Search This Blog

Showing posts with label kuthiraivaali. Show all posts
Showing posts with label kuthiraivaali. Show all posts

Saturday, January 31, 2015

Kuthiraivaali-Sakkarai-Pongal

#குதிரைவாலிசக்கரைபொங்கல் : #குதிரைவாலி #சிறுதானியங்கள் வகைகளுள் ஒன்று. அரிசி மற்றும் கோதுமையை ஒப்பிடும் போது குதிரைவாலியில் அதிக நார் சத்து நிரம்பியுள்ளது.
குதிரைவாலியை ஆங்கிலத்தில் Barnyard millet என அழைக்கப்படுகிறது.
இனி குதிரைவாலி சக்கரை பொங்கல் எவ்வாறு செய்யலாம் என காணலாம்.


குதிரைவாலி சக்கரை பொங்கல்


தேவையான பொருட்கள் :
1/2 கப் குதிரைவாலி அரிசி
1/4 கப் பயத்தம் பருப்பு
1/2 கப்பால்
1 சிட்டிகைஉப்பு 
1 கப்வெல்லம் [ adjust ]
4ஏலக்காய்
சிறு துண்டு ஜாதிக்காய்
2 Tspசர்க்கரை
1 சிட்டிகைபச்சை கற்பூரம் [ Edible Camphor ]
4 Tspநெய்
4 - 5முந்திரி பருப்பு
5 - 6பாதாம் பருப்பு
செய்முறை :
சக்கரை பொங்கல் செய்ய துவங்குவதற்கு 5 அ 6 மணி நேரம் முன்பே பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைக்கவும்.
பொங்கல் செய்ய துவங்குவதற்கு முன்பு ஊறிய பாதாம் பருப்பின் தோலை நீக்கி விட்டு சிறு துகள்களாக நறுக்கி தனியே வைக்கவும்.

சக்கரையுடன் ஏலக்காய் மற்றும் ஜாதிக்காயை பொடித்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் குதிரைவாலி அரிசியையும் பருப்பையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் இட்டு கழுவி 2 கப் தண்ணீர் மற்றும்  1/2 கப் பால் சேர்க்கவும்.
ஒரு சிட்டிகை உப்பும் சேர்க்கவும்.
குக்கரில் 1 கப் தண்ணீர் விட்டு குதிரைவாலி-பருப்பு உள்ள பாத்திரத்தை உள்ளே வைக்கவும்.
குக்கரை மூடி வெயிட் பொருத்தி வேக விடவும்.
மூன்று விசில் வந்ததும் தீயை குறைத்து மேலும் 5 நிமிடங்கள் வேக விடவும். 
ஆவி அடங்கிய பின்னர் குக்கரை திறக்கவும்.

அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் விட்டு வெல்லத்தை நசுக்கி போடவும்.
மிதமான தீயில் கரையும் வரை கரண்டியால் கலக்கவும்.
வெல்லம் கரைந்ததும் மாசுக்களை நீக்க வடி கட்டவும்.
தனியே எடுத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை சூடாக்கி நெய்யில் முந்திரியை சிவக்க வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.

ஆவி அடங்கி குக்கரை திறந்ததும் அடுப்பை மறுபடியும் பற்ற வைத்து ஒரு அடி கனமான  பாத்திரத்தை சிறிய தீயின் மேல் வைக்கவும்.
வெந்த அரிசி பருப்பை சேர்த்து கரண்டியால் நன்கு மசித்தவாறு கிளறவும்.
இப்போது வெல்லம் கலந்த தண்ணீரை சேர்க்கவும்.
கை விடாமல் நன்கு கிளறவும்.
ஒன்றாக சேர்ந்து வரும் வரை நன்கு கிளறவும்.
கடைசியாக ஏலக்காய்-ஜாதிக்காய் பொடியையும் நெய்யையும் 
பிறகு ஊறவைத்து நறுக்கி வைத்துள்ள பாதாம் பருப்பு துகள்களையும் சேர்த்து  கிளறவும்.

