்தூள்
1/2 Tspஎண்ணெய் 
3/4 Tspஉப்பு [ adjust ]
To Temper :
1/2 Tspஎண்ணெய்
1/2 Tspகடுகு
8 - 10கருவேப்பிலை

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடான பின்னர் மிளகாய் மற்றும் கடலை பருப்பை சிவக்க வறுக்கவும்.
கடைசியாக பெருங்காய தூளை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
வறுத்த பருப்பு, மிளகாய், பெருங்காயத்தூள்  ஆகியவற்றுடன் கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களை மிக்ஸியில் போட்டு முதலில் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.


பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிது கொரகொரப்பாக 
அரைக்கவும்.
அரைத்த சட்னியை ஒரு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
அடுப்பில் மறுபடியும் வாணலியை சூடாக்கி எண்ணெய் விட்டு கடுகு மற்றும் கறுவேப்பிலை தாளித்து சட்னியின் மேல் கொட்டவும்.

மாங்காய் சட்னி

புளிப்பும் காரமும் கொண்ட சுவையான மாங்காய் சட்னி தயார்.
இட்லி, தோசை, பொங்கல் மற்றும் உப்புமா ஆகியவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட மிக மிக அருமையான சட்னி!!




மேலும் சில சட்னி சமையல் குறிப்புகள் 
நெல்லிக்காய் சட்னி 1
நெல்லிக்காய்
சட்னி 1
நெல்லிக்காய் புதினா துவையல்
நெல்லிக்காய் புதினா துவையல்
பருப்பு துவையல்
பருப்பு
துவையல்
மாங்காய் சட்னி
மாங்காய்
சட்னி






Tuesday, May 19, 2015

Maangai Thokku

#மாங்காய்தொக்கு : மாங்காய் கிடைக்கும் நாட்களில் அதனை உபயோகித்து என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்து சுவைத்து விட வேண்டும். இப்போது செய்து சுவைக்கவில்லை என்றால் இதற்காக அடுத்த கோடை வரை காத்திருக்க வேண்டியதுதான்.
தயிர் சாதம் என்றவுடன் நினைவுக்கு வருவது ஊறுகாய். அதிலும் முக்கியமாக மாங்காய் தொக்குடன்  பரிமாறினால் வேண்டாம் என மறுக்க முடியுமா??!! மாங்காய் தொக்கு இருந்தால் எப்பொழுதையும் விட கூடுதலாக இரண்டு பிடி சாப்பிடத் தூண்டும்.
இனி மாங்காய் தொக்கு செய்முறையை காண்போம்.

மாங்காய் தொக்கு


தேவையான பொருட்கள் :
1/2 கப்மாங்காய் செதுக்கியது
1 Tspசிகப்பு மிளகாய் தூள் [ adjust ]
1/4 Tspமஞ்சத்தூள்
1/2 Tspபெருங்காயத்தூள்
1 Tspஉப்பு [ adjust ]
1 Tspகடுகு
1/4 Tspவெந்தயம்
5 Tspநல்லெண்ணெய் [ till/sesame oil ]
செய்முறை :
குக்கரில் 1 கப் தண்ணீர் விடவும்.
ஒரு கிண்ணத்தில் செதுக்கிய மாங்காய் துண்டுகளை போட்டு குக்கரினுள் வைத்து குக்கரை மூடவும்.
வெயிட் பொருத்த வேண்டாம்.
முதலில் அதிக தீயில் சூடாக்கவும்.
ஆவி வர ஆரம்பித்ததும் தீயை மிதமாக்கி 8 முதல் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து தனியே வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
வெந்தயத்தை பொன்னிறமாக வறுத்தெடுத்து பொடித்து வைக்கவும்.
அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
பின்னர் பெருங்காயதூளை சேர்த்து ஆவியில் வேக வைத்த மாங்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.
பச்சை வாசனை போனதும் மிளகாய் தூள், மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விடவும்.
சிறிய தீயில் வைத்து அவ்வப்போது கிளறி கொண்டே இருக்கவும்.
ஒரு கட்டத்தில் ஊற்றிய எண்ணெய் வெளியே வர ஆரம்பிக்கும்.
மேலும் ஊறுகாய் பளபளப்பாக மாறும்.
இந்த தருணத்தில் வெந்தய பொடியை சேர்த்து கிளறி மேலும் ஓரிரு நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும்.
பிறகு அடுப்பை அணைத்து விட்டு நன்கு காய்ந்த சுத்தமான ஒரு பீங்கான் கிண்ணத்திலோ அல்லது கண்ணாடி கிண்ணத்திலோ எடுத்து வைக்கவும்.
நன்கு ஆறிய பிறகு ஒரு பாட்டிலில் எடுத்து வைத்து பத்திர படுத்தவும்.


