#வரகரிசிகொத்தமல்லிபொங்கல் [ #KodoMilletCorianderPongal ] : நான் தற்போது வசிக்கும் ராய்ப்பூரில் #கொத்தமல்லி எல்லா காலங்களிலும் மிகவும் பசுமையாக கிடைக்கும். இந்த முறை காய்கறி மார்கெட் சென்ற போது ஒரு மிகப் பெரிய கொத்தமல்லி கட்டு வாங்கி வந்துவிட்டேன். அதனை காய்ந்து போகாமல் உபயோகிக்க வேண்டுமே!!... அதனால் காலையில் #வரகரிசி ( #வரகு ) கொண்டு #பொங்கல் செய்ய முடிவு செய்த போது அதனுடன் கொத்தமல்லியையும் சேர்த்தால் என்ன என்று தோன்றியது. அவ்வாறு புது முயற்சி செய்த போது உருவானதுதான் இந்த கொத்தமல்லி பொங்கல்.
இனி எப்படி என காணலாம்.
தேவையான பொருட்கள் :
3/4 கப் வரகரிசி [ kodo millet ]
1/4 cup பயத்தம் பருப்பு
2 பச்சை மிளகாய், நீளமாக கீறி வைக்கவும்.
1/2 cup கொத்தமல்லி தழை நறுக்கியது
5 cloves பூண்டு, பொடியாக நறுக்கியது
1/4 inch இஞ்சி, நசுக்கி வைக்கவும்.
1 Tsp சீரகம்
1 Tsp மிளகு
1 Tsp உப்பு [ அட்ஜஸ்ட் ]
தாளிக்க :
1/2 Tsp சீரகம்
12 மிளகு
10 கறுவேப்பிலை
1 Tsp நெய்
1 Tsp நல்லெண்ணெய்
மேலே தூவ சிறிது கொத்தமல்லி
செய்முறை :
குக்கரில் வரகரிசியையும் பருப்பையும் எடுத்துக்கொள்ளவும்.
இரு முறை நீர் விட்டு கழுவிக்கொள்ளவும்.
நீரை வடித்து விட்டு 4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
பின்னர் கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களை சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
குக்கரை மூடி வெயிட் வைக்கவும்.
அடுப்பில் அதிக தீயில் 3 விசில் வரும் வரை வேக விடவும்.
பின்னர் தீயை குறைத்து 5 நிமிடங்கள் வேக விடவும்.
ஆவி அடங்கிய பின்னர் திறக்கவும்.
ஆவி அடங்குவதற்குள் மற்றொரு அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
சீரகத்தை வெடிக்க விட்ட பின்னர் மிளகு சேர்த்து பொரிந்தவுடன் கறுவேப்பிலை சேர்க்கவும். கறுவேப்பிலை பட படவென பொரிந்து அடங்கிய பின்னர் பொங்கலின் மேல் கொட்டவும்.
அதே வாணலியில் முந்திரியையும் சிவக்க வறுத்து சேர்க்கவும்.
நன்கு கரண்டியால் கிளறி விடவும்.
உப்பு சரி பார்க்கவும்.தேவையானால் சிறிது சேர்த்து கிளறவும்.
சூடாக இருக்கும் போதே பரிமாறும் தட்டில் இட்டு கொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னி அல்லது பொங்கல் துவையலுடன் சுவைக்கவும்.
முயற்சி செய்ய மேலும் சில சமையல் குறிப்புகள்

No comments:
Post a Comment