அடுப்பை அணைத்து விட்டு பச்சை கற்பூரம் நுணுக்கி போட்டு கலந்து விடவும்.
பின்னர் பரிமாறும் பாத்திரத்தில் குதிரைவாலி சக்கரை பொங்கல் எடுத்து வைக்கவும்.
குதிரைவாலி சக்கரை பொங்கல்
குதிரைவாலி சக்கரை பொங்கல் குதிரைவாலி சக்கரை பொங்கல்

கிண்ணத்தில் எடுத்து வைத்து வறுத்த முந்திரியால் அலங்கரித்து நெய் விட்டு சுவைக்கவும்.

குதிரைவாலி சக்கரை பொங்கல்

நெய்யை மேலே விட்டு சூடாக இருக்கும் போதே சுவைத்தால் ருசி அபாரமாக இருக்கும்.




மற்ற சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்ய
தினை பொட்டுக்கடலை உருண்டை
தினை பொட்டுக்கடலை
வரகரிசி திருவாதிரை களி
வரகரிசி திருவாதிரை களி
தினை இனிப்பு குழி பணியாரம்
தினை இனிப்பு குழி பணியாரம்
தினை சக்கரை பொங்கல்
தினை சக்கரை பொங்கல்
அவல் கேசரி
அவல் கேசரி - அவல் இனிப்பு


மற்ற சிறுதானிய சமையல் குறிப்பிற்கு

சிறுதானிய சமையல் வகைகள்





Thursday, April 17, 2014

Kuthiraivaali Upma

#குதிரைவாலிஉப்புமா : குதிரைவாலி #சிறுதானியம் வகைகளுள் ஒன்றாகும். இதன் நார் சத்து அரிசி மற்றும் கோதுமையை விட அதிகமாகும்.
இந்த சிறு தானியத்தில் தையமின் [ Thiamin ] என்று சொல்லப்படுகிற  Vitamin b6 அதிக அளவில் நிறைந்துள்ளது.

குதிரைவாலி அரிசி
Kuthiraivaali - Barnyard Millet - குதிரைவாலி
குதிரைவாலி அரிசி
Kuthiraivaali - Barnyard Millet - குதிரைவாலி

English                                : Barnyard Millet Or Japanese Barnyard Millet
Common Name                  : Sawan Or sanwa Or Samo Or Morio
Marathi & Chhattisgarh       : Bhagar Or Varai
Kannada                             : Oodalu
Oriya                                  : Kira
Punjabi                               : Swank
Telugu                                : Udalu Or Kodi Sama
Scientific Name                   : Echinochloa Frumentacea
Source : Echinochloa , Barnyard Millet 
To know on Millets

இனி இதனை கொண்டு #உப்புமா எவ்வாறு செய்வது என காணலாம்.

குதிரைவாலி உப்புமா


தேவையான பொருட்கள் :
1 கப்                                           குதிரைவாலி
1/8 கப்                                        துவரம் பருப்பு
1                                                  வெங்காயம், பொடியாக நறுக்கவும்
3                                                  பச்சை மிளகாய், நீள வாக்கில் கீறி கொள்ளவும்.
15                                                கறுவேப்பிலை
1/2 அங்குல துண்டு             இஞ்சி, பொடியாக நறுக்கவும்
3/4 Tsp                                         உப்பு [ அட்ஜஸ்ட் ]
2 கப்                                           தண்ணீர்


தாளிக்க :
1 Tsp                                           கடுகு
3 Tsp                                           கடலை பருப்பு
3 Tsp                                           நல்லெண்ணெய்
1/4 Tsp                                        பெருங்காய தூள்

செய்முறை :
குதிரைவாலி, துவரம் பருப்பு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து கழுவி விட்டு தண்ணீரை வடித்து விட்டு தனியே வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
முதலில் கடுகை வெடிக்க விடவும்.
பின்னர் கடலை பருப்பை சேர்த்து வறுக்கவும்.
அதன் பின் பெருங்கயத்தூள், கருவேப்பிலை, மிளகாய் ஆகியவற்றை சேர்த்து சில மணி துளிகள் வதக்கிய பின் வெங்காயத்தையும் இஞ்சியையும்  சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது நிறம் மாறியதும் உப்பு சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து தீயை பெரியதாக்கி கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் கழுவிவைத்துள்ள குதிரைவாலியையும் துவரம் பருப்பையும் சேர்த்து கலந்து விடவும்.
தீயை குறைத்து விட்டு தட்டு போட்டு மூடி வேக விடவும்.
3 நிமிடங்களுக்கு ஒரு முறை கிளறி விடவும்.
வேக சுமார் 10 நிமிடங்கள் எடுக்கும்.

