#வெந்தயக்கீரைகூட்டு : #வெந்தயக்கீரை மற்ற #கீரை களை போல பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இரும்பு சத்து அதிக அளவில் கொண்டுள்ளது. வயிற்றுப் புண்ணை ஆற்றும் சக்தி உடையது. சிறிது கசப்பு தன்மை கொண்டது. அதனால் பருப்பு மற்றும் தேங்காய் சேர்த்து கூட்டு செய்யும் போது கசப்பு சிறிது மட்டுப் படும். பயத்தம் பருப்பு அல்லது துவரம் பருப்பை வேக வைத்து தனியே வைக்கவும். கீரையை நன்கு கழுவி தண்ணீரை வடித்து விட்டு, சாம்பார் பொடி , மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். வேக வைத்த கீரையுடன் பருப்பு மற்றும் தேங்காய் அரைத்து விட்டு கொதிக்க விட்டு எடுத்தால் கூட்டு தயார்.
செய்முறை :
பருப்பு வேக வைத்து தனியே எடுத்து வைக்கவும்.
கீரையை கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்த பின்னர் கத்தியால் பொடியாக நறுக்கி வைக்கவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து எடுத்து தனியே வைக்கவும்.
ஒரு பாத்திரத்தை அல்லது வாணலியை அடுப்பில் வைத்து 1/2 கப் தண்ணீர் விட்டு மிதமான தீயின் மீது சூடாக்கவும்.
அதில் சாம்பார் பொடி, உப்பு மற்றும் மஞ்சத்தூள் சேர்க்கவும்.
ஒரு கரண்டியால் கலக்கிய பின்னர் அரிந்து வைத்துள்ள கீரையை சேர்க்கவும்.
கீரையின் மேல் வேக வைத்த பருப்பையும் சேர்த்து ஒரு மூடி போட்டு 2 நிமிடங்கள் வேக விடவும்.
வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து கலந்து விடவும்.
உப்பு சரிபார்த்து மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
வாணலியை அடுப்பின் மீது வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி வெங்காய வடவம் தாளித்து கூட்டின் மீது கொட்டவும்.
கூட்டின் சுவையும் வெங்காய வடவத்தின் மணமும் சாப்பிடத் தூண்டும்.
சூடான சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாம்பாரில் உள்ள காயுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து சுவைக்க
இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.
மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.
தேவையான பொருட்கள் : | |
---|---|
1 கப் | வெந்தயகீரை நறுக்கியது |
1/3 கப் | பயத்தம் பருப்பு |
3/4 Tsp | சாம்பார் பொடி |
1 pinch | மஞ்சத்தூள் |
1/2 Tsp | உப்பு [ அட்ஜஸ்ட் ] |
அரைக்க : | |
4 Tsp | தேங்காய் துறுவல் |
4 or 5 | மிளகு |
1/4 Tsp | அரிசி மாவு |
To Temper : | |
1/2 Tsp | வெங்காய வடவம் |
1/2 Tsp | நல்லெண்ணெய் |
செய்முறை :
பருப்பு வேக வைத்து தனியே எடுத்து வைக்கவும்.
கீரையை கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்த பின்னர் கத்தியால் பொடியாக நறுக்கி வைக்கவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து எடுத்து தனியே வைக்கவும்.
ஒரு பாத்திரத்தை அல்லது வாணலியை அடுப்பில் வைத்து 1/2 கப் தண்ணீர் விட்டு மிதமான தீயின் மீது சூடாக்கவும்.
அதில் சாம்பார் பொடி, உப்பு மற்றும் மஞ்சத்தூள் சேர்க்கவும்.
ஒரு கரண்டியால் கலக்கிய பின்னர் அரிந்து வைத்துள்ள கீரையை சேர்க்கவும்.
கீரையின் மேல் வேக வைத்த பருப்பையும் சேர்த்து ஒரு மூடி போட்டு 2 நிமிடங்கள் வேக விடவும்.
வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து கலந்து விடவும்.
உப்பு சரிபார்த்து மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
வாணலியை அடுப்பின் மீது வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி வெங்காய வடவம் தாளித்து கூட்டின் மீது கொட்டவும்.
கூட்டின் சுவையும் வெங்காய வடவத்தின் மணமும் சாப்பிடத் தூண்டும்.
சூடான சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாம்பாரில் உள்ள காயுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து சுவைக்க
- படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
- படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.
மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.
No comments:
Post a Comment