Search This Blog

Thursday, June 4, 2015

Pesarattu

#பெசரட்டு [ #பயத்தம்பருப்புஅடை ] : பெசரட்டு பயத்தம் பருப்பிலிருந்து செய்யப்படும் ஒரு அடையாகும். ஆந்திராவில் மிகவும் பிரபலமான உணவாகும். உணவு விடுதிகளில் பெசரட்டு சுட்டெடுத்து மேலே ரவா உப்புமாவை வைத்து பரிமாறுவார்கள். சூடாக சாப்பிடும் போது மிகவும் ருசியாக இருக்கும்.
மற்ற பருப்பு வகைகளை ஒப்பிடும் போது பயத்தம் பருப்பிலிருந்து கிடைக்கும் புரத சத்து மிக எளிமையாக உடலில் சேருகிறது. மர கறி சாப்பிடுபவர்களுக்கு ஒரு அருமையான புரத சத்து மிக்க உணவாகும். சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற பருப்பு வகையாகும்.

தோலுடன் கூடிய பயத்தம் பருப்பை உபயோகப் படுத்தி பெசரட்டு செய்யப்படுகிறது. பொதுவாக தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளின் தோலுக்கு அடியில் வைட்டமின் B மிகுந்து காணப்படும். தோலை நீக்கும் போது வைட்டமின் B சத்து அழிக்கப்பட்டு விடுகிறது. இங்கு தோலுடன் பயன் படுத்தப் படுவதால் வைட்டமின் B நமக்கு கிடைக்கிறது.
பருப்பை ஊறவைக்க மட்டுமே நேரம் தேவை. ஊறவைத்து அரைத்த பின்னர் உடனேயே தயாரித்து விடலாம். மற்ற பலகாரங்கள் போல புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
இனி செய்முறையை பார்ப்போம்.

சுமார் 4 அல்லது 5 பெசரட்டு செய்யலாம்.

பெசரட்டு [  பயத்தம் பருப்பு அடை ]


தேவையான பொருட்கள் :
1 கப்பயத்தம் பருப்பு தோலுடன்
1 Tbspபச்சரிசி
சிறு துண்டுஇஞ்சி
3/4 Tspஉப்பு
மேலே தூவ :
வெங்காயம், பொடியாக நறுக்கவும்
2 Tbspகொத்தமல்லி தழை
எண்ணெய் பெசரட்டு சுட்டெடுக்க
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் பருப்பு மற்றும் அரிசியை எடுத்து நன்கு கழுவிய பின்னர் தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் மிக்ஸியில் ஊறவைத்த பருப்பு, அரிசி மற்றும் இஞ்சி ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
உப்பு சேர்த்து கலக்கவும்.
அடுப்பில் தோசை கல்லை சூடாக்கி எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை கல்லின் நடுவே வைத்து மெல்லிய வட்ட வடிவமாக பரப்பவும்.
அதன் மீது நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை தூவி எண்ணெய் சொட்டு சொட்டாக பெசரட்டின் மேலும் சுற்றியும் விடவும்.
ஒரு மூடியினால் மூடி வேக விடவும்.
ஓரங்கள் சிவந்த பின்னர் திருப்பி போட்டு வேக விடவும்.
இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன் தட்டில் எடுத்து வைக்கவும்.
இதே போல அடுத்தடுத்து பெசரட்டு சுட்டெடுக்கவும்.

பெசரட்டின் மேல் ரவா உப்புமா தயார் செய்து வைத்து சட்னியுடன் பரிமாறவும்.
ரவா உப்புமா இல்லாமலும் விருப்பமான சட்னியுடன் பெசரட்டை சுவைக்கலாம்.
பெசரட்டு [  பயத்தம் பருப்பு அடை ]
பெசரட்டு [  பயத்தம் பருப்பு அடை ] பெசரட்டு [  பயத்தம் பருப்பு அடை ]







மேலும் சில டிபன் வகைகள் முயற்சி செய்து பார்க்க
தினை தோசை
தினை தோசை
ரவா தோசை
ரவா தோசை
கேழ்வரகு தோசை
கேழ்வரகு தோசை
கம்பு தோசை
கம்பு தோசை
ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை
சிறுபயறு பெசரட்டு
சிறுபயறு பெசரட்டு




No comments:

Post a Comment