Search This Blog

Showing posts with label koottu. Show all posts
Showing posts with label koottu. Show all posts

Saturday, November 7, 2020

கூட்டு_வகைகள் - Lentil

 கூட்டு வகைகள் : வேகவைத்த பருப்புடன் காய்கறிகள் அல்லது கீரை மற்றும் சாம்பார் தூள் சேர்த்து வேகவைத்த பின்னர் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க வைத்து எடுக்கப்படும் மிதமான காரத்துடன் கூடிய ஒரு உணவு பதார்த்தம் ஆகும்.

மதிய உணவின் போது சாம்பார் அல்லது ரசம் சேர்த்து பிசைந்த சாதத்துடன் தொட்டுக்கொண்டு சுவைக்க அருமையாக இருக்கும்.

சூடான சாதத்தின் மீது கூட்டை போட்டு பிசைந்து சாம்பார் அல்லது காரக்கறி அல்லது ஊறுகாயுடன் சுவைக்கலாம்.


கூட்டு வகைகள்
சுரைக்காய் கூட்டு
சுரைக்காய் கூட்டு
வாழைப்பூமுருங்கைக்கீரைகூட்டு
வாழைப்பூ முருங்கைக் கீரைகூட்டு
முருங்கைக்காய்பலாகொட்டைகொத்தமல்லிகூட்டு
மு காய் ப கொட்டை கொ மல்லிகூட்டு
தக்காளி காய் கூட்டு
தக்காளி காய் கூட்டு
சிறுகீரை கூட்டு
சிறுகீரை கூட்டு
முட்டைகோஸ் கூட்டு
முட்டைகோஸ் கூட்டு
புளில்லாகறி [ காய்கறி கொத்தமல்லி கூட்டு ]
புளில்லாகறி 1
முருங்கைக்காய் கத்தரிக்காய் கூட்டு
முருங்கைக்காய் கத்தரிக்காய் கூட்டு
புளில்லாகறி [ கொத்தமல்லி கூட்டு ]
புளில்லாகறி [ கொத்தமல்லி கூட்டு ]
வெந்தயக்கீரை கூட்டு
வெந்தயக்கீரை கூட்டு


பல வகையான சமையல் செய்முறைகள்

Saturday, May 21, 2016

Venthayakeerai-koottu

#வெந்தயக்கீரைகூட்டு : #வெந்தயக்கீரை மற்ற #கீரை களை போல பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இரும்பு சத்து அதிக அளவில் கொண்டுள்ளது. வயிற்றுப் புண்ணை ஆற்றும் சக்தி உடையது. சிறிது கசப்பு தன்மை கொண்டது. அதனால் பருப்பு மற்றும் தேங்காய் சேர்த்து கூட்டு செய்யும் போது கசப்பு சிறிது மட்டுப் படும். பயத்தம் பருப்பு அல்லது துவரம் பருப்பை வேக வைத்து தனியே வைக்கவும். கீரையை நன்கு கழுவி தண்ணீரை வடித்து விட்டு, சாம்பார் பொடி , மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். வேக வைத்த கீரையுடன் பருப்பு மற்றும் தேங்காய் அரைத்து விட்டு கொதிக்க விட்டு எடுத்தால் கூட்டு தயார்.

வெந்தயக்கீரை கூட்டு

தேவையான பொருட்கள் :
1 கப்வெந்தயகீரை நறுக்கியது
1/3 கப்பயத்தம் பருப்பு
3/4 Tspசாம்பார் பொடி 
1 pinchமஞ்சத்தூள்
1/2 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
அரைக்க :
4 Tspதேங்காய் துறுவல்
4 or 5மிளகு
1/4 Tspஅரிசி மாவு
To Temper :
1/2 Tspவெங்காய வடவம்
1/2 Tspநல்லெண்ணெய்

செய்முறை :
பருப்பு வேக வைத்து தனியே எடுத்து வைக்கவும்.
கீரையை கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்த பின்னர் கத்தியால் பொடியாக நறுக்கி வைக்கவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து எடுத்து தனியே வைக்கவும்.
ஒரு பாத்திரத்தை அல்லது வாணலியை அடுப்பில் வைத்து 1/2 கப் தண்ணீர் விட்டு மிதமான தீயின் மீது சூடாக்கவும்.
அதில் சாம்பார் பொடி, உப்பு மற்றும் மஞ்சத்தூள் சேர்க்கவும்.