மாங்காய் தொக்கு
மாங்காய் தொக்கு மாங்காய் தொக்கு






சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

நெல்லிக்காய் தயிரில் ஊறியது
நெல்லிக்காய் தயிரில் ஊறியது
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய்
மிட்டாய்
நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் ஊறுகாய்
தேன் நெல்லிக்காய்
நெல்லிக்காய் தேனில் ஊறியது
ஆவக்காய் ஊறுகாய்
ஆவக்காய்
ஊறுகாய்


Tuesday, May 20, 2014

Aam Panna - Maangai Drink

#மாங்காய்பானம் [ #ஆம்பண்ணா ] : இப்போது நான் சத்திஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் வசித்து வருகிறேன். இங்கு கோடைகாலத்தில் இரவு உணவிற்கு சென்றாலோ அல்லது மதிய உணவின் போதும் பன்னா என்னும் மாங்காயில் செய்த பானத்தை அளிக்கிறார்கள்.
நான் விசாரித்த போது மாங்காய் உடலை குளிர்விக்கும். மாம்பழம்தான் உடலுக்கு சூடு என கூறுகிறார்கள்.
அருகில் உள்ளவர்களிடம் இதன் சமையல் குறிப்பை கேட்ட போது மாங்காயை நெருப்பில் சுட்டு பிறகு வெந்த பழக்கூழை கொண்டு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.
இல்லையெனில் மாங்காயை கழுவி தோலுடன் குக்கரில் வேக வைத்து பின்னர் பழக்கூழை உபயோகித்து தயாரிக்கலாம் என கூறினார்கள்.
அவர்கள் கூறியதை கேட்ட பின்னர் என் வழியில் நான் இதை தயாரித்தேன்.
மாங்காய் பானம் [ #ஆம்பண்ணா ]
Aam Panna - Raw Mango Drink

ஓரிரு தினங்களுக்கு முன்னர் மாங்காய் பச்சடி செய்தேன். அப்போதே இந்த பானத்தை தயாரிக்க நினைத்தேன். ஆனால் இன்றுதான் செய்ய முடிந்தது. அதற்குள் பழம் பாதி பழுத்து விட்டது. ஆனாலும் புளிப்பாக இருப்பதால் இந்த பானம் தயாரிக்க இந்த செங்காயை உபயோகித்துள்ளேன்.
இனி செய்முறை

இனிப்பு பழக்கூழ் செய்ய தேவையான பொருட்கள் :


2 கப்                                 மாங்காய் தோல் நீக்கி  சீவியது
1/4 கப்                              சர்க்கரை

ஒரு கப் பானம் தயாரிக்க :
1/4 கப்                              இனிப்பு பழக்கூழ்
1/4 Tsp                               சீரகபொடி
1/4 Tsp                               இந்துப்பு [ rock salt ]
2 அ 3                                புதினா இலைகள்

செய்முறை :
மாங்காயை குக்கரில் எடுத்துக்கொள்ளவும்.
சர்க்கரையை சேர்க்கவும்.


1/4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
கரண்டியால் நன்கு கலக்கி விடவும்.


அடுப்பில் 2 விசில் வரும்  வேக விடவும்.
அடுப்பை  அணைத்து விட்டு குக்கரை உடனே ஆவி நீக்கி திறக்கவும்.
கரண்டி கொண்டோ அல்லது மிக்ஸியிலோ ஆறியவுடன் அரைத்து மசிக்கவும்.


1 கப் பானம் தயாரிக்க
1/4 கப் மசித்த இனிப்பு பழகூழை ஒரு கண்ணாடி தம்ளரில் எடுத்துக் கொள்ளவும்.
சீரகபொடி, இந்துப்பு மற்று 3/4 கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
மேலே ஒரு சிட்டிகை சீரகப் பொடி தூவியோ அல்லது புதினா இலைகளை பியித்து போட்டோ பருகவும்.
வெய்யிலுக்கு இதமான புளிப்பும் இனிப்பும் நிறைந்த பானம் தயார்.
அருந்தி மகிழவும்.
மாங்காய் பானம் [ ஆம்பண்ணா ]


மீதமுள்ள இனிப்பு பழக்கூழை கண்ணாடி பாட்டில் அல்லது பீங்கான் கிண்ணத்தில் எடுத்து வைத்து ஆறியவுடன் குளிர் சாதன பெட்டியில் இரு தினங்களுக்கு பத்திர படுத்தலாம்.






மற்ற சில பானங்கள்

புதினா கஷாயம்
புதினா கஷாயம்
எலுமிச்சை இஞ்சி பானம்
எலுமிச்சை இஞ்சி ..
பானகம்
பானகம்
நீர் மோர்
நீர் மோர்
தேநீர்
தேநீர்