Search This Blog

Showing posts with label pancake. Show all posts
Showing posts with label pancake. Show all posts

Tuesday, December 27, 2016

Chowchow-Adai

#சௌசௌஅடை : #அடை செய்வதற்காக மாவு தயார் செய்துவிட்டு சுரைக்காய் வாங்குவதற்காக காய்கறி கடைக்கு சென்றேன். ஆனால் கடையில் மிகவும் பெரிய அளவு சுரைக்காயே இருந்தது. அவ்வளவு பெரிய காய் அடை செய்ய தேவைப்படவில்லை. அதனால் வேறு என்னென்ன காய்கள் கடையில் இருக்கிறதென பார்த்தேன். #சௌசௌ கண்ணில் பட்டது. அதனை வாங்கி வந்து பொடிப்பொடியாக நறுக்கி மாவில் சேர்த்து அடை செய்தேன். மிகவும் பிரமாதமாக இருந்தது. யாராலுமே கண்டுபிடிக்க இயலவில்லை!! அந்த அற்புத சமையல் குறிப்பு இதோ உங்களுக்காக..

சுமார் 4 - 5 அடைகள் தயாரிக்கலாம்.

Chowchow Adai


தேவையானவை :
ஊற வைக்க :
1/4 கப்புழுங்கரிசி [ இட்லி அரிசி ]
1/4 கப்பச்சரிசி
1/4 கப்துவரம் பருப்பு
1/4 கப்கடலை பருப்பு
அரைக்க :
1/2 Tspபெருங்காயத்தூள்
1 Tspசோம்பு
1 Tspசீரகம்
1/2 அங்குலஇஞ்சி துண்டு
2 - 3சிகப்பு மிளகாய் [ அட்ஜஸ்ட் ]
1 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
மாவுடன் சேர்க்க :
1 சௌ சௌ, தோல் நீக்கி பொடியாக நறுக்கவும் 
1 நடுத்தரவெங்காயம், பொடியாக நறுக்கவும்
4 Tspகொத்தமல்லி தழை நறுக்கியது
10 - 12கருவேப்பிலை, கிள்ளி வைக்கவும்

அடை சுட தேவையான நல்லெண்ணெய்
அடை மேலே தடவ தேவையான நெய் அல்லது வெண்ணெய்.

செய்முறை :
அரிசி இரண்டையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து இரு முறை கழுவி விட்டு ஊற வைக்கவும்.
பருப்பு அனைத்தையும் ஒன்றாக வேறொரு பாத்திரத்தில் எடுத்து கழுவிய பின்னர்  ஊறவைக்கவும்.
சுமார் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

2 மணி நேரம் கழித்து கொடுக்கப்பட்டுள்ள அரைக்க தேவையான மற்ற பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.
பின்னர் அதனுடன் அரிசியை சேர்த்து அரைத்து எடுத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வைக்கவும்.
பின்னர் பருப்பு ஊறவைத்த தண்ணீர்  முழுவதும் வடித்து விட்டு மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்து முன்பு அரைத்து வைத்துள்ள அரிசியுடன் சேர்க்கவும்.
நன்கு கலக்கி விடவும்.
அவற்றுடன் மாவுடன் சேர்க்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கலக்கவும். உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.
அடுப்பை  பற்ற வைத்து  கல்லை சூடாக்கவும்.
சூடானதும் எண்ணெய் சுற்றி விட்டு மாவை கரண்டியால் எடுத்து தோசை கல்லின் நடுவே வைத்து சமமாக பரப்பவும்.
அடை என்பதால் சிறிது கனமாக இருக்க வேண்டும்.
மேலேயும் சுற்றியும்  எண்ணெய் விட்டு ஒரு மூடியால் மூடி 2 அ 3 நிமிடங்கள் வேக விடவும்.
பின்னர் திறந்து பார்க்கவும்.
ஓரங்கள் சிவந்தவுடன் திருப்பிப் போட்டு வேக விடவும்.
இரு  பக்கமும் நன்கு  சிவந்த வுடன் எடுத்து தட்டில் வைக்கவும்.

இதே போல ஒவ்வொன்றாக சுட்டு எடுக்கவும்.
சுவையான சௌசௌ அடை தயார்.
அடையை தட்டில் வைத்து மேலே வெண்ணெய் அல்லது நெய் தடவி சூடாக  அவியல் வைத்து பரிமாறவும்.