ஒரு கரண்டியால் கலக்கிய பின்னர் அரிந்து வைத்துள்ள கீரையை சேர்க்கவும்.
கீரையின் மேல் வேக வைத்த பருப்பையும் சேர்த்து ஒரு மூடி போட்டு  2 நிமிடங்கள் வேக விடவும்.
வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து கலந்து விடவும்.
உப்பு சரிபார்த்து மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
வாணலியை அடுப்பின் மீது வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி  வெங்காய வடவம் தாளித்து கூட்டின் மீது கொட்டவும்.
கூட்டின் சுவையும் வெங்காய வடவத்தின் மணமும் சாப்பிடத் தூண்டும்.
சூடான சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாம்பாரில் உள்ள காயுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
வெந்தயக்கீரை கூட்டு




மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து சுவைக்க
  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
சிறுகீரை கூட்டு வாழைப்பூ முருங்கைகீரை கூட்டு பசலை கீரை பூரி
நூடுல்ஸ் தக்காளி சட்னியுடன் சிகப்பு கீரை சப்பாத்தி






இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.



Wednesday, December 17, 2014

Kothamalli-Koottu - Pulillacurry

#கொத்தமல்லிகூட்டு  #புளில்லாகறி : இந்த கூட்டு எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மிக மிக பிடித்தமான உணவு ஆகும். விடுமுறையின் போது எங்களுடைய பாட்டி வீட்டிற்கு சென்றால் இரவு உணவின் போது புளில்லாகறியும் சூடான சாதமும் அதற்கு தொட்டுக்கொள்ள வெங்காய வத்தலும் [ வற்றலும் ] வறுத்து கொடுப்பார்கள். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை யாரும் வேண்டாம் என்றே சொல்ல மாட்டார்கள். அருமையான மேலும் சத்தான உணவாகும்.
என் அம்மாவும் அடிக்கடி செய்வார்கள். என்னுடைய மகளுக்கும் மிகவும் பிடித்தமான உணவு ஆகும். கொத்தமல்லி பச்சையாக கிடைக்கும் போதெல்லாம் இந்த கூட்டு கட்டாயம் தினமும் எங்களுடைய சமையல் பட்டியலில் இடம் பெற்று விடும்.
புளி இல்லாமல் பயத்தம் பருப்பு மற்றும் தேங்காய் கொண்டு செய்யப்படுவதால் புளில்லாகறி அதாவது புளியில்லாத கறி என்று அழைக்கப்படுகிறது.
புளில்லாகறியை கொத்தமல்லி தழை மட்டுமே கொண்டும் செய்யலாம்.
அல்லது கத்தரிக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பலாகொட்டை, பீர்கங்காய் ஆகியவற்றுள் ஒன்று மட்டுமோ அல்லது இரண்டு மூன்று காய்கறிகளுடனும்  கொத்தமல்லி தழை சேர்த்து செய்யலாம். ஆனால் எடுத்துக்கொள்ளும் காய்கறியின் அளவு கொத்தமல்லி தழையின் அளவை காட்டிலும் குறைவாக இருப்பின் சுவை அருமையாக இருக்கும்.
இனி செய்முறையை காண்போம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவு கொண்டு மூன்று பேருக்குத் தேவையான புளில்லாகறி தயாரிக்கலாம்.

