Search This Blog

Sunday, August 14, 2016

Murungai-keerai-Vazhai-thandu-Poriyal

#முருங்கைக்கீரைவாழைத்தண்டுபொரியல் : #முருங்கைக்கீரை மட்டும் உபயோகித்து பொரியல் செய்வது நமது வழக்கம். அதனுடன் #வாழைத்தண்டை சேர்த்து பொரியல் செய்து பார்த்தேன். அருமையாக இருந்தது. அதன் சமையல் குறிப்பை இங்கு காண்போம்.

முருங்கைக்கீரை வாழைத்தண்டு பொரியல்

தேவையானவை :
1 கப்முருங்கைக்கீரை
6 - 7 cm நீளவாழைத்தண்டு
1 Tbspகேரட் துருவியது
வெங்காயம், நறுக்கவும்
2 Tbspதேங்காய் துருவல்
1பச்சை மிளகாய்
1 சிகப்பு மிளகாய்
1/2 Tspகடுகு
1 Tspஉளுத்தம் பருப்பு
1 Tspஎண்ணெய்
3/4 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]

செய்முறை :
ஒரு சிறு துண்டு வாழைத்தண்டை எடுத்துக்கொள்ளவும்.


ஒரு கத்தியினால் வெளி தோலை நீக்கவும்.


பிறகு குறுக்காக வட்ட வில்லையாக நறுக்கவும்.
நறுக்கிய துண்டை தண்டிலிருந்து இழுத்தால் நாறுடன் வரும்.

Removing vazhaithandu fiber

இந்த நாரை ஆள்காட்டி விரலில் சுற்றி இழுத்து நீக்கவும்.
இதே போல அடுத்த துண்டை வெட்டி நாரை நீக்கவும்.


இவ்வாறு வட்ட வடிவத்தில் வெட்டிய அனைத்து துண்டுகளை சிறிது மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
இவ்வாறு மோர் கலந்த நீரில் வாழைத்தண்டு துண்டுகளை போட்டு வைப்பதால் நிறம் மாறாமல் இருக்கும்.
இந்த வட்ட துண்டுகளை மெல்லிய ஈர்குச்சி போல நறுக்கி மீண்டும் அதே தண்ணீரில் போட்டு வைக்கவும்.
முருங்கைக்கீரையை தண்ணீரில் இரண்டு மூன்று முறை நன்கு கழுவிய பின்னர் கத்தியால் நறுக்கி வைக்கவும்.

வாணலியை அடுப்பின் மீது மிதமான தீயில் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும். 
எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு வெடித்ததும் சிகப்பு மிளகாயை கிள்ளி போட்டு பின் உளுத்தம் பருப்பை போடவும்.
அடுத்து பச்சை மிளகாயை நீள வாக்கில் கீறி சேர்க்கவும்.
தற்போது நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வெளிர் நிறமாகும் வரை வதக்கவும்.
இப்போது வாழை  தண்டு மற்றும் கேரட் துருவலை சேர்த்து ஒரு முறை கிளறி விடவும்.
பின்னர் நறுக்கிய முருங்கைக்கீரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு மூடி வேக விடவும்.
முருங்கைக்கீரை மற்றும் வாழைத்தண்டு வேகும் வரை மூடி வைக்கவும்.
இரண்டும் வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
உப்பு சரி பார்க்கவும்.
சுவையும் சத்தும் நிறைந்த முருங்கைக்கீரை வாழைத்தண்டு பொரியல் தயார்.
சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் தொட்டுக்க அருமையாக இருக்கும்.
முருங்கைக்கீரை வாழைத்தண்டு பொரியல் முருங்கைக்கீரை வாழைத்தண்டு பொரியல்







மேலும் சில சுவையான சமையல் குறிப்புகள் செய்து சுவைக்க

வாழைப்பூ வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைப்பூ வாழைத்தண்டு தயிர் பச்சடி
கொத்தமல்லி முருங்கைக்கீரை பொடி
கொத்தமல்லி முருங்கை
க்கீரை  பொடி
முருங்கைக்கீரை சாதம்
முருங்கை
க்கீரை
சாதம்
முருங்கைக் கீரை பால் சாறு
முருங்கைக்
கீரை
பால் சாறு
வாழைப்பூ முருங்கைக் கீரை கூட்டு
வாழைப்பூ முருங்கைக் 
கீரை கூட்டு