வெந்ததும் ஒரு முறை நன்கு கிளறி மீண்டும் மூடி வைக்கவும்.
அடுப்பை அணைத்து விடவும்.
அடுப்பின் சூட்டில் மேலும் 3 நிமிடங்கள் வைத்திருக்கவும்.

பரிமாறும் தட்டில் வைத்து தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

குதிரைவாலி உப்புமா





குதிரைவாலி உபயோகித்து மற்ற சமையல் குறிப்புகள் :

குதிரைவாலி சுண்டல்
குதிரைவாலி
சுண்டல்
குதிரைவாலி இட்லி
குதிரைவாலி
இட்லி
குதிரைவாலி பொங்கல்
குதிரைவாலி பொங்கல்
குதிரைவாலி கொழுக்கட்டை
குதிரைவாலி கொழுக்கட்டை






Sunday, April 6, 2014

Kuthiraivaali Vazhaipoo Pulav

#குதிரைவாலிவாழைப்பூபுலாவ் : இந்த வாரம் #வாழைப்பூ வாரம். ஏனெனில் சென்னையிலிருந்து மூன்று பூக்கள் வாங்கி வந்துள்ளேன். அதனால் அதனை கொண்டு எல்லா வகையான உணவையும் செய்து சுவைக்க வேண்டியதுதான்!! இங்கு ராய்ப்பூரில் எப்போதாவது வாழைப்பூ கிடைக்கும். ஆனால் வாழைப்பூவிற்கு உண்டான துவர்ப்பின்றி கசப்பாக இருப்பதனால் வாங்குவதில்லை.
சுவைகள் ஆறு வகையாகும். அதில் துவர்ப்பிற்கு ஒரே எடுத்துக்காட்டு வாழைப்பூ ஆகும். துவர்ப்பு சுவை கூடிய உணவையும் தினப்படி எடுத்துக் கொள்வது மிக மிக அவசியம்.
துவட்டல், பொரியல், தயிர் பச்சடி, வடை, ஆவியில் வேக வைத்த உருண்டை ஆகியவற்றை செய்து முடித்து விட்டேன். அதனால் இன்று கொத்தமல்லி தழையுடன் குதிரைவாலி அரிசியில்  புலாவ் செய்து பார்த்தேன். சுவையாகத்தான் இருந்தது.

குதிரைவாலி அரிசியை பற்றி சில குறிப்புகள் :
English                               : Barnyard Millet Or Japanese Barnyard Millet
Common Name                  : Sawan Or sanwa Or Samo Or Morio
Marathi & Chhattisgarh       : Bhagar Or Varai
Kannada                             : Oodalu
Oriya                                  : Kira
Punjabi                               : Swank
Telugu                                : Udalu Or Kodi Sama
Scientific Name                   : Echinochloa Frumentacea
Source : Echinochloa , Bharnyard Millet 
To know on Millets
இனி எப்படி என்று பார்ப்போம்.

குதிரைவாலி வாழைப்பூ புலாவ்


தேவையான பொருட்கள் :


1/2 கப்                                                 குதிரைவாலி அரிசி
1 சிறிய கட்டு                                  கொத்தமல்லி, பொடியாக நறுக்கவும்
20 - 25                                                  வாழை பூக்கள், பொடியாக நறுக்கவும்
1                                                           தக்காளி, பொடியாக நறுக்கவும்
1                                                           வெங்காயம், நீல வாக்கில் நறுக்கவும்
6 - 7                                                      சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கவும்
6 - 7                                                      பூண்டு, பொடியாக நறுக்கவும்
1                                                            பச்சை மிளகாய், இரண்டாக கீரிகொள்ளவும்

1/2 Tsp                                                   சீரகத்தூள்
1/4 Tsp                                                   மிளகாய் தூள்

2                                                            ஏலக்காய்
3                                                            கிராம்பு

1 அங்குல துண்டு                          பட்டை
1                                                            பிரிஞ்சி இலை
1/2 Tsp                                                  சீரகம்
1/2 Tsp                                                  பெருஞ்சீரகம்
3 Tsp                                                     நல்லெண்ணெய்
1 tsp                                                      நெய்

