Search This Blog

Monday, August 11, 2014

Puttu

#புட்டு : இது ஒரு இனிப்பு பலகாரமாகும். குழாய் புட்டு கேரளா மற்றும் ஸ்ரீ லங்காவில் மிக மிக பிரபலம். அவர்கள் அரசி மாவு மற்றும் தேங்காய் துருவல் இரண்டையும் ஆவியில் வேக வைத்து கடலை கறி தொட்டுக்கொண்டு சுவைப்பார்கள்.
ஆனால் இந்த புட்டு கேரளாவில் செய்யப்படும் குழாய் புட்டு போலல்லாமல் வேறு வகையில் செய்யப்படும் இனிப்பாகும். ஆனால் அதேபோல அரிசி மாவு மற்றும் தேங்காய் துருவல் கொண்டுதான் செய்யப்படுகிறது. புட்டு செய்யும் முறை இடத்திற்கு இடம் மாறுபடும்.
இங்கு என் அம்மாவிடம் செய்ய கற்றுக்கொண்ட முறையை கூறப்போகிறேன்.

புட்டு

தேவையான பொருட்கள் :
2 கப்                                             அரிசி மாவு [ rice flour ]
1 கப்                                             வெல்லம்
1 1/2 கப்                                       தேங்காய் துருவல்
2 Tsp                                             நெய்
3 Tsp                                             நல்லெண்ணெய்
1/2 Tsp                                          ஏலக்காய் பொடி
1/2 Tsp                                          உப்பு

செய்முறை :
ஒரு வாணலியை  மிதமான தீயில் சூடாக்கவும்.
அரிசி மாவை சற்றே சூடு வரும் வரை வறுக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் இந்த வறுத்த மாவை எடுத்துக்கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் 1/8 கப் தண்ணீரில் உப்பை கரைத்துக்கொள்ளவும்.
இந்த உப்பு தண்ணீரை மாவின் மேல் தெளித்து பிசறி விடவும்.
பிரட் துகள்கள் போல வரும் வரை தண்ணீர் தெளித்து பிசறி விடவும்.
இப்படி பிசறி வைத்துள்ள மாவை உருண்டையாக பிடிக்க முயற்சித்தால் பிடிக்க முடியாமல் உடைந்து போக வேண்டும்.

இதை ஒரு சுத்தமான துணியில் மூட்டை போல கட்டவும்.
இட்லி பானையில் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
மாவு மூட்டையை இட்லி தட்டின் மேல் இட்லி பானையில் வைத்து ஆவியில் 10 முதல் 12 நிமிடங்கள் வேக விடவும்.

இதற்குள் மற்றொரு அடுப்பில் வெல்லத்தை நசுக்கி 1/4 கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
கரண்டியால் கலக்கி கரைய வைக்கவும்.
கரைந்த பின்னர் அடுப்பிலிருந்து நீக்கி வடி கட்டவும்.
வடிகட்டிய வெல்ல தண்ணீரை ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.
அதனுடன் தேங்காயை சேர்க்கவும்.
சாரணியால் கிளறிக்கொண்டே இருக்கவும்.


தண்ணீர் சுண்டி தேங்காயும் வெல்லமும் சேர்ந்தாற்போல வரும்.
கையில் தொட்டு பார்த்தல் பிசுபிசுவென இருக்கும்.


இப்போது அடுப்பை அணைத்து விடவும்.

வெந்த மாவை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொட்டவும்.
2 Tbsp தேங்காய் வெல்ல கலவையை சேர்க்கவும்.
நெய் மற்றும் நல்லெண்ணெயையும்  சேர்க்கவும்.


கரண்டியால் நன்கு கிளறி விடவும்.
அவரவர் சுவைக்கு ஏற்ப தேவையானால் தேங்காய் வெல்ல கலவையை போதுமான அளவு சேர்த்து கிளறவும்.
கடைசியாக ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறவும்.


சூடு ஆறிய பின்னர் மூடியுடன் கூடிய டப்பாவில் எடுத்து வைக்கவும்.
நன்கு சூடு ஆறிய பின்னரே டப்பாவை மூட வேண்டும்.

புட்டு

சுவையான புட்டு தயார்! சுவைத்து மகிழவும்!!

மற்ற குறிப்புகள்
கேழ்வரகு புட்டு 






No comments:

Post a Comment