Search This Blog

Wednesday, June 10, 2015

Pesarattu-with-sprouted-Moth-beans

#பெசரட்டு முளை கட்டிய சிறு பயறு கொண்டு செய்யப்பட்டது [ #சிறுபயறுபெசரட்டு ] : பயறு வகைகளில் மிக அதிக அளவில் புரத சத்து நிறைந்துள்ளது. அதனை முளை கட்டும் போது புரதம் மேலும் அதிகரிக்கிறது.
முளை கட்டிய சிறு பயறுடன் அமராந்தம் மாவையும் பாப்பரை மாவையும் சேர்த்து பெசரட்டு தயாரித்தேன். அமராந்தமும் பாப்பரையும் புரத சத்து மிகுந்த உணவாகும். மொத்தத்தில் இந்த பெசரட்டை புரத பெசரட்டு என்றே அழைக்கலாம்.
முளைகட்டிய பயறு இருந்தால் அரைத்து உடனே தயாரிக்கக் கூடிய டிபன் ஆகும். மிகவும் குறுகிய நேரத்தில் தயாரித்து விடலாம்.
இனி தேவையான பொருட்களையும் செய்முறையையும் காண்போம்.
மூன்று அல்லது நான்கு பெசரட்டு தயாரிக்கலாம்.

பெசரட்டு முளை கட்டிய சிறு பயறு கொண்டு செய்யப்பட்டது


தேவையான பொருட்கள் :
1/2 cupசிறு பயறு முளைகட்டியது
1 Tbspஅமராந்தம் மாவு
1 Tspபாப்பரை [ Buckwheat ] மாவு
1 Tspஅரிசி மாவு
1/2 Tspஉப்பு
1/2 Tspசீரகம்
1 வெங்காயம், பொடியாக நறுக்கவும்.
3 Tbspகொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
8 - 10கறுவேப்பிலை
எண்ணெய் பெசரட்டு சுட்டெடுக்க

செய்முறை :
மிக்ஸியில் முளைகட்டிய பயறு, ஒரு சிறு துண்டு இஞ்சி [ விரும்பினால் ], சீரகம், கறுவேப்பிலை, உப்பு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
கொடுக்கப்பட்டுள்ள மற்ற மாவு வகைகளையும் சேர்த்து கலக்கவும்.
அடுப்பில் தோசை கல்லை சூடாக்கி எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை கல்லின் நடுவே வைத்து மெல்லிய வட்ட வடிவமாக பரப்பவும்.
அதன் மீது நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை தூவி எண்ணெய் சொட்டு சொட்டாக பெசரட்டின் மேலும் சுற்றியும் விடவும்.
ஒரு மூடியினால் மூடி வேக விடவும்.
ஓரங்கள் சிவந்த பின்னர் திருப்பி போட்டு வேக விடவும்.
இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன் தட்டில் எடுத்து வைக்கவும்.
இதே போல அடுத்தடுத்து பெசரட்டு சுட்டெடுக்கவும்.

சூடான சுவையான பெசரட்டை தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
பெசரட்டு முளை கட்டிய சிறு பயறு கொண்டு செய்யப்பட்டது பெசரட்டு முளை கட்டிய சிறு பயறு கொண்டு செய்யப்பட்டது
பெசரட்டு முளை கட்டிய சிறு பயறு கொண்டு செய்யப்பட்டது






முயற்சி செய்து பார்க்க பிற சமையல் குறிப்புகள் :
பெசரட்டு
பெசரட்டு
தினை தோசை
தினை தோசை
ரவா தோசை
ரவா தோசை
கேழ்வரகு தோசை
கேழ்வரகு தோசை
கம்பு தோசை
கம்பு தோசை

பல விதவிதமான சமையல் செய்முறைகள்


No comments:

Post a Comment