#தக்காளிசாம்பார் : இந்த சாம்பாரை எங்கள் இல்லத்தில் தக்காளி சட்னி என்றுதான் குறிப்பிடுவது வழக்கம். பொதுவாக பருப்பு சேர்த்து செய்யப்படுவதை சாம்பார் என்றும் பருப்பு சேர்க்காமல் செய்யப்படுவதை சட்னி என்றும் நாங்கள் குறிப்பிடுவது வழக்கம்.
வெகு நாட்களுக்கு முன்பே தக்காளி சாம்பார் 1 செய்முறையை பதிவேற்றியுள்ளேன். பின் எதற்கு மற்றுமொரு முறை என முணுமுணுப்பது கேட்கிறது!!
இந்த முறை சிறிது நீர்க்க செய்யப்படும் முறையாகும். மேலும் கடைகளில் கிடைக்கும் டப்பிகளில் அடைத்துவைத்துள்ள தக்காளி பழக்கூழ் [ tomato puree tetrapack ] கொண்டு செய்யப்படும் முறையும் ஆகும்.
இனி எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
1 பெரிய அளவு தக்காளி, துண்டுகளாக்கவும்.
1/2 கப் தக்காளி பழக்கூழ் [ tomato puree ]
1 மத்திய அளவு வெங்காயம், நறுக்கி வைக்கவும்.
3 பச்சை மிளகாய், இரண்டாக கீறி வைக்கவும்
1/4 அங்குல துண்டு இஞ்சி, நசுக்கிகொள்ளவும்.
12 கருவேப்பிலை
1/4 கப் கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
1/4 கப் குடை மிளகாய் பொடியாக நறுக்கியது
1 Tbsp முளை கட்டிய பயறு [ இருந்தால் ]
தேவையான பொடிகள் :
2 சிட்டிகை மஞ்சத்தூள்
1/4 Tsp சிகப்பு மிளகாய் தூள் [ விருப்பமானால் ]
1 Tsp குவித்து சாம்பார் மிளகாய் தூள்
1/2 Tsp சோள மாவு
1 1/4 Tsp உப்பு [அட்ஜஸ்ட்]

தாளிக்க :
1/2 Tsp கடுகு
2 Tsp கடலை பருப்பு
1/4 Tsp பெருங்காய தூள்
2 Tsp எண்ணெய்
செய்முறை :
அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
எண்ணெய் சூடேறியதும் கடுகை வெடிக்க விட்டு பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
பின்னர் பெருங்காய தூள் சேர்த்தவுடன் மஞ்சத்தூள், பெருங்காய தூள் மற்றும் சிகப்பு மிளகாய் தூளை சேர்க்கவும்.
உடனேயே கருவேப்பிலை, பாதி கொத்தமல்லி தழை, மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.
அதன் பின் வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வரை வதக்கவும்.
இப்போது குடை மிளகாய் துண்டுகளை 1 நிமிடம் வதக்கவும்.
அதன் பின் பயறை சேர்த்து பிரட்டு பிரட்டி விடவும்.
கடைசியாக சாம்பார் மிளகாய் தூளை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி விடவும்.
இப்போது தக்காளி பழக்கூழை சேர்க்கவும்.
2 முதல் 2 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
தீயை அதிக படுத்தி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்தவுடன் தீயை நன்கு குறைத்து விடவும்.
5 - 7 நிமிடங்கள் அடுப்பில் கொதித்து கொண்டே இருக்கட்டும்.
கடைசியாக சோள 1மாவை 1/8 கப் தண்ணீரில் கலந்து கொதிக்கும் சட்னியில் ஊற்றவும்.
கிண்டி விடவும். உப்பு சரி பார்க்கவும்.
சூப் போன்ற பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு கறுவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தூவவும்.
அருமையான தக்காளி சாம்பார் தயார். வாசனை மூக்கை துளைக்குமே!

இன்னும் ஏன் காத்து கொண்டிருக்கிறீர்கள்!
இட்லியை தட்டிலோ அல்லது கிண்ணத்திலோ வைத்து அதன் மேல் இரண்டு கரண்டி தக்காளி சாம்பார் விடவும். 1 Tsp நல்லெண்ணெய் விட்டு சுவைக்கவும்.

என்ன!! இட்லி தீர்ந்து போய் விட்டதா??!!??
நான் இன்னும் இரண்டு இட்லியை தக்காளி சட்னியுடன் சாப்பிடலாம் என்றிருந்தேனே!! ம்ம்.. ம்...க்கும்..!!
No comments:
Post a Comment