கொத்தமல்லிகூட்டு [ புளில்லாகறி ]

தேவையான பொருட்கள் :
Coriander Leaves

கொத்தமல்லி தழை                    : 1/2 cup
வெங்காயம் சிறிய அளவு         : 1
பூண்டு                                                :  2 பற்கள்
பயத்தம் பருப்பு                              : 1/3 cup
மஞ்சத்தூள்                                     : ஒரு சிட்டிகை
சாம்பார் மிளகாய்த்தூள்        : 1/2 Tsp
உப்பு                                                    : 3/4 Tsp [ அட்ஜஸ்ட் ]

 அரைப்பதற்கு :
தேங்காய் துருவல்                       : 3 Tsp
சீரகம்                                                  : 1/4 Tsp
அரிசி மாவு                                       : 1/4 Tsp
மிளகு                                                  : 4 or 5 [ optional ]

தாளிப்பதற்கு :
வெங்காய வடவம்                        : 1/4 Tsp
எண்ணெய்                                        : 1/2 Tsp

செய்முறை :
வெங்காயம் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கவும்.

கொத்தமல்லியை நன்கு கழுவி அதையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து எடுத்து தனியே வைக்கவும்

பருப்பை கழுவி குக்கரில் எடுத்துகொள்ளவும்.
மஞ்சத்தூள் ஒரு சிட்டிகை மற்றும் தண்ணீர் 1 கப் சேர்த்து  வேக வைக்கவும்.
1 விசில் வந்த பிறகு தீயை குறைத்து 5 நிமிடங்கள் வேக விடவும்.
ஆவி அடங்கிய பிறகு குக்கரை திறக்கவும்.



மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும். அதில் மஞ்சத்தூள், சாம்பார் மிளகாய்த்தூள் நறுக்கிய வெங்காயம், பூண்டை சேர்க்கவும்.
வெங்காயம் முக்கால் பாகம் வெந்ததும் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி மற்றும் வேக வைத்த பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து மிதமான தீயில் 3 முதல் 5 நிமிடங்கள் அல்லது ஒன்று சேர்ந்தார் போல வரும் வரை கொதிக்க வைக்கவும்.


தயாரான கூட்டை பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி வெங்காய வடவம் தாளித்து சேர்க்கவும்.

கொத்தமல்லிகூட்டு [ புளில்லாகறி ]


சூடான சுவையான கொத்தமல்லி கூட்டு - புளில்லாகறி தயார்.
சூடான சாதத்தில் ஊற்றி பிசைந்து வெங்காய வற்றல் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.


செய்துதான் பாருங்களேன்!!

மற்ற கொத்தமல்லி கூட்டு வகைகள் :

காய்கறி கொத்தமல்லி கூட்டு [ காய்கறி புளில்லாகறி ]


Saturday, December 6, 2014

Murungaikai Katharikkai Koottu

#முருங்கைக்காய்கத்தரிக்காய்கூட்டு : சில காய்கறிகளை மற்றொரு குறிப்பிட்ட காயுடன் சேர்த்து கூட்டு செய்யும் போது சுவையும் மனமும் மிகவும் அலாதியாக இருக்கும். அதில் முருங்கைக்காய் கத்தரிக்காய் இணை ஒரு அருமையான ஒன்றாகும். இந்த காய்களுடன் பலாக்கொட்டையும் சேர்த்தால் இன்னும் அருமையாக இருக்கும்.
இனி செய்முறையை காண்போம்.

முருங்கைக்காய் கத்தரிக்காய் கூட்டு


தேவையான பொருட்கள் :
1                                                   : முருங்கைக்காய், துண்டுகளாக வெட்டவும்.
1 சிறியது                                  :  கத்தரிக்காய், சிறு துண்டுகளாக்கவும்.
1 சிறியது                                 : பெரிய வெங்காயம்
3 பற்கள்                                    : பூண்டு, பொடியாக நறுக்கவும்.
1/4 கப்                                         : கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
1 சிட்டிகை                               : மஞ்சத்தூள்
3/4 Tsp                                          : சாம்பார் பொடி
3/4 Tsp                                          : உப்பு
2 Tbsp                                           : வேக வைத்த பச்சை பருப்பு

அரைக்க :
3 Tsp                                            : தேங்காய் துருவல்
1/4 Tsp                                         : சீரகம்
1/4 Tsp                                         : அரிசி மாவு

தாளிக்க :
1/2 Tsp                                        : வெங்காய வடவம்
1/2 Tsp                                        : எண்ணெய்

