#மாங்காய்தேங்காய்சட்னி : #மாங்காய் உபயோகித்து மற்றுமொரு கோடைகால சிறப்பு சட்னி. புளிப்பும் காரமும் கொண்ட சுவையான சட்னி.
எல்லா வகையான சிற்றுண்டிகளுக்கும் ஏற்ற சட்னியும் கூட.
இனி செயல் விளக்கத்தை காண்போம்.
எல்லா வகையான சிற்றுண்டிகளுக்கும் ஏற்ற சட்னியும் கூட.
இனி செயல் விளக்கத்தை காண்போம்.
தேவையான பொருட்கள் : | |
---|---|
1/2 கப் | தேங்காய் துருவல் |
4 - 5 | மாங்காய் துண்டுகள் [ அட்ஜஸ்ட் ] |
3 - 4 | சிகப்பு மிளகாய் |
1/4 கப் | பொட்டு கடலை [ வறு கடலை ] |
1 பல் | பூண்டு |
1/2 Tsp | உப்பு [ அட்ஜஸ்ட் ] |
1/2 Tsp | எண்ணெய் |
தாளிக்க : | |
1/2 Tsp | கடுகு |
8 - 10 | கறுவேப்பிலை |
1/2 Tsp | எண்ணெய் |
செய்முறை :
அடுப்பில் வாணலியை சூடாக்கி அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிளகாயை மட்டும் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
வறுத்த மிளகாயுடன் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு தேவையான நீர் விட்டு அரைத்து எடுக்கவும்.
ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு கறுவேப்பிலை தாளித்து சட்னியின் மேல் கொட்டவும்.
நாவை சப்புக்கொட்ட வைக்கும் அருமையான சட்னி!!
மற்ற சட்னி வகைகள் சில
|
|
|
||||||
|
|
No comments:
Post a Comment