#பரங்கிக்காய்அடை : #அடை என்றதும் அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஊறவைத்து அரைத்து செய்வதுதான் நமக்குத் தெரியும். அதற்கு நாம் முன் கூட்டியே திட்டமிட வேண்டும். அடை செய்வதற்கு பொதுவாக உபயோகிக்கும் காய்கறிகள் அல்லது கீரை கொண்டு அதே போல உடனடியாக செய்யக்கூடிய ஒரு அடை வகையை இங்கு காண்போம். பாரம்பரியமாக செய்யப்படும் அடை போல இல்லாவிடினும் மிகவும் சுவை மிகுந்தது இந்த பரங்கிக்காய் அடை.
இனி செய்வதெப்படி என காணலாம்.
தேவையான பொருட்கள் :
1/2 கப் கடலை மாவு
1/2 கப் கோதுமை மாவு
2 Tbsp அரிசி மாவு
2 Tbsp அமராந்தம் மாவு [ இருந்தால் ]
3/4 Tsp உப்பு [ அட்ஜஸ்ட் ]
1 Tsp சீரகம்
பொடியாக அரிந்து மாவுடன் சேர்க்க வேண்டியவை
12 - 15 கறுவேப்பிலை
1/4 கப் கொத்தமல்லி
3/4 கப் பரங்கிக்காய் பிஞ்சு
1/4 கப் வெங்காயம்
அடை சுட்டெடுக்க தேவையான எண்ணெய்.
செய்முறை :
ஒரு அகன்ற பாத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மாவையும் எடுத்துக்கொள்ளவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்.
சீரகம் மற்றும் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து கலக்கி அரை மணி நேரம் வைக்கவும்.
அதற்குள் வெங்காயம், பிஞ்சு பரங்கிக்காய் மற்றும் கொத்தமல்லி தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
அரை மணி நேரம் கழித்து இவை அனைத்தையும் மாவுடன் சேர்த்து கலக்கவும்.
அடுப்பில் நடுத்தர தீயில் தோசை கல்லை சூடாக்கவும்.
மேல் கால் தேக்கரண்டி எண்ணெய் தடவி விடவும்.
கரண்டியில் மாவை எடுத்து கல்லின் நடுவே வைத்து தோசையை விட தடிமனாகவும் வட்டமாகவும் இருக்கும் படி பரப்பிவிடவும்.
சில துளிகள் எண்ணையை அடையின் மீதும் ஓரங்களிலும் விடவும்.
ஒரு மூடி போட்டு வேக விடவும்.
சில நிமிடங்கள் கழித்து மூடியை எடுத்து விட்டு ஓரங்கள் சிவத்தபின்னர் திருப்பி போடவும்.
இரண்டு பக்கமும் நன்கு சிவக்க வெந்த பின் பரிமாறும் தட்டில் எடுத்து வைக்கவும்.
இதே போல ஒவ்வொரு அடையாக சுட்டெடுக்கவும்.
சூடாக இருக்கும் போதே அடையின் மீது நெய் தடவி தேங்காய் சட்னி [ அ ] தக்காளி சாஸ் தொட்டுக் கொண்டு சுவைக்கலாம்.
தொட்டுக்க ஏதும் இல்லாமலும் சுவைக்கலாம்.
வெல்லம் தொட்டுக்கொண்டு சுவைத்தால் அபாரமாக இருக்கும்.
மேலும் சில தோசை மற்றும் அடை வகைகள்

முயற்சி செய்து பார்க்க
இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.
மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.
|
|
|
||||||

No comments:
Post a Comment