செய்முறை :
மிக்சியில் அரைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 3/4 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
அதில் சாம்பார் பொடி, மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் தீயை சிறியதாக்கி வெட்டி வைத்துள்ள காய்கறிகளை போட்டு மூடி போட்டு வேக விடவும்.
காய்கறிகள் வெந்தவுடன் வேகவைத்த பருப்பு, கொத்தமல்லி தழை மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து கலக்கி விடவும்.
மிதமான தீயில் 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
அடுப்பில் எண்ணெய் விட்டு வாணலியை சூடாக்கவும்.
வெங்காய வடவம் தாளித்து கூட்டின் மேல் கொட்டவும்.
முருங்கைக்காய் கத்தரிக்காய் கூட்டு

சூடான சாதத்தில் கூட்டை ஊற்றி பிசைந்து சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

முருங்கைக்காய் கத்தரிக்காய் கூட்டு




மற்ற கூட்டு வகைகள் :

முருங்கைக்காய் பலாகொட்டை கொத்தமல்லி கூட்டு

Sunday, November 30, 2014

Vegetable-Coriander-Kootttu - Pulilllacurry

#காய்கறிகொத்தமல்லிகூட்டு [ #VegetableCorianderLentil  ] : இந்த கூட்டை சிலர் #பொரித்தகுழம்பு என்றும், சிலர் #புளில்லாகறி என்றும் கூறுவார்கள். சில காய்கறிகள்தான் இந்த கூட்டு செய்வதற்கு உகந்ததாகும். அவையாதெனில், கத்தரிக்காய், பீர்கங்காய், முருங்கைக்காய், அவரைக்காய், மற்றும் பலாக்கொட்டை. இவற்றில் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்தும் அல்லது எவையெல்லாம் வீட்டில் இருக்கிறதோ அவற்றை கொண்டு கூட்டு செய்யலாம்.
இனி செய்முறையை காண்போம்.
ஒன்று முதல் 1 1/2 கப் கூட்டு செய்யலாம்.
இரண்டு முதல் மூன்று பேர் சாப்பிட சரியாக இருக்கும்.

புளில்லாகறி [ காய்கறி கொத்தமல்லி கூட்டு ]

தேவையான பொருட்கள் :
கத்தரிக்காய்                                          : 1 சிறியது, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
முருங்கைக்காய்                                  : 1/2, 1 அங்குல துண்டுகளாக்கவும்.
பீர்கங்காய்                                               : 1/2, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
அவரைக்காய்                                         : 6, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
கொத்தமல்லி தழை                            1/4 கப் பொடியாக நறுக்கியது
வெங்காயம்                                             : 1 சிறியது, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
பூண்டு                                                         : 2 பற்கள், பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
பயத்தம் பருப்பு                                       : 1/4 கப்
மஞ்சத்தூள்                                              : 1 சிட்டிகை
சாம்பார் தூள்                                           : 3/4 Tsp

கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது

அரைப்பதற்கு :
தேங்காய் துருவியது                            : 3 Tsp
சீரகம்                                                            : 1/4 Tsp
மிளகு                                                            : 3 அ 4 [ விரும்பினால் ]
அரிசிமாவு                                                   : 1/4 Tsp

தாளிக்க :
வெங்காய வடவம்                                  சிறிது
எண்ணெய்                                                  : 1/2 Tsp

செய்முறை :
பயத்தம் பருப்பை கழுவி 1/2 கப் தண்ணீர் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சத்தூள் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
அதாவது அதிக தீயில் 1 விசில் வந்தவுடன் தீயை குறைத்து 3 நிமிடங்கள் வேக விடவும்.
ஆவி அடங்கிய பிறகு ஒரு கிண்ணத்தில் எடுத்து தனியே வைக்கவும்.

அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் விட்டு, சாம்பார் தூள், மஞ்சத்தூள், உப்பு, வெங்காயம், பூண்டு மற்றும் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து வேக விடவும்.


வெந்தவுடன் வேகவைத்த பருப்பு, கொத்தமல்லி மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் 3 முதல் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

மிகுந்த நேரம் கொதிக்க தேவையில்லை. ஒன்று சேர்ந்தாற் போல வந்தால் போதும்.

