Search This Blog

Showing posts with label thinai urundai. Show all posts
Showing posts with label thinai urundai. Show all posts

Saturday, September 13, 2014

Thinai Ellu Urundai

#திணைஎள்ளுஉருண்டை : #திணை சிறு தானிய வகைகளுள் ஒன்றாகும். மிக பழங்காலத்திலிருந்தே தமிழர்களின் உணவாக இத்தானியம் இருந்திருக்கிறது. இன்றும் முருகன் கோவில் பிரசாதமாக தேனும் தினைமாவும் அனுசரிக்கப் படுகிறது.
முன்பே திணை மாவை உபயோகித்து இரு வேறு விதமான உருண்டைகளை செய்வதெப்படி என பார்த்தோம்.
இங்கு தினையை எள்ளு, பொட்டுகடலை [வறு கடலை ] ஆகியவற்றுடன் சேர்த்து நல்ல மணமும் சுவையும் மிகுந்த உருண்டை எப்படி செய்வது என காண்போம்.

திணைஎள்ளு உருண்டை


தேவையான பொருட்கள் : 
1/2 கப்                                          : திணை  [ Foxtail millet ]
1/2 கப்                                          : பொட்டுகடலை  ( pottukadalai )
1/2 கப்                                          : எள்ளு  ( till )
1/2 கப்   ( adjust )                           : வெல்லம்
2                                                    : ஏலக்காய்
4                                                    : கிராம்பு
a small piece                                   : ஜாதிக்காய்
3 Tsp                                             : தேன்
7                                                    : முந்திரி பருப்பு
4                                                    : பாதாம் பருப்பு

செய்முறை :
தினையை வாணலியில் சிவக்க வறுத்தெடுக்கவும். ஒரு தட்டிலோ அல்லது வாயகன்ற கிண்ணத்திலோ எடுத்து வைக்கவும்.

தினையை வாணலியில் சிவக்க வறுத்தெடுக்கவும்

அதே போல பொட்டுக்கடலையையும் வறுத்து எடுக்கவும்.

வறுத்த தினை, எள்ளு, வறு கடலை, ஏலக்காய், கிராம்பு

எள்ளு பட படவென பொறியும் வரை வறுத்து எடுத்து தட்டில் வைக்கவும்.
ஏலக்காய், கிராம்பு, மற்றும் பருப்பு வகைகளை இலேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

மிக்சியில் சூடு ஆறிய பின்னர் தனித்தனியாக மைய பொடித்துக்கொள்ளவும்.

மிக்ஸியில் தனித்தனியாக பொடிக்கவும்

பொடித்த அனைத்தையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு கலக்கவும்.



பின்னர் கலந்து வைத்துள்ள பொடியுடன் வெல்லத்தை நசுக்கி சேர்க்கவும்.

பொடியுடன் வெல்லத்தை நசுக்கி சேர்க்கவும்

கைகளால் வெல்லத்தை பொடித்த கலவையுடன் நன்கு கலக்கி விடவும்.
கடைசியாக தேன் சேர்த்து உருண்டைகளாக கைகளினால் உருட்டவும்.

தேன் சேர்க்கவும்

உருண்டைகள் பிடிக்க முடியாமல் உடைந்து போனால் இன்னும் சிறிதளவு தேன் சேர்த்து உருண்டைகளை பிடித்து வைக்கவும்.

உருண்டைகளை பிடித்து வைக்கவும்

சுவையான சத்தான மணமான திணை எள்ளு உருண்டை தயார்!!

காற்று புகா டப்பாவில் மூடி போட்டு பத்திரபடுத்தவும்.

Thinai Ellu Urundai - Foxtail Millet Sesame Balls

ஒரு வாரம் வரை வைத்திருந்து சுவைக்கலாம்.





முயற்சி செய்ய மேலும் சில சமையல் குறிப்புகள்
அமராந்த் பாப்பரை பாயசம்
அமராந்த் பாப்பரை பாயசம்
அமராந்த் கசகசா பாயசம்
அமராந்த் கசகசா பாயசம்
வரகரிசி உப்புமா
வரகரிசி உப்புமா
தினை பொங்கல்
தினை பொங்கல்
தினை கஸ்டர்ட்
தினை கஸ்டர்ட்
கேரட் தினை பாயசம்
கேரட் தினை பாயசம்





Tuesday, December 10, 2013

Thinai Pottukadalai Urundai

#திணைபொட்டுக்கடலைஉருண்டை : சென்ற முறை திணை மாவை மட்டும் கொண்டு இனிப்பு உருண்டை செய்து பார்த்தோம். இந்த முறை அதனுடன் பொட்டுக்கடலையை சேர்த்து செய்து பார்க்கலாம் என முயற்சி செய்தேன். சுவை நன்றாக இருந்தது. எப்படி செய்வது என பார்க்கலாம்.