செய்முறை :
குதிரைவாலி அரிசியை கல் நீக்கி கழுவி ஊற வைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து 3 Tsp எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
சூடானதும் சீரகம், பெருஞ்சீரகம், ஏலக்காய், பட்டை கிராம்பு மற்றும் பிரிஞ்சி இல்லை தாளித்து பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
பின்னர் கொத்தமல்லி, பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

இப்போது வெங்காயத்தை சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின்னர் தக்காளியை சேர்க்கவும்.
இப்போது மிளகாய் தூள் மற்றும் சீரக தூள் சேர்த்து வதக்கவும்.

இந்த தருணத்தில் அரிசியிலிருந்து  தண்ணீரை வடித்து விட்டு சேர்க்கவும்.
நெய்யை சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.
குதிரைவாலி அரிசி நல்ல வெள்ளை நிறத்திற்கு மாறியவுடன்
கடைசியாக வாழைப்பூவை நறுக்கி சேர்க்கவும்.

1 கப் தண்ணீர், 3/4 Tsp உப்பு சேர்த்து கலக்கி விடவும்.
மூடி வெயிட் வைத்து 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

பிறகு சிறிய தீயில் 3 நிமிடம் வைத்து அடுப்பை அணைத்து விடவும்.
ஆவி முழுவதுமாக அடங்கிய பின்னர் குக்கரை திறக்கவும்.
சாரணியால் மசித்து விடாமல் மென்மையாக கிளறி விடவும்.

சூடாக தட்டில் பரிமாறி தயிர் பச்சடியுடன் சுவைக்கவும்.
குதிரைவாலி வாழைப்பூ புலாவ்





மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க :
குதிரைவாலி கொத்தமல்லி சாதம் வரகரிசி தக்காளி சாதம் குதிரைவாலி புளியோதரை வாழைப்பூ வடை மோர் குழம்பு வாழைப்பூ விரல்கள்





Friday, April 4, 2014

Kuthiraivaali Pongal

#குதிரைவாலிபொங்கல் : சிறு தானியங்களுள் ஒன்றான #குதிரைவாலிஅரிசி ஆங்கிலத்தில் Barnyard millet என அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் : Echinochloa frumentacea .

English                                : Barnyard Millet Or Japanese Barnyard Millet
Common Name                  : Sawan Or sanwa Or Samo Or Morio
Marathi & Chhattisgarh       : Bhagar Or Varai
Kannada                             : Oodalu
Oriya                                  : Kira
Punjabi                               : Swank
Telugu                                : Udalu Or Kodi Sama
Scientific Name                   : Echinochloa Frumentacea
Source : Echinochloa , Barnyard Millet 
To know on Millets

இதனை கொண்டு பொங்கல் எவ்வாறு செய்வது என காணலாம்.

குதிரைவாலி பொங்கல்


தேவையான பொருட்கள் :
குதிரைவாலி அரிசி                     : 3/4 கப்
பயத்தம் பருப்பு                             : 1/4 Cup
பச்சை மிளகாய்                           : 1 அ 2 ( விருப்பப்பட்டால் )
சீரகம்                                              : 1 1/2 Tsp
மிளகு                                              : 1 Tsp
மிளகுத்தூள்                                   : 1 Tsp
கருவேப்பிலை                               : 10 - 15
பூண்டு பல்                                       : 3
மஞ்சத்தூள்                                     : 3 சிட்டிகை
உப்பு                                                  : 1 Tsp ( அட்ஜஸ்ட் )

தாளிக்க :
சீரகம்                                                          : 1 Tsp
மிளகு                                                         : 1 Tsp
கருவேப்பிலை                                         : 8
முந்திரி பருப்பு                                         : 5
நெய்                                                           : 2 Tsp

செய்முறை :
கழுவி அரித்து வைத்துள்ள குதிரைவாலி அரிசியுடன்  பருப்பையும் நன்றாக கழுவி குக்கரில் எடுத்துக் கொள்ளவும்.


மற்ற பொருட்களையும் சேர்க்கவும்.
3 1/2 கப் தண்ணீர்ஊற்றவும்.


