#தேங்காய்பூரணம் : விநாயகர் சதுர்த்தியின் போது சாமிக்கு படைக்க மோதகம் செய்யப்படுகிறது. மோதகம் என்பது மாவின் உள்ளே இனிப்பு பூரணம் அல்லது கார பூரணம் வைத்து கொழுக்கட்டையாக செய்து ஆவியில் வேகவைத்து எடுக்கப்படும் ஒரு பலகாரமாகும்.
இனிப்பு பூரணம் பொதுவாக தேங்காய், வெல்லம் மற்றும் ஏலக்காய் கொண்டு செய்யப்படும். சிலர் மேற்கூறிய பொருட்களுடன் கடலை பருப்பு கொண்டும் செய்வார்கள். நான் அதற்கு முற்றிலும் மாறாக மேலே கூறிய பொருட்களுடன் சோயா உருண்டைகளையும் சேர்த்து பூரணம் செய்துள்ளேன்.
இப்போது தேங்காய் பூரணம் எப்படி செய்வது என காண்போம்.
தேவையான பொருட்கள் :
1/2 கப் தேங்காய் துருவல்
1 Tbsp வேக வைத்த கடலை பருப்பு [ முக்கால் பாகம் வெந்தது ]
1/2 கப் வெல்லம்
3 ஏலக்காய்
சிறிய துண்டு ஜாதிக்காய்
2 Tsp சர்க்கரை
1 சிட்டிகை உப்பு
செய்முறை :
ஏலக்காய் மற்றும் ஜாதிக்காயை சர்க்கரையுடன் சேர்த்து மைய பொடித்து வைத்துக்கொள்ளவும்.
நான் எடுத்துக்கொண்டுள்ள வெல்லம் மிகவும் சுத்தீகரிக்கப் பட்ட வெல்லமாகும். கற்களோ குப்பைகளோ அற்றது. அதனால் அப்படியே உபயோகித்துள்ளேன். அத்தகைய வெல்லம் கிடைக்காவிடின் மிகச் சிறிய அளவு தண்ணீரில் வெல்லத்தை கரைத்து வடிகட்டி கல் மற்றும் தூசிகளை அகற்றி விடவும்.
ஒரு அடிக்கனமான பாத்திரம் அல்லது non stick கடாயை அடுப்பின் மேல் வைத்து சூடாக்கவும்.
முதலில் தேங்காய் துருவல் மற்றும் வெல்லம் சேர்த்து கிண்டவும்.
வெல்லம் தேங்காயிலிருந்து விடும் தண்ணீரால் இளகி வெல்லத்தை கரைக்கும்.
மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
சூடாகி தள தளவென குமிழிகள் வர ஆரம்பித்ததும் தீயை முற்றிலுமாக குறைத்து விடவும்.
இதன் பின்னர் அவ்வப்போது கிளறி விடவும்.
தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை.
சிறுது நேரம் ஆக ஆக தண்ணீர் சுண்டி கெட்டிபடும்.
நன்கு சுருள ஆரம்பிக்கும். ஒன்று சேர்ந்தாற்போல வந்தவுடன் ஏலக்காய் - ஜாதிக்காய் பொடியை சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
ஒரு சுத்தமான ஈரமற்ற மூடியுடன் கூடிய பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
சூடு ஆறிய பிறகு குளிர் சாதன பெட்டியில் 2 அ 3 நாட்களுக்கு பத்திர படுத்தலாம்.
இந்த பூரணத்தை அப்படியே உருண்டைகளாக உருட்டியும் சாப்பிடலாம்.
கொழுக்கட்டை செய்ய பயன் படுத்தலாம்.
போளி செய்தாலும் அருமையாக இருக்கும்.
மேலும் சில உணவு வகைகள் முயற்சி செய்து பார்க்க :

பின்னர் வேகவைத்த கடலை பருப்பை சேர்த்து கிளறவும்.

No comments:
Post a Comment