Chowchow Adai Chowchow Adai





முயற்சி செய்து பார்க்க மேலும் சில சமையல் குறிப்புகள் 

வாழைப்பூ பருப்பு உருண்டை
வாழைப்பூபசலைஅடை
பெசரட்டு
பெசரட்டு
அடை
அடை
முடக்கத்தான் கீரை தோசை
முடக்கத்தான் தோசை
கொடி பசலை கீரை தோசை
பசலை கீரை தோசை






Friday, July 22, 2016

Pumpkin Pancake

#பரங்கிக்காய்அடை : #அடை என்றதும் அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஊறவைத்து அரைத்து செய்வதுதான் நமக்குத் தெரியும். அதற்கு நாம் முன் கூட்டியே திட்டமிட வேண்டும். அடை செய்வதற்கு பொதுவாக உபயோகிக்கும் காய்கறிகள் அல்லது கீரை கொண்டு அதே போல உடனடியாக செய்யக்கூடிய ஒரு அடை வகையை இங்கு காண்போம். பாரம்பரியமாக செய்யப்படும் அடை போல இல்லாவிடினும் மிகவும் சுவை மிகுந்தது இந்த பரங்கிக்காய் அடை.
இனி செய்வதெப்படி என காணலாம்.





தேவையான பொருட்கள் :

1/2 கப்                                       கடலை மாவு
1/2 கப்                                      கோதுமை மாவு
2 Tbsp                                        அரிசி மாவு
2 Tbsp                                       அமராந்தம் மாவு [ இருந்தால் ]
3/4 Tsp                                      உப்பு [ அட்ஜஸ்ட் ]
1 Tsp                                         சீரகம்

பொடியாக அரிந்து மாவுடன் சேர்க்க வேண்டியவை
12 - 15                                      கறுவேப்பிலை
1/4 கப்                                     கொத்தமல்லி
3/4 கப்                                     பரங்கிக்காய் பிஞ்சு
1/4 கப்                                     வெங்காயம்

அடை சுட்டெடுக்க தேவையான எண்ணெய்.

செய்முறை :
ஒரு அகன்ற பாத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மாவையும் எடுத்துக்கொள்ளவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்.
சீரகம் மற்றும் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து கலக்கி அரை மணி நேரம் வைக்கவும்.
அதற்குள் வெங்காயம், பிஞ்சு பரங்கிக்காய் மற்றும் கொத்தமல்லி தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
அரை மணி நேரம் கழித்து இவை அனைத்தையும் மாவுடன் சேர்த்து கலக்கவும்.
அடுப்பில் நடுத்தர தீயில் தோசை கல்லை சூடாக்கவும்.
மேல் கால் தேக்கரண்டி எண்ணெய் தடவி விடவும்.
கரண்டியில் மாவை எடுத்து கல்லின் நடுவே வைத்து தோசையை விட தடிமனாகவும்  வட்டமாகவும் இருக்கும் படி பரப்பிவிடவும்.
சில துளிகள் எண்ணையை அடையின் மீதும் ஓரங்களிலும் விடவும்.
ஒரு மூடி போட்டு வேக விடவும்.
சில நிமிடங்கள் கழித்து மூடியை எடுத்து விட்டு ஓரங்கள் சிவத்தபின்னர் திருப்பி போடவும்.
இரண்டு பக்கமும் நன்கு சிவக்க வெந்த பின் பரிமாறும் தட்டில் எடுத்து வைக்கவும்.
இதே போல ஒவ்வொரு அடையாக சுட்டெடுக்கவும்.

சூடாக இருக்கும் போதே அடையின் மீது நெய் தடவி தேங்காய் சட்னி [ அ ] தக்காளி சாஸ் தொட்டுக் கொண்டு சுவைக்கலாம்.

தொட்டுக்க ஏதும் இல்லாமலும் சுவைக்கலாம்.
வெல்லம் தொட்டுக்கொண்டு சுவைத்தால் அபாரமாக இருக்கும்.








மேலும் சில தோசை மற்றும் அடை வகைகள் 
முயற்சி செய்து பார்க்க

அடை
அடை
முடக்கத்தான் கீரை தோசை
முடக்கத்தான் தோசை
கொடி பசலை கீரை தோசை
பசலை கீரை தோசை
பெசரட்டு
பெசரட்டு
வாழைப்பூ பசலை அடை
வாழைபூபசலைஅடை



இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.




