#வெங்காயகறி : மற்ற காய்கறிகளுடன் #வெங்காயம் சேர்த்து தொட்டுக்கொள்ள கறி செய்வது வழக்கம். வெங்காயம் மட்டுமே உபயோகித்து கறி செய்தால் எப்படி இருக்கும்?!!
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் எனது தாயார் பூரி செய்தால் மதிய உணவிற்கு டப்பாவில் எடுத்து செல்ல இந்த வெங்காய கறியை செய்து கொடுப்பார்கள். பூரி மசாலா எடுத்து சென்றால் பூரி மசாலாவில் ஊறி நசநசவென ஆகி விடும். அதனால் வெங்காய கறியை செய்து பூரியினுள் வைத்து சுருட்டி பூரி ரோல் வைத்து டப்பாவில் அடைத்து கொடுப்பார்கள். மிகவும் சுவையாக இருக்கும். சப்பாத்தியுடனும் வெங்காய கறி ரோல் செய்யலாம். ஆனால் வெங்காய கறி பூரி ரோல் மிகவும் சுவை மிகுந்த காம்பினேஷன் ஆகும்.
முதலில் வெங்காய கறியை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
அடுத்து பூரி மற்றும் சப்பாத்தி ரோல் செய்வது எப்படி என்றும் பார்ப்போம்.

தேவையான பொருட்கள் : | |
---|---|
4 or 5 | வெங்காயம், மெல்லிய நீள துண்டுகளாக நறுக்கவும் |
4 or 5 | கறுவேப்பிலை |
1/4 Tsp | மஞ்சத்தூள் |
1 Tsp | சாம்பார் பொடி |
3/4 Tsp | உப்பு |
தாளிக்க : | |
3 Tsp | எண்ணெய் |
1/2 Tsp | கடுகு |
1 Tsp | உளுத்தம் பருப்பு |
விருப்பட்டால் : | |
1/2 cup | வெந்தய கீரை |
செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் முதலில் கடுகு போட்டு வெடித்த பின்னர் உளுத்தம் பருப்பை சேர்க்கவும்.
பருப்பு பொன்னிறமானதும் வெங்காயம், சாம்பார் பொடி, மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
அவ்வப்போது கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
நன்கு வதங்கி பச்சை வாசனை போன பின் வெங்காயம் பளபளப்பாக வரும் வரை அடுப்பில் குறைந்த தீயில் வைத்திருக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
வெந்தய கீரை வெங்காய கறி :
வெந்தய கீரை எடுத்திருந்தால் கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
வெந்தய கீரையை கடைசியாக வெங்காய கறியை அடுப்பிலிருந்து இறக்கும் தருவாயில் சேர்க்கவும்.
ஒரு நிமிடம் கறியுடன் சேர்த்து வதக்கினால் போதுமானது.
அடுப்பை அணைத்து விட்டு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
பூரி தயாரித்த பின்னர் கையினால் அமுக்கி தட்டையாக்கி ஒரு தட்டில் வைக்கவும்.
அதன் மீது தயாரித்து வைத்துள்ள வெங்காய கறியை பரப்பவும்.
நன்கு இறுக்கமாக சுருட்டிய பின்னர் டிஷ்யு பேப்பரில் சுற்றி டப்பாவில் அடுக்கவும்.
இதே போல சப்பாத்தியின் மீது வைத்து இறுக்கமாக சுருட்டினால் சப்பாத்தி ரோல் தயார்.
மற்ற சில சமையல் செய்முறைகள் :
|
|
|
||||||
|
|
No comments:
Post a Comment