கீழே இறக்கி வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி வெங்காய வடவம் தாளித்து கூட்டின் மேல் சேர்க்கவும்.
சுவையும் மணமும் நிறைந்த புளில்லாகறி தயார்.

புளில்லாகறி [ காய்கறி கொத்தமல்லி கூட்டு ]

சூடான சாதத்தின் மேல் ஊற்றி சிறிது நெய் சேர்த்து பிசைந்து பொரித்த வெங்காய வற்றல் உடன் சுவைத்தால் ஆஹா! ஆஹஅஹா!!... அபாரமாக இருக்கும். செய்து சுவைத்து பார்க்கவும்.



Tuesday, August 19, 2014

Cabbage Lentil

#முட்டைகோஸ்கூட்டு : முட்டைகோஸ் [#Cabbage ] தாவரத்தின் மேல் நுனியில் கெட்டியான பந்து போன்ற விரியாத இலைகளின் தொகுப்பே முட்டைகோஸ் காயாகும். இதனை காய் என்று சொல்வதை விட இலை என்றே குறிப்பிட வேண்டும்.
இதில் வைட்டமின்கள் மற்றும் உடலுக்கு இன்றியமையாத தாதுக்கள் அடங்கியுள்ளன. முக்கியமாக நார் சத்து மிகுந்து காணப்படுகிறது. இதன் கலோரி அளவு குறைவாக உள்ளதால் உணவு கட்டுப்பாடு அனுசரிப்பவர்களுக்கு ஏற்ற உணவாகும். கொலஸ்ட்ரால் அறவே இல்லாத உணவுபொருளும் ஆகும்.
இதனை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ உணவில் சேர்த்துகொள்ளலாம்.
பச்சையாக இருக்கும் போது கூட்டு செய்தால் மிக மிக ருசியுடனும் வாசனையாகவும் இருக்கும்.
இனி செய்முறையை காணலாம்.

முட்டைகோஸ் கூட்டு

தேவையான பொருட்கள் :
1/2 கப்                                        முட்டைகோஸ், மெல்லியதாக நறுக்கியது
2                                                  பச்சை மிளகாய், நீளமாக கீறவும்
1/2 அங்குல துண்டு             இஞ்சி, துண்டுகளாக்கி நசுக்கவும்
1 Tbsp                                          வெங்காயம் பொடியாக நறுக்கியது
3 Tbsp                                          துவரம் பருப்பு வேக வைத்தது
1/2 Tsp                                          உப்பு

அரைக்க தேவையான பொருட்கள் :
3 Tsp                                             தேங்காய் துருவல்
1/4 Tsp                                          சீரகம்
1/4 Tsp                                          அரிசி மாவு
தாளிக்க :
1/2 Tsp                                        கடுகு
1 1/2 Tsp                                     கடலை பருப்பு
1/2 Tsp                                         எண்ணெய்

கொத்தமல்லி தழை மேலே தூவ தேவையான அளவு.

செய்முறை :
மிக்சியில் அரைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.


குக்கரில் மேலே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் போட்டு 1/2 கப் தண்ணீர் விடவும். மேலும் வேகவைத்த பருப்பு மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு வெயிட் வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.



உடனே ஆவியை வெளியேற்றி விட்டு திறக்கவும்.

அரைத்து வைத்துள்ள தேங்காயைசேர்த்து 
மீண்டும் அடுப்பின் மேல் மிதமான தீயில் மூன்று நிமிடங்கள் அல்லது எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் வரை கொதிக்க விடவும்.


பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகை வெடிக்க விட்டு கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து கூட்டின் மேல் கொட்டவும்.
கொத்தமல்லி தழை மேலே தூவவும்.

முட்டைகோஸ் கூட்டு

சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

சூடான சாதத்தில் போட்டு ஒரு துளி நெய் விட்டு பிசைந்து வெங்காய வத்தல் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் .... ம்ம்ம்.... அதன் ருசியே தனிதான்!!.. ஊறுகாயுடனும் நன்றாக இருக்கும்.




மற்ற கூட்டு வகைகள் முயற்சி செய்து பார்க்க

முருங்கைக்காய் கூட்டு