Search This Blog

Thursday, March 20, 2014

Thinai Sweet Paniyaram

#தினைஇனிப்புகுழிபணியாரம் : #தினை #சிறுதானியம்  வகைகளுள் ஒன்று.
ஆங்கிலத்தில் Foxtail Millet என்றும் அறிவியல் பெயர் Setaria Italica  என்பதும் ஆகும்.

தினை

இதனை பற்றி மேலும் அறிய கீழே உள்ள இணைப்புகளை காணவும்.
புன்செய் தானியங்கள் 
தினை
இங்கு தினையை கொண்டு இனிப்பு பணியாரம் எவ்வாறு செய்யலாம் என காண்போம்.


தினை இனிப்பு குழி பணியாரம்

தேவையான பொருட்கள் :
1/4 கப்                              தினை
1/4 கப்                              ஓட்ஸ்
1/4 கப்                              அரிசி மாவு
1/4 கப்                              தேங்காய் துருவல்
1/4 கப்                              வெல்லம்
1/4 Tsp                               ஏலக்காய் பொடி
1 சிட்டிகை                    உப்பு
1 சிட்டிகை                    சமையல் சோடா
நெய் மற்றும் நல்லெண்ணெய் பணியாரம் ஊற்றி எடுக்க.

செய்முறை :
வெல்லத்தை பொடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
1/2 கப் தண்ணீர் சேர்த்து சூடாக்கி கரைக்கவும்.
வெல்லம் கரைந்ததும் அடுப்பை நிறுத்தி விட்டு வடிகட்டி தனியே வைக்கவும்.

மிக்சியில் தினையை பொடித்துக்கொள்ளவும்.
சமையல் சோடா நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
வெல்ல கரைசல் சூடு ஆறிய பின் மாவு  கலவையில் ஊற்றி  இட்லி மாவு பதத்திற்கு கரைத்து அரை மணிநேரம் வைக்கவும்.

பின்னர் அடுப்பில் குழி பணியார  கல்லை சூடாக்கவும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் நெய்யையும் எண்ணெயையும் சரி விகிதத்தில் கலந்து வைக்கவும்.
கல் சூடான பின் ஒவ்வொரு குழியிலும் நெய் கலவையை சிறிது ஊற்றி மாவை முக்கால் குழி வரை நிரப்பவும்.
பணியாரத்தின் மேலும் சொட்டு சொட்டாக நெய் எண்ணெய் கலவையை விட்டு வேக வைக்கவும்.
ஓரங்களில் சிவந்து வந்ததும் தேக்கரண்டியால் திருப்பி விடவும்.
இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
தினை இனிப்பு குழி பணியாரம்

அடுத்த முறையும் இதே போல மீதமுள்ள மாவை ஊற்றி சுட்டு எடுக்கவும்.
சுவைத்து மகிழவும்!!



இவைகளையும் முயற்சி செய்து பார்க்கவும்
குதிரைவாலி சக்கரை பொங்கல்
குதிரைவாலி சக்கரை பொங்கல்
வரகரிசி திருவாதிரை களி
வரகரிசி திருவாதிரை களி
தினை மாவு உருண்டை
தினை மாவு உருண்டை




No comments:

Post a Comment