Search This Blog

Tuesday, August 19, 2014

Cabbage Lentil

#முட்டைகோஸ்கூட்டு : முட்டைகோஸ் [#Cabbage ] தாவரத்தின் மேல் நுனியில் கெட்டியான பந்து போன்ற விரியாத இலைகளின் தொகுப்பே முட்டைகோஸ் காயாகும். இதனை காய் என்று சொல்வதை விட இலை என்றே குறிப்பிட வேண்டும்.
இதில் வைட்டமின்கள் மற்றும் உடலுக்கு இன்றியமையாத தாதுக்கள் அடங்கியுள்ளன. முக்கியமாக நார் சத்து மிகுந்து காணப்படுகிறது. இதன் கலோரி அளவு குறைவாக உள்ளதால் உணவு கட்டுப்பாடு அனுசரிப்பவர்களுக்கு ஏற்ற உணவாகும். கொலஸ்ட்ரால் அறவே இல்லாத உணவுபொருளும் ஆகும்.
இதனை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ உணவில் சேர்த்துகொள்ளலாம்.
பச்சையாக இருக்கும் போது கூட்டு செய்தால் மிக மிக ருசியுடனும் வாசனையாகவும் இருக்கும்.
இனி செய்முறையை காணலாம்.

முட்டைகோஸ் கூட்டு

தேவையான பொருட்கள் :
1/2 கப்                                        முட்டைகோஸ், மெல்லியதாக நறுக்கியது
2                                                  பச்சை மிளகாய், நீளமாக கீறவும்
1/2 அங்குல துண்டு             இஞ்சி, துண்டுகளாக்கி நசுக்கவும்
1 Tbsp                                          வெங்காயம் பொடியாக நறுக்கியது
3 Tbsp                                          துவரம் பருப்பு வேக வைத்தது
1/2 Tsp                                          உப்பு

அரைக்க தேவையான பொருட்கள் :
3 Tsp                                             தேங்காய் துருவல்
1/4 Tsp                                          சீரகம்
1/4 Tsp                                          அரிசி மாவு
தாளிக்க :
1/2 Tsp                                        கடுகு
1 1/2 Tsp                                     கடலை பருப்பு
1/2 Tsp                                         எண்ணெய்

கொத்தமல்லி தழை மேலே தூவ தேவையான அளவு.

செய்முறை :
மிக்சியில் அரைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.


குக்கரில் மேலே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் போட்டு 1/2 கப் தண்ணீர் விடவும். மேலும் வேகவைத்த பருப்பு மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு வெயிட் வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.



உடனே ஆவியை வெளியேற்றி விட்டு திறக்கவும்.

அரைத்து வைத்துள்ள தேங்காயைசேர்த்து 
மீண்டும் அடுப்பின் மேல் மிதமான தீயில் மூன்று நிமிடங்கள் அல்லது எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் வரை கொதிக்க விடவும்.


பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகை வெடிக்க விட்டு கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து கூட்டின் மேல் கொட்டவும்.
கொத்தமல்லி தழை மேலே தூவவும்.

முட்டைகோஸ் கூட்டு

சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

சூடான சாதத்தில் போட்டு ஒரு துளி நெய் விட்டு பிசைந்து வெங்காய வத்தல் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் .... ம்ம்ம்.... அதன் ருசியே தனிதான்!!.. ஊறுகாயுடனும் நன்றாக இருக்கும்.




மற்ற கூட்டு வகைகள் முயற்சி செய்து பார்க்க

முருங்கைக்காய் கூட்டு 


2 comments:

  1. நான் பாசி பருப்புடன் கோஸ் கூட்டு செய்வேன். துவரம் பருப்பு சேர்த்து செய்வது எனக்குப் புதிது. செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அவசியம் செய்து பார்க்கவும். பொதுவாக பயத்தம் பருப்பு உபயோகித்துதான் கூட்டு செய்யப்படுவது வழக்கம். ஆனால் நான் சாம்பார், ரசம், கூட்டு ஆகியவற்றுக்கு துவரம் பருப்பை சாதம் வேகவைக்கும் போது ஒன்றாக சேர்த்து வேக வைத்து விடுவேன்.
      கூட்டுக்காக தனியாக பயத்தம் பருப்பை வேக வைக்கும் நேரத்தை மிச்சப்படுத்தத்தான்!!.. இப்போது அதுவே பழகி விட்டது.

      Delete