ஒரு கரண்டியினால் கலக்கி விடவும்.
குக்கரை மூடி விசிலை பொருத்தவும்.
அடுப்பில் அதிக தீயில் 3 விசில் வரை வேக விடவும்.
மேலும் 5 நிமிடங்கள் சிறிய தீயில் வேக வைத்து இறக்கவும்.
ஆவி அடங்கியவுடன் மூடியை திறந்து கரண்டியினால் கிண்டவும்.


எண்ணெய்  சட்டியை அடுப்பில் மிதமான தீயில் வைத்து நெய் ஊற்றி முதலில் முந்திரி துண்டுகளை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு சீரகம், மிளகு, பச்சை மிளகாய் துண்டுகள் மற்றும் கருவப்பிலை வறுத்து எடுக்கவும்.

வறுத்த பொருட்களை பொங்கலுடன் சேர்த்து கிண்டவும்.
சூடான சுவையான பொங்கல் தயார்.

குதிரைவாலி பொங்கல்

பரிமாறும் தட்டில் இட்டு அதன் மேல் நெய் விட்டு துவையலுடன் பரிமாறவும்.







குதிரைவாலியை கொண்டு செய்யப்படும் மற்ற சமையல் குறிப்புகள் :

குதிரைவாலி இட்லி
குதிரைவாலி உப்புமா
குதிரைவாலி கொழுக்கட்டை





Monday, February 10, 2014

Kuthiraivaali Venthayam Kanji

#குதிரைவாலிவெந்தயகஞ்சி :
English                                : Barnyard Millet Or Japanese Barnyard Millet
Common Name                  : Sawan Or sanwa Or Samo Or Morio
Marathi & Chhattisgarh       : Bhagar Or Varai
Kannada                             : Oodalu
Oriya                                  : Kira
Punjabi                               : Swank
Telugu                                : Udalu Or Kodi Sama
Scientific Name                   : Echinochloa Frumentacea
Source : Echinochloa , Bharnyard Millet 
To know on Millets
இனி கஞ்சி செய்வதெப்படி என காணலாம்.

குதிரைவாலி வெந்தய கஞ்சி

தேவையான பொருட்கள் :


3/4 கப்                                   குதிரைவாலி
1/4  கப்                                  பச்சை பருப்பு
1/2 Tsp                                    வெந்தயம்
1/4 கப்                                   காரட் துண்டுகள்
1 அ 2                                    பச்சை மிளகாய், இரண்டாக கீறவும்
சிறு துண்டு                       இஞ்சி, பொடியாக நறுக்கவும் ( விரும்பினால் )
சிறிது                                  கொத்தமல்லி தழை, பொடியாக நறுக்கவும்
சிறிது                                   பொதினா, பொடியாக நறுக்கவும்
6                                             கருவேப்பிலை, பொடியாக நறுக்கவும்
4 பற்கள்                               பூண்டு, பொடியாக நறுக்கவும்
1/4 Tsp                                    மஞ்சத்தூள்
3/4 Tsp                                    உப்பு
1/2 கப்                                    பால் ( அ ) தேங்காய் பால்


செய்முறை :
குதிரைவாலி, பருப்பு மற்றும் வெந்தயம் ஆகியவற்றை குக்கெரில் எடுத்துக்கொள்ளவும்.


இரண்டு முறை தண்ணீரில் கழுவி விடவும்.
இப்போது 3 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
பாலை தவிர மற்றவற்றை சேர்க்கவும்.


அடுப்பில் அதிக தீயில் வைத்து மூடி வெயிட்டை பொருத்தவும்.
3 விசில் வந்ததும் மேலும் 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக விடவும்.
ஆவி அடங்கியவுன் மூடியை திறக்கவும்.


கரண்டியினால் நன்கு கிளறி விடவும்.

பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து சிறிது பால் விட்டு ஊறுகாயுடன் அல்லது 

குதிரைவாலி வெந்தய கஞ்சி

சட்னியுடன் சுவைக்கவும்.

குதிரைவாலி வெந்தய கஞ்சி

சூடாக சுவைத்தால் மிக மிக அருமையாக இருக்கும்.

மற்ற கஞ்சி வகைகள் 
கோதுமைரவா கஞ்சி மக்காசோளரவா கஞ்சி வரகரிசி வெந்தயகஞ்சி