திணை பொட்டுக்கடலை உருண்டை

தேவையான பொருட்கள் :
1/2 கப்                                    திணை மாவு
1/2 கப்                                    பொட்டுகடலை ( வறு  கடலை )
1/2 கப்                                    எள்ளு
1/2 கப்                                    வெல்லம்
3 Tsp                                        தேன்
2                                               ஏலக்காய்
4                                               கிராம்பு
4                                               பாதாம் பருப்பு
7                                               முந்திரி பருப்பு
5                                               உலர்ந்த அத்தி பழம்
3 Tsp                                         நெய்

செய்முறை :
வாணலியை சூடாக்கி முதலில் பொட்டுக் கடலையை வறுத்துக்கொள்ளவும்.
வறுத்ததை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் எள்ளை பட படவென பொறியும் வரை வறுத்தெடுக்கவும்.
முந்திரி மற்றும் பாதாமையும் தனித்தனியாக வறுத்து தட்டில் எடுத்து வைக்கவும்.


இப்போது வாணலியில் நெய் விட்டு திணை மாவை நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.


நன்கு வறுத்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
மிக்ஸ்யில் பொட்டுக் கடலை, எள்ளு மற்றும் ஏலக்காய் கிராம்பு ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.
அரைத்ததை வறுத்து வைத்துள்ள திணை மாவுடன் சேர்க்கவும்.
வெல்லத்தை நன்றாக பொடித்து சேர்க்கவும்.
அத்தியையும் சிறு சிறு துண்டுகளாக்கி மாவுடன் கலக்கவும்.
பாதாமையும் முந்திரியையும் மிக்ஸ்யில் கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.


எல்லாவற்றையும் ஒன்றாக கையினால் கலக்கவும்.
இப்போது தேனை சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.


சுவையான திணை பொட்டுகடலை உருண்டை தயார்.

திணை பொட்டுக்கடலை உருண்டை

ஒரு மூடியுடன் கூடிய பாத்திரத்தில் வைத்துப்  பத்திரப் படுத்தவும்.
இரண்டு மூன்று நாட்களுக்கு வைத்திருந்து சாப்பிடலாம்.



முயற்சி செய்ய மேலும் சில சமையல் குறிப்புகள்
அமராந்த் பாப்பரை பாயசம்
அமராந்த் பாப்பரை பாயசம்
அமராந்த் கசகசா பாயசம்
அமராந்த் கசகசா பாயசம்
வரகரிசி உப்புமா
வரகரிசி உப்புமா
தினை பொங்கல்
தினை பொங்கல்
தினை கஸ்டர்ட்
தினை கஸ்டர்ட்
கேரட் தினை பாயசம்
கேரட் தினை பாயசம்



Monday, November 18, 2013

Thinai Maavu Urundai

#தினைமாவுஉருண்டை : தேனும் #தினை மாவும் முருகப்பெருமானுக்கு படைக்கும் உணவாம். தினை மாவும் வெல்லமும் கலந்த பொடியை பிரசாதமாக தருவார்கள். எப்போதுமே தினை மாவை வைத்து தோசை செய்கிறோமே , வேறேதாவது செய்யலாம் என யோசித்த போது இந்த பொடி ஞாபகம் வந்தது. மாவு மற்றும் வெல்லத்துடன் உலர்ந்த திராட்சை, அத்தி, முந்திரி சேர்த்து தயாரித்தேன். மிகவும் சுவையாக வந்தது. இப்போது எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

தினைமாவு உருண்டை

தேவையான பொருட்கள் :
தினை மாவு                           : 1 Cup
வெல்லம்                                 : 1/2 Cup
தேன்                                          : 1 1/2 Tbsp
உலர்ந்த திராட்சை               : 5
முந்திரி                                      : 5
உலர்ந்த அத்தி                        ; 3
ஏலக்காய் போடி                    : 1/2 Tsp
நெய்                                            : 3 Tsp

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து 1 Tsp நெய் விட்டு மிதமான தீயில் முந்திரி துண்டுகளை பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
அதே வாணலியில் மேலும் 2 Tsp நெய் விட்டு திணை மாவை நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
அடுப்பை அணைத்து  விடவும்.
உலர்ந்த திராட்சை மற்றும் அத்தியை சிறு சிறு துண்டுகளாக்கி மாவுடன் கலக்கவும்.
வறுத்த முந்திரியையும் சேர்க்கவும்.
வெல்லத்தை பொடித்து சேர்த்து நன்கு கலக்கவும்.
இப்போது ஏலக்காய் பொடியை சேர்த்து தேனை ஊற்றி கையால் அழுத்தி பிசையவும்.
எல்லா பொருட்களும் நன்றாக கலந்த பின் கையால் அழுத்தி உருண்டையாக பிடிக்கவும்.
காற்று புகாத டப்பாவில் வைத்து பாதுகாக்கலாம்.
ஒரு நல்ல சத்து மிகுந்த இனிப்பு உருண்டை.








மற்றும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
தினை மாவு உருண்டை
தினை மாவு உருண்டை
ஸ்ரீ கண்ட்
ஸ்ரீ கண்ட்
ஆளிவிதை உருண்டை
ஆளிவிதை உருண்டை
பயத்தம் பருப்பு உருண்டை
பயத்தம் பருப்பு உருண்டை



தினை தோசை
தினை தோசை
தினை இனிப்பு குழிபணியாரம்
தினை இனிப்பு குழிபணியாரம் 
இன்ஸ்டன்ட் தூத் பேடா
இன்ஸ்டன்ட் தூத் பேடா