பர்வல் - Parval |
இதனுள்ளே விதைகள் வெண்டைக்காயினுள் உள்ள விதைகளை போன்ற வடிவத்தில் உள்ளது.
பர்வல் - Parval |
இதனை கொண்டு பெரும்பாலும் கறியும், அதை தவிர சாம்பார், குருமா போன்றவையும் செய்யப்படுகிறது.
இந்த பர்வலை உபயோகித்து கறி செய்யும் முறையினை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள் :
7 - 8 பர்வல், நீளமான மெல்லிய துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்
1 உருளை கிழங்கு, மெல்லிய துண்டுகளாக்கவும்
1 Tsp சாம்பார் பொடி
2 சிட்டிகை மஞ்சள் தூள்
2 Tsp எண்ணெய்
1/2 Tsp கடுகு
1 Tsp உளுத்தம் பருப்பு
செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
கடுகு வெடித்த பின்னர் உளுத்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.
உளுத்தம் பருப்பு சிவந்தவுடன் மஞ்சத்தூள், வெட்டிவைத்த காய்கறிகள் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டிய பின்னர் சாம்பார் பொடி மற்று உப்பு சேர்த்து கலந்து விடவும்.
தண்ணீர் தெளித்து மூடியினால் மூடி வேக விடவும்.
அவ்வப்போது திறந்து கிளறி விடவும்.
வெந்த பிறகு உப்பு சரி பார்த்து தண்ணீர் சுண்டும் வரை அடுப்பில் சிறிய தீயில் வைத்து பிரட்டி விடவும்.
தயாரான பின் ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சுவையான ஒரு கார கறி தயார்.
சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட அருமையான கறி. கார கறியானதால் தயிர் சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.
குறிப்பு :
பர்வலை வட்ட வட்ட வடிவத்தில் மெல்லியதாக வெட்டி இதேபோல கறி செய்யலாம்.
No comments:
Post a Comment