Search This Blog

Tuesday, October 6, 2015

Appam-Kerala-Style-2

#ஆப்பம்கேரளாஸ்டைல் 2 : சென்ற பதிவில் கேரளாவில் ஆப்பம் எவ்வாறு செய்யப்படுகிறது என்பதனை பார்த்தோம். இதே கேரளா ஸ்டைல் ஆப்பம் 1 -ஐ  மற்றொரு முறையிலும் செய்யலாம். இந்த செய்முறை கிட்டத்தட்ட கர்நாடகத்தில் செய்யப்படும் நீர்தோசை போன்றது. ஆனாலும் இந்த முறையில் செய்ய ப்படும் ஆப்பத்தின் சுவை தனித்துவமானது.
இப்போது செய்முறை மற்றும் தேவையான பொருட்களை பார்ப்போம்.

ஆப்பம் [ ஆப்பம் கேரளா ஸ்டைல் 2 ]


தேவையான பொருட்கள் :
1 1/2 கப்பச்சரிசி
1/2 கப்தேங்காய் துருவல்
1 Tspஉப்பு
1 Tspசர்க்கரை
1 சிட்டிகைசமையல் சோடா

ஆப்பம் சுட்டெடுக்க சிறிது எண்ணெய்

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை போட்டு நன்கு கழுவி தண்ணீர் விட்டு 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிய பின்னர் மாவரைக்கும் இயந்திரத்தில் ஊறவைத்த அரிசி மற்றும் தேங்காய் துருவல்  ஆகியவற்றை தண்ணீர் விட்டு நன்கு மைய அரைத்து  எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

3/4 கப் முதல் 1 கப் வரை தண்ணீர் விட்டு மாவரைக்கும் இயந்திரத்தில் ஒட்டிக்கொண்டுள்ள மாவை கழுவி மற்றொரு அகலமான பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
அடுப்பை பற்ற வைத்து இந்த மாவு கழுவிய தண்ணீர் உள்ள பாத்திரத்தை சிறிய தீயில் சூடாக்கவும்.
தொடர்ந்து கை விடாமல் கலக்கிக் கொண்டே இருக்கவும்.
மாவு கலந்த தண்ணீர் சற்று நேரத்தில் கஞ்சி பதத்தை அடைந்து பளபளப்பாக மாறும்.
இப்போது அடுப்பை அணைத்து விட்டு ஆற விடவும்.
தயாரித்த கஞ்சியின் மேல் ஆடை படியாமல் இருக்க அவ்வப்போது கரண்டியால் கலக்கி விடவும்.

ஆறிய கஞ்சியை அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்க்கவும்.

உப்பு மற்றும் சர்க்கரையையும் சேர்த்து கலந்து 6 முதல் 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
அல்லது முதல் நாள் மாலை மாவு அரைத்து இரவு முழுவதும் புளிக்க விட்டு மறுநாள் காலை ஆப்பம் தயாரிக்கலாம்.

ஆப்ப சட்டியை அடுப்பில் மிதமான தீயில் சூடாக்கவும்.
ஒரு தேக்கரண்டி தண்ணீரில் சமையல் சோடாவை கலக்கி ஆப்ப மாவில் ஊற்றி நன்கு கலக்கவும்.
ஆப்ப சட்டி சூடானதும் ஒரு சுத்தமான துணியை எண்ணெயில் நனைத்து ஆப்ப சட்டியில் தடவும்.
ஆப்ப சட்டி சூடானதும் நடுவில் மாவை ஊற்றி ஆப சட்டியில் கைப்பிடியை துணியினால் பிடித்து கொண்டு சுழற்றி மாவை பரப்பவும்.
ஆப்ப மாவு ஆப்ப சட்டியின் சூட்டில் நன்கு ஒட்டிக்கொள்ளும்.
அடுப்பின் மீது வைத்து ஓரிரு துளிகள் எண்ணெயை ஆப்பத்தின் ஓரத்தில் சொட்டு சொட்டாக விடவும்.
 அடுத்து மூடியினால் மூடவும்.
ஓரிரு நிமிடங்களில் மூடியை திறந்து பார்த்தால் ஆப்பம் வெந்து ஓரங்கள் இலேசாக சிவக்க ஆரம்பித்து இருக்கும்.
கத்தியின் நுனி கொண்டோ அல்லது தோசை திருப்பியினாலோ ஆப்ப சட்டியிலிருந்து எடுத்து தட்டில் வைக்கவும்.
இதே போல எண்ணெய் தடவி ஒவ்வொன்றாக சுட்டெடுக்கவும்.



making porridge

Appam maavu [ Appam batter ]


Appam Chatty [ Appam making kadai ]

Appam Appam
பூண்டு மிளகாய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
தக்காளி சட்னி மற்றும் பூண்டு தக்காளி  சட்னியுடனும் நன்றாக இருக்கும்.

ஆப்பம் [ ஆப்பம் கேரளா ஸ்டைல் 2 ]


குறிப்பு :
மாவு நீர்க்க இருக்க வேண்டும். அப்போதுதான் ஆப்பம் மெல்லியதாக வரும்.
தேவையானால் தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.




மற்ற ஆப்ப வகைகளின் சமையல் குறிப்புகள் :
ஆப்ப மாவு
ஆப்ப மாவு
ஆப்பம் சுடும் முறை
ஆப்பம் சுடும் முறை
சோள ஆப்பம்
சோள ஆப்பம்
ஆப்பம் கேரளா ஸ்டைல் 1
ஆப்பம் கேரளா .. 2

ஆப்பத்துடன் தொட்டுக்கொண்டு சுவைக்க

தொட்டுக்க


No comments:

Post a Comment