Search This Blog

Sunday, March 16, 2014

Appam Batter

#ஆப்பம்மாவு : #ஆப்பம் என்பது தோசை வகையை சேர்ந்ததாகும். ஆனால் மிகவும் மிருதுவானது.
கேரளாவில் செய்யப்படும் ஆப்பம் பச்சரிசி, தேங்காய் இரண்டையும் அரைத்து,  புளிக்க வைத்து சோடா உப்பு சேர்த்து ஆப்ப கடாயில் ஊற்றி சுட்டெடுக்கப் படுகிறது.
ஆனால் எங்கள் வீட்டில் என் பாட்டி காலத்திலிருந்து வெந்தயம் சேர்த்து அரைத்து  செய்வார்கள். ஆப்பம் செய்வதற்கு அரிசி, உளுந்து மட்டுமல்லாமல் வெந்தயமும் அதிக விகிதத்தில் பிரத்யேகமாக சேர்க்கப்படுகிறது. வெந்தயம் சேர்க்கப்படுவதால் ஆப்பம் கல்லில் சுட்டு எடுக்கும் போது மிக மிக மிருதுவாக இருக்கும்.
 வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கொடியது. மேலும் தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் நிறைந்தது. தலை முடி வளர்ச்சிக்கும் வயிற்று உபாதைகளுக்கும் வெந்தயம் ஒரு சிறந்த மருந்தாக செயல் படுகிறது.
வெந்தயம் கசப்புத்தன்மை கொண்டது. அதனால் அதிக அளவில் உணவாக எடுத்துக் கொள்வது சிரமம். ஆனால் ஆப்ப மாவில் சிறிது அதிகமாக சேர்க்கப்பட்டாலும் கசப்பு தெரியவே தெரியாது. வெந்தயத்தை நமது உணவில் சேர்த்துக் கொள்ள இது ஒரு எளிய வழியாகும்.
பொதுவாக அனைவரும் ஆப்பம் மிருதுவாக வருவதற்காக சோடா சேர்த்து ஊற்றுவார்கள்.
ஆனால்  அக்காலத்தில் புளிப்பிற்காகவும் மிருதுத் தன்மைக்காகவும் காடி தெருக்களில் காலை நேரத்தில் விற்பார்கள். அதனை ஊற்றுவதற்கு முன் மாவில் சேர்த்து பின்னர் உபயோகப் படுத்துவது வழக்கம்.
நான் வெந்தயத்தின் ஊட்டச் சத்தை மேலும் அதிகப் படுத்துவதற்காக முளை கட்டி பிறகு மாவு  அரைப்பது வழக்கம்.
இனி எப்படி ஆப்பதிற்கான மாவை தயாரிப்பது என காணலாம்.

தேவையான பொருட்கள் :
1 3/4 கப்                                      புழுங்கரிசி [ இட்லி அரிசி ]
1 3/4 கப்                                      பச்சரிசி
1 Tbsp குவித்து                        வெந்தயம்
1 Tbsp குவித்து                        உளுத்தம் பருப்பு
1 Tbsp குவித்து                        துவரம் பருப்பு
4 Tsp                                            உப்பு


செய்முறை :
மாவு அரைப்பதற்கு முதல் நாள் மாலை அல்லது இரவே வெந்தயத்தை கழுவி ஒரு கிண்ணத்தில் ஊற வைக்கவும்.
அரைக்கும் நாள் காலையில் ஊறிய தண்ணீரை வேறொரு சிறிய கிண்ணத்தில் வடித்தெடுத்து விடவும். ஊறிய  தண்ணீரை கீழே கொட்டி விட வேண்டாம். அரைக்கும் போது சேர்த்து விடலாம்.
இப்போது ஊறிய வெந்தயத்தை முளைக்கட்டுவத ற்காக ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும்.
அரைக்கும் நாள் காலை இரு அரிசியையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாக  எடுத்து கழுவி ஊற வைக்கவும். இதனையும் மூடி போட்டு தனியே ஒரு ஆறு மணி நேரம் வைக்கவும்.
மாலையில் அரைப்பதற்கு முன் ஒரு பாத்திரத்தில் உளுத்தம் பருப்பையும் துவரம் பருப்பையும் ஒன்றாக கழுவி ஊற வைக்கவும்.

ஊறவைத்த வெந்தயம் முளை கட்டிய வெந்தயம்

ஊறவைத்த பிறகு கிரைண்டரை கழுவி முதலில் அரிசியை நன்கு மைய அரைக்கவும். வழிப்பதற்கு முன் 4 Tsp உப்பு சேர்த்து விடவும்.

அரிசி அரைத்தெடுத்த பிறகு முளை கட்டிய வெந்தயம் மற்றும் மற்ற இரண்டு பருப்பையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும். ஊறவைத்த தண்ணீரையும் அரைக்கும் போது சேர்க்கவும்.
அவ்வப்போது தண்ணீர் தெளித்து நன்கு பந்து போல உப்பி வரும் வரை அரைத்து எடுக்கவும்.



கிரைண்டரில் ஒட்டியுள்ள மாவையும் 1/2 கப் தண்ணீர் விட்டு கழுவி மாவுடன் சேர்க்கவும்.
நன்கு கையினால் அரிசி மாவையும் வெந்தய பருப்பு மாவையும் கலக்கி எட்டு மணி நேரம் புளிக்க  வைக்கவும்.
மறுநாள் காலை மாவு நன்கு பொங்கி மேலே எழும்பி வந்திருக்கும்.


அடுப்பில் ஆப்ப சட்டி அல்லது தோசைக்கல் கொண்டு ஆப்பம் தயாரிக்கலாம்.




மேலும் சில சமையல் குறிப்புகள்

ஆப்பம் சுடும் முறை
ஆப்பம் சுடும்
முறை
சோள ஆப்பம்
சோள [sorghum ]
ஆப்பம்
ஆப்பம் கேரளா ஸ்டைல் 1
ஆப்பம்கேரளா ஸ்டைல் 1
ஆப்பம் கேரளா ஸ்டைல் 2
ஆப்பம்கேரளா ஸ்டைல் 2
ஆப்பத்துடன் தொட்டுக்கொண்டு சுவைக்க

தொட்டுக்க

No comments:

Post a Comment