Sunday, December 14, 2014

Adai

#அடை : எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான டிபன் வகைகளுள் ஒன்றாகும். விருந்தினர்கள் வந்திருந்தால் இரவு உணவிற்காக விஷேசமாக செய்யப்படும் ஒரு உணவு வகையாகும். கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பு சேர்த்து செய்யப் படுவதால் புரத சத்து நிறைந்த உணவாகும். இதனுடன் சுரைக்காய், பரங்கி பிஞ்சு, முருங்கைகீரை, கொத்தமல்லி ஆகியவற்றில் ஒன்றை அதிகமாக சேர்த்து செய்யப்படுவதால் அதனுடைய சத்துக்களும் நமக்கு கிடைக்கிறது.
இனி எப்படி செய்வது என காணலாம்.

அடை [ பருப்பு அடை ]

தேவையான பொருட்கள் :
1/3 கப்                                        : புழுங்கரிசி [ boiled rice or idly rice ]
1/3 கப்                                         பச்சரிசி
1 Tsp                                            உளுத்தம் பருப்பு
1/3 கப்                                         கடலை பருப்பு
1/3 கப்                                         துவரம் பருப்பு
மற்ற பொருட்கள் :
3 அ 4                                          சிகப்பு மிளகாய்
சிறு துண்டு                             பெருங்காயம் மற்றும் இஞ்சி
1 Tsp                                            சீரகம்
1 Tsp                                            சோம்பு [ விருப்பப்பட்டால் ]
1 Tsp                                            உப்பு [ அட்ஜஸ்ட் ]

மாவில் அரிந்து சேர்க்க வேண்டியவை :

chopped bottle gourd

1 சிறிய அளவு                       வெங்காயம்
1 கப்                                           சுரைக்காய் மெல்லியதாக அறிந்தது
10 - 15                                         கறுவேப்பிலை
1/4 கப்                                        கொத்தமல்லி
1 Tbsp                                         காரட் துருவியது [ விருப்பப்பட்டால் ]

அடை சுட்டெடுக்க தேவையான எண்ணெய்
செய்முறை :
அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஒன்றாக கழுவி ஊற வைக்கவும்.
பருப்பு இரண்டையும் கழுவி மற்றொரு பாத்திரத்தில் ஊற வைக்கவும்.
இரண்டும் சுமார் 2 மணி நேரம் ஊற வேண்டும்.

முதலில் கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களை மிக்ஸியில் கொரகொரவென தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
பின்னர் அதனுடன் அரிசியை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொரகொரவென அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.


அடுத்து ஊறிக்கொண்டிருக்கும் பருப்பிலிருந்து சுத்தமாக தண்ணீரை வடித்து விடவும்.
மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் ஓரிரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.
இவ்வாறு கொரகொரவென அரைத்த பருப்பையும் முன்பு அரைத்து வைத்துள்ள அரிசி மாவுடன் கலக்கவும்.

ஒரு குழி கரண்டியால் நன்கு கலக்கி விடவும்.
மாவு இட்லி மாவு போல சிறிது கெட்டியாக இருக்க வேண்டும்.


அடுப்பை பற்ற வைத்து தோசை கல்லை மிதமான தீயில் சூடாக்கவும்.

மாவில் அரிந்து வைத்துள்ள வெங்காயம், சுரைக்காய் துண்டுகள், கறுவேப்பிலை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

கல் சூடானதும் எண்ணெய் பரப்பி அடை மாவை கல்லின் நடுவே வைத்து கரண்டியின் பின் பகுதியால் சமமாக வட்ட வடிவமாக பரப்பவும்.
தடிமனாக இருக்குமாறு கரண்டியால் பரப்பவும்.
அடையின் மேலும் சுற்றியும் எண்ணெய் விட்டு ஒரு மூடியால் மூடவும்.

ஓரங்கள் சிவந்தபின் திருப்பிபோடவும்.
இப்போது தட்டினால் மூட வேண்டாம்.

இரண்டாவது பக்கமும் சிவக்க வெந்த பின் எடுத்து தட்டிலோ அல்லது சூடாக வைத்திருக்கக் கூடிய டப்பாவில் வைக்கவும்.

அடுத்தடுத்து மாவு இருக்கும் வரை ஒவ்வொன்றாக ஊற்றி எடுக்கவும்.

அடை [ பருப்பு அடை ]
அடை [ பருப்பு அடை ] அடை [ பருப்பு அடை ]

சட்னியுடன் அல்லது அவியலுடன் சாப்பிடலாம்.
வெல்லம் தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.
சூடான அடையின் மேல் நெய் தடவி ஒன்றுமே தொட்டுக்கொள்ளாமல் சாப்பிட்டாலும் நன்றாகத்தான் இருக்கும்!!...

குறிப்பு :
அடை சிறிது தடிமனாக பரப்பி சுடப்படுவதால் தோசையை விட வேக சிறிது அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.









மேலும் சில தோசை மற்றும் அடை வகைகள் முயற்சி செய்து பார்க்க

பரங்கிக்காய் அடை
பரங்கிக்காய் அடை
முடக்கத்தான் கீரை தோசை
முடக்கத்தான் தோசை
கொடி பசலை கீரை தோசை
பசலை கீரை தோசை
பெசரட்டு
பெசரட்டு
வாழைப்பூ பசலை அடை
வாழைபூபசலைஅடை



இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.



Monday, September 29, 2014

Kambu-Cauliflower-Adai

#கம்புகாலிப்ளவர்அடை : #கம்பு  #சிறுதானியம் வகைகளுள் மிக முக்கியமானதாகும். இந்தியாவின் பல மாநிலங்களில் பரவலாகப் பயிரிடப்படுகிறது. இதனை உபயோகித்து கூழ், தோசை போன்ற உணவுகள் எப்படி செய்வது என பார்த்திருக்கிறோம்.
இங்கு எளிய முறையில் மிக குறுகிய நேரத்தில் சத்தான அடை செய்வது எப்படி என காண்போம்.
சுமார் 5 முதல் 6 அடைகள் செய்யலாம்.

கம்பு காலிப்ளவர் அடை



தேவையான பொருட்கள் :
மாவு தயார் செய்ய வேண்டியவை 
3/4 Cupகம்பு மாவு  [ Bajra or Pearl millet flour ]
1/8 Cupபலதானிய மாவு [ Multigrain Flour ]
1/8 Cupஅமராந்த் மாவு  [ Optional ]
1 Tspபாப்பரை மாவு  [ Optional ]
1 Tspஉப்பு 
1/8 Cupதயிர் 
மாவில் சேர்க்க வேண்டியவை 
1 small sizeகாலிப்ளவர்
1 Tspசீரகம் 
1/8 Cupவெங்காயம் பொடியாக நறுக்கியது
1/8 Cupகறுவேப்பிலை பொடியாக நறுக்கியது
1/8 Cupகொத்தமல்லி பொடியாக நறுக்கியது
1 or 2பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
1/2 Tspமிளகு பொடித்தது

எண்ணெய்  அடையை சுடுவதற்கு தேவையான அளவு

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள எல்லா மாவையும் போட்டு உப்பு சேர்க்கவும்.
1/2 கப் அளவு தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.


தயிரை  தேக்கரண்டியால் அடித்து மாவில் சேக்கவும்.


நன்கு கலக்கி 15 நிமிடங்களுக்கு தனியே வைக்கவும்.

காலி ப்ளவரை  உப்பு சேர்த்த சுடு தண்ணீரில் 5 நிமிடங்கள் வைத்து சுத்தப்படுத்தவும்.
அதனை 5 நிமிடங்களுக்குப் பிறகு மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.


அரைத்ததை மாவில் சேர்க்கவும்.
மாவில் சேர்க்க கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்க்கவும்.

நன்கு கலக்கி வைக்கவும்.
அடுப்பில் தோசை கல்லை சூடாக்கி எண்ணெய் தடவவும்.
சூடான கல்லின் மேல் இரண்டு கரண்டி மாவை நடுவில் விட்டு வட்டமான அடையாக பரப்பவும்.
அடையின் மேலும் வரும்புகளை சுற்றியும் எண்ணெய் விட்டு வேக விடவும்.

கம்பு காலிப்ளவர் அடை

ஓரங்கள் சிவக்க ஆரம்பித்ததும் திருப்பிப் போடவும்.

கம்பு காலிப்ளவர் அடை

இரண்டு பக்கங்களும் சிவக்க வெந்தவுடன் தட்டில் எடுத்து வைக்கவும்.

கம்பு காலிப்ளவர் அடை

இதேபோல கம்பு காலிப்ளவர் அடையை ஒவ்வொன்றாக சுட்டெடுக்கவும்.

தேங்காய் சட்னியுடன் அல்லது தக்காளி சாஸுடன் சுவைக்கவும்.
சுவையான கம்பு அடை தயார்!!








மேலும் சில தோசை மற்றும் அடை வகைகள் முயற்சி செய்து பார்க்க

பரங்கிக்காய் அடை
பரங்கிக்காய் அடை
முடக்கத்தான் கீரை தோசை
முடக்கத்தான் தோசை
கொடி பசலை கீரை தோசை
பசலை கீரை தோசை
பெசரட்டு
பெசரட்டு
வாழைப்பூ பசலை அடை
வாழைபூபசலைஅடை





இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.